பைக் ஓட்டும்போது டோனி செய்த காரியம்! ஐபிஎல் தோல்விய மறக்க வெச்சுட்டாரு! இதுனாலதான் இந்த மனுஷனை கொண்டாடறாங்க!
ஐபிஎல் (IPL - Indian Premier League) கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்று முதல் (மே 21ம் தேதி), பிளேஆஃப் (Playoffs) சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. ஆனால் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK - Chennai Super Kings) அணி இம்முறை பிளேஆஃப் வாய்ப்பை தவற விட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB - Royal Challengers Bengaluru) அணியுடனான லீக் போட்டியில் நூலிழையில் பிளேஆஃப் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் தவற விட்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர். இது முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனியின் (MS Dhoni) கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்பதுதான் இதற்கு காரணம். ஆனால் எம்.எஸ். டோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. அந்த விஷயம் தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.

டோனி இனி ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என ரசிகர்கள் கவலையுடன் இருக்கும் நிலையில், டோனியோ தனக்கு உரிய பாணியில் கூலான விஷயம் ஒன்றை செய்துள்ளார். டோனி கிரிக்கெட்டை போல் பைக்குகளையும் அதிகம் நேசிக்க கூடியவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
அவரது பைக் கலெக்ஸன் (Bike Collection) மிகப்பெரியது. ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய கையோடு நேராக தனது சொந்த ஊரான ராஞ்சி (Ranchi) நகருக்கு டோனி சென்றுள்ளார். அங்கு அவர் பைக் ஓட்டும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில், டோனி ஹெல்மெட் போட்டு கொண்டு பைக் ஓட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இது வரவேற்க வேண்டிய ஒரு விஷயம் ஆகும். டோனி போன்ற பிரபலங்கள் எதை செய்தாலும் ரசிகர்கள் அப்படியே பின்பற்றுவார்கள். எனவேதான் இதை வரவேற்க வேண்டிய விஷயம் என கூறுகிறோம். டூவீலர் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை இது அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. டோனியை போன்று நடிகர் அஜீத் குமாரும் (Ajith Kumar) கூட, பைக் ஓட்டும்போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த வைரல் வீடியோவில் டோனி ஓட்டியது, யமஹா ஆர்டி350 (Yamaha RD350) பைக் போல் தெரிகிறது. அனேகமாக இது யமஹா ஆர்டி350 பைக்கின் ஹெச்டி (HT) வேரியண்ட்டாக இருக்கலாம். இந்த பைக்கை டோனி மாடிஃபிகேஷன் (Modification) செய்து பயன்படுத்தி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறியுள்ள நிலையில், டோனி பைக் ஓட்டும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இனி நாம் அடிக்கடி பார்க்கலாம். அதேபோல் டோனி விவசாய பணிகளில் ஈடுபடுவதை நாம் பார்ப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
கிரிக்கெட் மற்றும் பைக் ரைடிங் போன்று டோனி விவசாயத்திலும் அதிக ஆர்வம் உடையவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவை பொறுத்தவரையில், டோனி ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக் ஓட்டியிருப்பது ஒரு முன் மாதிரியான விஷயம் என்பது எங்களுடைய கருத்து. இது போன்ற நல்ல செயல்கள் மூலமாக ஐபிஎல் தோல்வியையே டோனி மறக்க வைத்து விட்டதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








