3 கோடி ரூபாய் காரில் ஏறியதும் டோனி செய்த காரியம்! வீடியோவை பாத்ததும் அவர் மேல மரியாதை இன்னும் அதிகமாயிருச்சு!
இந்தியா கண்ட தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் எம்எஸ் டோனி (MS Dhoni). இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஐபிஎல் (IPL) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக எம்எஸ் டோனி தொடர்ந்து விளையாடி வருகிறார்.
எனவே இன்னமும் எம்எஸ் டோனியை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் பின் தொடர்கிறது. இதன் காரணமாக டோனி எதை செய்தாலும், அது செய்தியாகி விடுகிறது. இந்த வரிசையில் டோனி தற்போது செய்துள்ள ஒரு காரியமும், செய்தியாக மாறியுள்ளது. இதுகுறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று பரவி வருகிறது. இது மும்பை விமான நிலையத்தில் (Mumbai Airport) எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். விமான நிலையத்தில் இருந்து டோனி வெளியே வந்து டோனி ஒரு காரில் ஏறி செல்வதை நம்மால் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
காரில் ஏறியவுடன் டோனி செய்த காரியம்தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரில் ஏறிய உடனேயே டோனி சீட் பெல்ட் (Seat Belt) அணிவதை இந்த வீடியோவில் நம்மால் மிகவும் தெளிவாக பார்க்க முடிகிறது. இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஆகும். அத்துடன் இது மற்றவர்களும் பின் தொடர வேண்டிய விஷயங்களில் ஒன்று.

இந்தியாவில் காரில் பயணம் செய்யும் பலர் சீட் பெல்ட் அணிவதில்லை. இதன் காரணமாக திடீர் விபத்துக்கள் நிகழும்போது, படுகாயங்களோ அல்லது உயிரிழப்புகளோ நிகழ்கின்றன. இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க வேண்டுமென்றால், காரில் பயணம் செய்யும் அனைவரும் முறையாக சீட் பெல்ட் அணிவது அவசியம்.
எனவே டோனி செய்த காரியத்தை நாம் ஒரு முன்னுதாரணமாக எடுத்து கொள்ளலாம். சரி, மும்பை விமான நிலையத்தில் இருந்து டோனி ஏறி சென்ற காருக்கு வருவோம். அது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS) கார் ஆகும். தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) இந்த கார் கிடைக்கிறது.
அவை 400டி 4மேட்டிக் (400d 4MATIC) மற்றும் மேபேக் 600 4மேட்டிக் (Maybach 600 4MATIC) ஆகியவை ஆகும். இதில் 400டி 4மேட்டிக் வேரியண்ட்டில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் (Diesel Engine)பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை (Price) 1.31 கோடி ரூபாய் ஆகும்.
மறுபக்கம் மேபேக் 600 4மேட்டிக் வேரியண்ட்டில், 4.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) பொருத்தப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் விலை 2.96 கோடி ரூபாய் ஆகும். நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை இன்னும் பல லட்சங்கள் கூடுதலாக வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில் எந்த வேரியண்ட்டில் டோனி பயணம் செய்தார்? என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. வீடியோவில் ஓரளவிற்கு மட்டும் தெரியும் காரின் பகுதிகளை வைத்து கொண்டு, வேரியண்ட்டை கண்டறிவது கடினம். ஆனால் டோனி செய்த செயல் பாராட்டுக்குரியது. மற்றும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமானது.


Click it and Unblock the Notifications








