கொஞ்சம் விட்டா அம்பானியவே தூக்கி சாப்பிட்றுவாரு! இவர் வாங்கன புது காரோட விலை இத்தன கோடியா! ஷாக் ஆன மக்கள்
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பணக்கார அரசியல்வாதிகளை (Richest Politicians) கொண்ட மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா (Karnataka) உள்ளது. கர்நாடக மாநிலத்தின் தற்போதைய துணை முதல் அமைச்சராக (Deputy Chief Minister) உள்ள டிகே சிவக்குமார் (DK Shivakumar) இதற்கு ஒரு உதாரணம்.
இவரது பெயரில் 1,214 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் (Assets) உள்ளன. இது கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சொத்து விபரம் ஆகும். ஆனால் இவரையே தூக்கி சாப்பிடும் ஒரு அரசியல்வாதியும் கர்நாடக மாநிலத்தில் உள்ளார். எம்டிபி நாகராஜ் (MTB Nagaraj) பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம்.

இவரது பெயரில் 1,912 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக, 2023ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் (Congress) கட்சியில் இருந்த எம்டிபி நாகராஜ் பின்னர் பாஜக-விற்கு (BJP) தாவினார். பெங்களூர் (Bangalore) நகருக்கு அருகே இருக்கும் ஒசகோட்டை (Hosakote) சட்டமன்ற தொகுதியில், கடந்த 2023ம் ஆண்டு, பாஜக சார்பில் அவர் போட்டியிட்டார்.
ஆனால் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் ஆதரவு அலை வீசியதால், எம்டிபி நாகராஜால் வெற்றி பெற முடியாமல் போய் விட்டது. காங்கிரஸ் வேட்பாளரிடம் அவர் தோல்வியை தழுவினார். இந்த தோல்வி காரணமாக புதிய கார்களை வாங்குவதை எல்லாம் அவர் நிறுத்தவில்லை. ஆம், அரசியல்வாதி என்பதை கடந்து, கார் ஆர்வலர் என்ற முகமும் எம்டிபி நாகராஜிற்கு உண்டு.

ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII (Rolls Royce Phantom VIII), ஃபெராரி எஃப்8 ட்ரைபுடோ (Ferrari F8 Tributo), லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender), போர்ஷே கேயென்னே (Porsche Cayenne), பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) என பல்வேறு விலை உயர்ந்த கார்களை, எம்டிபி நாகராஜ் வைத்துள்ளார்.
இந்த சூழலில் அவரது கார் கலெக்ஸனில் (Car Collection) மற்றொரு விலை உயர்ந்த கார் ஒன்று சமீபத்தில் புதிதாக இணைந்துள்ளது. அது ரேஞ்ச் ரோவர் (Range Rover) ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது. தனது குடும்பத்தினருடன் இணைந்து, இந்த காரை அவர் டெலிவரி எடுக்கும் வீடியோ, யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இது இந்தியாவின் தொழில் அதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை 2.39 கோடி ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 4.30 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் ரேஞ்ச் ரோவர் சொகுசு எஸ்யூவி காரின் எந்த வேரியண்ட்டை (Variant) எம்டிபி நாகராஜ் வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரேஞ்ச் ரோவர் சொகுசு எஸ்யூவி கார், எம்டிபி நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என நாம் உறுதியாக நம்பலாம். இந்தியாவை பொறுத்தவரை அரசியல்வாதிகள் கார் ஆர்வலர்களாக இருப்பது அரிது. ஆனால் அப்படிப்பட்ட அரிய மனிதர்களில் ஒருவராக எம்டிபி நாகராஜ் உள்ளார்.


Click it and Unblock the Notifications








