உள்ளே இருந்தது இவரா! கார் கண்ணாடி கீழே இறங்கியதும் ஸ்டண் ஆன போலீஸ்காரர்! அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்டே

இந்தியா கண்ட தலைசிறந்த கிரிக்கெட் கேப்டன்களில் ஒருவர் எம்எஸ் டோனி (MS Dhoni). இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட, ஐபிஎல் (IPL) தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக டோனி தொடர்ந்து விளையாடி வருகிறார்.

எனவே கிரிக்கெட் பயிற்சியை அவர் இன்னும் முழுமையாக கைவிடவில்லை. ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் உள்ள ராஞ்சி (Ranchi) நகரம்தான், டோனியின் சொந்த ஊர். எனவே ராஞ்சி நகரில் உள்ள ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில் (Jharkhand State Cricket Association Stadium - JSCAS) டோனி அவ்வப்போது பயிற்சி எடுத்து வருகிறார்.

MS Dhoni Stops To Click Picture

இதன்படி கிரிக்கெட் பயிற்சிக்காக டோனி சமீபத்தில் ராஞ்சி மைதானத்திற்கு காரில் சென்றார். அப்போது மைதானத்திற்கு வெளியே பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவருடன் டோனி புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவலருக்கு இது நிச்சயம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். இது டோனியின் எளிமையான குணத்தை காட்டுவதாக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் சிலாகித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். காரை நிறுத்தியதுடன் மட்டுமல்லாது, போக்குவரத்து காவலருடன் டோனி புகைப்படம் எடுத்து கொண்டது பெரிய விஷயம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

MS Dhoni Spotted Driving Kia EV6

வாகன காதலரான டோனியிடம் ஏராளமான கார்கள் மற்றும் பைக்குகள் உள்ளன. தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் கார் ஓரளவிற்கு மட்டுமே தெரிவதால், அவர் ஓட்டி வந்தது என்ன கார்? என்பதை சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால் விதிமுறைப்படி டோனி சீட் பெல்ட் அணிந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

இதற்கிடையே சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் மற்றொரு வீடியோவில், கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரை டோனி ஓட்டி கொண்டு செல்வதை நம்மால் காண முடிகிறது. இந்த செய்தியின் கடைசியில் அந்த வீடியோவை நீங்கள் காணலாம்.

கியா இவி6 எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருப்பது, 77.4 kWh லித்தியம் அயான் பேட்டரி ஆகும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 708 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) 60.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 65.95 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுடன், கியா இவி6 போட்டியிட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டின் இறுதியிலேயே கியா இவி6 எலெக்ட்ரிக் காரை டோனி வாங்கி விட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டோனி பொது வெளிகளில் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி வருவது இது முதல் முறையல்ல. சொகுசு மற்றும் அரிய கார்கள் முதல் பைக்குகள் வரை பலதரப்பட்ட வாகனங்களை டோனி சர்வ சாதாரணமாக பொது வெளிகளில் ஓட்டி வந்துள்ளார். நமது சென்னை சாலைகளில் கூட டோனியை நம்மால் பலமுறை பார்க்க முடிந்துள்ளது. இது வாகனங்கள் மீதான அவரது காதலை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, August 7, 2023, 17:50 [IST]
English summary
Ms dhoni spotted driving kia ev6 electric car video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+