சாதாரண செக்யூரிட்டிக்கு பைக்ல லிஃப்ட் குடுத்தது இவ்ளோ பெரிய ஆளா! என்ன மனுஷன்யா! எல்லாரயும் நெகிழ வெச்சுட்டாரு!
இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் அனைவருக்கும் நன்கு பரிட்சயமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருப்பவர் எம்எஸ் டோனி (MS Dhoni). இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் தற்போதைய கேப்டனுமான டோனி, எப்போதும் 'கூல்' ஆக இருக்க கூடியவர்.
இதன் காரணமாகவே 'கேப்டன் கூல்' என டோனி அழைக்கப்படுகிறார். கிரிக்கெட் தவிர கார்கள் (Cars) மற்றும் பைக்குகளையும் (Bikes) உயிருக்கு உயிராக நேசிக்க கூடியவராக டோனி அறியப்படுகிறார். இந்த வாகனங்களை எல்லாம் நிறுத்தி வைப்பதற்காக தனது பண்ணை வீட்டில் (Farm House), பிரம்மாண்டமான கராஜ் (Garage) ஒன்றை டோனி அமைத்துள்ளார்.

இந்த பண்ணை வீடு மிகப்பெரியது. எவ்வளவு பெரியது என்றால், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வருவது சிரமம். அந்த அளவிற்கு டோனியின் பண்ணை வீடு பெரியதாக இருக்கிறது. இந்த பண்ணை வீட்டின் மெயின் கட்டிடத்தில் இருந்து, மெயின் கேட்டிற்கு வர வேண்டும் என்றால் நீண்ட நேரம் ஆகும்.
எனவே டோனி தனது பாதுகாவலருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி கொண்டுள்ளது. இந்த வீடியோவில் யமஹா ஆர்டி350 (Yamaha RD350) பைக்கை ஓட்டி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு பல உலக கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் போல் பகட்டாக அல்லாமல், டோனி மிகவும் சாதாரணமாக காணப்படுகிறார். அவரது பைக்கின் பின்னால் பாதுகாவலர் அமர்ந்து வந்துள்ளார். மெயின் கட்டிடத்தில் இருந்து மெயின் கேட்டிற்கு வர நீண்ட நேரம் ஆகும் என்பதால், டோனி பாதுகாவலரை பைக்கில் அழைந்து வந்து விட்டுள்ளார்.
டோனியின் பண்ணை வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த ரசிகர் ஒருவரால் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. டோனியின் பண்ணை வீடு சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே மெயின் கேட்டிற்கு டோனி பாதுகாவலரை பைக்கில் அழைத்து வந்து விட்டுள்ளார்.
டோனி ஓட்டி வந்த யமஹா ஆர்டி350 பைக், அவரது பைக் கலெக்ஸனில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த பைக்கிற்கு டோனியின் மனதில் தனி இடம் உண்டு. எனவே யமஹா ஆர்டி350 பைக்கை டோனி அடிக்கடி ஓட்டுவார். இது தொடர்பான நிறைய வீடியோக்கள் இணையத்தில் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
யமஹா ஆர்டி350 பைக்கில், 350 சிசி ட்வின் சிலிண்டர் 2 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. லோ டார்க் வேரியண்ட்டின் சுமார் 28 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய வகையிலும், ஹை டார்க் வேரியண்ட்டில் சுமார் 31 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய வகையிலும் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாதுகாவலர் நடந்து செல்ல கூடாது என்பதற்காக டோனி பைக்கில் அழைத்து வந்து அவரை விட்டு சென்ற சம்பவம் உண்மையிலேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் டோனியின் இந்த நடத்தையை மனதார பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








