டோனி ஓட்டி வந்த காரின் உண்மையான விலை இத்தன கோடியா! எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே மயக்கம் போட்டு விழுந்துருவாரு!

இந்தியா கண்ட தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் (Cricket Players) ஒருவர் எம்எஸ் டோனி (MS Dhoni). இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் டோனி, ஐசிசி (ICC) தொடர்களில் கோப்பைகளை வேட்டையாடியவர். இதன் மூலம் பல கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தவர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட, ஐபிஎல் (IPL) தொடரில் எம்எஸ் டோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். இவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி தொடர்ந்து அமர்க்களப்படுத்தி கொண்டுள்ளது. எம்எஸ் டோனி கிரிக்கெட்டிற்கு நிகராக வாகனங்களையும் (Vehicles) அதிகமாக நேசிக்க கூடியவர்.

MS Dhoni With Custom Jawa 42 Bobber

எம்எஸ் டோனியின் கார், பைக் கலெக்ஸன் (Car, Bike Collection) மிகப்பெரியது. எம்எஸ் டோனியின் வாகன கலெக்ஸனில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63) காருக்கும் குறிப்பிடத்தக்க ஒரு இடம் உண்டு. இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று ஆகும்.

இந்த காரை எம்எஸ் டோனி ஓட்டும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், எம்எஸ் டோனியின் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரில் '0007' என்ற பதிவு எண்ணை நம்மால் பார்க்க முடிகிறது. இது டோனிக்கு பிடித்தமான எண்களில் ஒன்றாகும்.

MS Dhoni Spotted Driving Mercedes-AMG G63

கிரிக்கெட் போட்டிகளில், '7' என்ற எண் கொண்ட ஜெர்சியை அணிந்துதான் எம்எஸ் டோனி விளையாடி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எம்எஸ் டோனியின் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரின் எக்ஸ் ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 3.30 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆன் ரோடு விலை (On-Road Price) 3.50 கோடி ரூபாய்க்கும் மேல் வரும்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரில் மிகவும் சக்தி வாய்ந்த 4.0 லிட்டர் bi-turbo வி8 பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 585 பிஹெச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலம் காரின் நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறன் இந்த காருக்கு உண்டு. அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 220 கிலோ மீட்டர் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரானது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. எம்எஸ் டோனி மட்டுமல்லாது, ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் (Shreyas Iyer) ஆகியோரிடமும் கூட, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 கார் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 29, 2023, 13:00 [IST]
English summary
Ms dhoni spotted driving mercedes amg g63 worth rs 3 50 crore viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+