விலையுயர்ந்த பைக்கில் சுற்றி திரிந்த நம்ம 'தல' தோனி... இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா...?

விலையுயர்ந்த பைக்கில் நம்ம தல தோனி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த பைக்கை இந்தியாவில் இவர் மட்டுமே வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விலையுயர்ந்த பைக்கில் சுற்றி திரிந்த நம்ம 'தல' தோனி... இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா...?

தமிழர்களால் செல்லமாக 'தல' என்று அழைக்கப்படும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய முன்னணி வீரர்களில் ஒருவருமான மகேந்திர சிங் தோனி விலையுயர்ந்த பைக் ஒன்றில் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

தோனி, கிரிக்கெட் மீது மட்டுமின்றி விலையுயர்ந்த ஆடம்பர ரக கார்கள் மற்றும் பைக்குகள் மீது ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார்.

விலையுயர்ந்த பைக்கில் சுற்றி திரிந்த நம்ம 'தல' தோனி... இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா...?

அதனை உறுதிப்படுத்தும் வகையில், அவரின் கராஜில் பல்வேறு சொகுசு கார்களின் அணிவகுப்பு காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இந்தியாவில் விற்பனையாகும் விலையுயர்ந்த கார்களான ஹம்மர் எச்2 மற்றும் ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் உள்ளிட்டவற்றை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

விலையுயர்ந்த பைக்கில் சுற்றி திரிந்த நம்ம 'தல' தோனி... இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா...?

இதேபோன்று, பிரிமியம் ரகத்திலான அதீத திறன் கொண்ட பைக்குகளும் அவரிடத்தில் உள்ளன. அந்தவகையில், அவர் வைத்துள்ள உயர் ரக பைக்குகளில் ஒன்றான கவாஸாகி எச்2 பைக்கைதான் தோனி தற்போது இயக்கிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த பைக்கில் அவர் செல்வதுபோன்ற காட்சி வெளியாகுவது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து தற்போது வைரலாகும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

2015ம் ஆண்டிற்கு பின்னரே தல தோனி இந்த பைக்கை வாங்கியதாக கூறப்படுகின்றது. அதேசமயம், இவர் வாங்கிய சில வாரங்களுக்கு பின்னர்தான் இந்தியாவில் அந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 29 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டும்தான். ஆன்ரோடில் வாங்கினால், அது கூடுதல் விலையைக் கொண்டதாக மாறிவிடும்.

விலையுயர்ந்த பைக்கில் சுற்றி திரிந்த நம்ம 'தல' தோனி... இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா...?

தோனி கடந்த 2015ம் ஆண்டிலேயே இந்த பைக்கை வாங்கியிருந்தாலும், பல வருடங்கள் கழித்து தற்போதே அதில் அவர் பயணிப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. முன்பு, தல அஜித் பைக்கை ஓட்டிச் செல்லும் காட்சி வெளியாகியபோது எந்த அளவிற்கு வைரலாகியதோ, அதற்கு ஈடான அளவில் தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகின்றது.

விலையுயர்ந்த பைக்கில் சுற்றி திரிந்த நம்ம 'தல' தோனி... இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த வீடியோ ராஞ்சி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இருந்து தோனி வெளி செல்லும்போது எடுக்கப்பட்டுள்ளது. கவாஸாகி எச்2 பைக் உலகின் அதிவேகமாக செல்லும் பைக்குகளில் ஒன்றாக இருக்கின்றது. இது அதிக வேகமாக இயங்கக்கூடியதாக இருந்தாலும், முறையான விதிகளின்கீழே விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

விலையுயர்ந்த பைக்கில் சுற்றி திரிந்த நம்ம 'தல' தோனி... இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா...?

இதுபோன்று அதீத திறன் கொண்ட பைக்குகள், தோனியிடம் பல இருக்கின்றன.

அந்தவகையில், ஹெல்காட் எக்ஸ்132, டுகாட்டி 1098, கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்14ஆர், ஹார்லி டேவிட்சன் பேட் பாய் மற்றும் யமஹா ஒய்இசட்எஃப்600 உள்ளிட்ட பைக்குகளை வைத்துள்ளார். இத்துடன், யமஹாவின் ஆர்எக்ஸ்100எஸ் மற்றும் ஆர்டி350எஸ் ஆகிய பைக்குகளை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

விலையுயர்ந்த பைக்கில் சுற்றி திரிந்த நம்ம 'தல' தோனி... இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா...?

தோனி வைத்துள்ள பைக்குகளிலேயே மிகவும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில், ஹெல்காட் எக்ஸ் 132 மற்றும் கவாஸாகி எச்2 பைக்குகள் இருக்கின்றன.

விலையுயர்ந்த பைக்கில் சுற்றி திரிந்த நம்ம 'தல' தோனி... இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா...?

இதில், தோனி தற்போது இயக்கிய கவாஸாகி நிஞ்சா எச்2 பைக் பல்வேறு திறன் கொண்டதாக காட்சியளிக்கின்றது. அந்த வகையில், இதன் அதீத திறனுக்காக இந்த பைக்கில் 998சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, லிக்யூடு கூல்ட், இன்லைன்-4 மோட்டார் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 11,000 ஆர்பிஎம்மில் 200 பிஎஸ் பவரையும், 10,500 ஆர்பிஎம்மில் 113.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

விலையுயர்ந்த பைக்கில் சுற்றி திரிந்த நம்ம 'தல' தோனி... இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா...?

அதசமயம், இந்த பைக்கின் பிஎஸ் பவரை 210 வரை அதிகப்படுத்திக் கொள்ளும் வகையில், ரேம் ஏர் என்ற திறன் இந்த எஞ்ஜினில் காணப்படுகின்றது. இத்தகைய திறன் கொண்ட பைக்குகள் மோட்டோ ஜிபி பைக் பந்தயத்தில் பயன்படுத்துவது வழக்கம். அந்த அளவிற்கு சக்திக் கொண்டதாக காட்சியளிக்கின்றது கவாஸாகி எச்2 பைக் இருக்கின்றது.

விலையுயர்ந்த பைக்கில் சுற்றி திரிந்த நம்ம 'தல' தோனி... இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த பைக்கை இந்தியாவில் வாங்கிய முதல் நபராக தோனி இருக்கின்றார். மேலும், இதனை இந்தியாவில் பயன்படுத்தி வரும் ஒரே நபராகவும் அவரே இருக்கின்றார்.

கவாஸாகி நிறுவனம், எச்2 பைக்கை அதன் நிஞ்சா எச்2ஆர் பைக்கின் டிசைன் தாத்பரியங்களைப் பயன்படுத்தி தயாரித்துள்ளது. ஆகையால், ஒரு சில அம்சங்கள் நிஞ்சா எச்2ஆர் இருப்பதைப் போன்றே காட்சியளிக்கின்றது.

விலையுயர்ந்த பைக்கில் சுற்றி திரிந்த நம்ம 'தல' தோனி... இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா...?

தற்போது பல்வேறு அப்டேட்டுகளைப் பெற்று விற்பனையில் இருக்கும் கவாஸாகி எச்2 பைக் 300 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் வகையில் திறனைப் பெற்றிருக்கின்றது. அதேசமயம், ட்ரெல்லிஸ் ஃப்ரேம் எனப்படும் எடைக்குறைந்த வலிமையான ஃப்ரேமால் கட்டமைக்கப்பட்ட முதல் பைக் இதுவே ஆகும்.

இந்த பைக் தற்போது இந்தியாவில் ரூ. 34.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 26, 2019, 17:48 [IST]
English summary
MS Dhoni Spotted With Kawasaki H2 Superbike - Video. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+