சென்னையில் களம் இறங்கிய 66 புதிய பஸ்கள்! இதுல அவ்வளவு விஷயம் இருக்குதா?

சென்னையில் ஏற்கனவே தாழ்த்தள பஸ்கள் செயல்பாட்டில் இருக்கும் நிலையில், இரண்டாம் கட்டமாக புதிதாக 66 தாழ்தள பஸ்களை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பஸ்களும் இனி புதிய ரூட்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கின்றன. இது மக்களுக்கு எந்த அளவில் உதவியாக இருக்கப்போகிறது. இதில் சிறப்பான வடிவமைப்பு என்ன இருக்கிறது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னை மாநகர பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே 58 தாழ்த்தள பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் எல்லாம் முதியவர்கள் மாற்றித் திறனாளிகள் எளிதாக பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட மக்களாக உள்ளன. இந்த பஸ்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதன் இரண்டாம் கட்ட பஸ் அறிமுகம் தற்போது நடந்துள்ளது.

chennai low floor buses

தற்போது புதிதாக 66 புதிய பஸ்களை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பஸ்களும் புதிய ரூட்டுகளில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்ஸில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணம் செய்ய முடியும். அதற்காக இந்த பஸ் அதிக உயரத்தில் இல்லாமல் குறைவான உயரத்தில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல இந்த பஸ்களில் சாதாரண மற்ற பஸ்களில் இருப்பதைவிட கூடுதலாக பல்வேறு அம்சங்கள் உள்ளன. முக்கியமாக இதில் ஏசி வசதி இல்லை என்றாலும், ஏசி வசதி கொண்ட பஸ்களில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக இதில் டிஜிட்டல் போர்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு வழித்தடத்தை அறிவிப்பதற்காக இந்த போர்டுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் இது பஸ்கள் எல்லாம் தானியங்கி கதவுகளை கொண்ட பஸ்களாக இருக்கின்றன0 அதனால் பஸ் பயணத்தின் போது யாரும் படிக்கட்டில் தொங்கி செல்ல மாட்டார்கள். அனைவரும் பஸ்க்குள் ஏறி பயணம் செய்ய முடியும். மேலும் இந்த பஸ்ஸில் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்காக விசாலமான இட வசதியுடன் கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் வீல் சேரில் வந்தாலும், அவர்கள் எளிதாக பஸ்ஸுக்குள் ஏறவும் இறங்கவும் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. வீல்சேரில் வரும் மாற்றுத்திறனாளிகள் பஸ்ஸில் ஏறிய பிறகு அவர்கள் தங்கள் வீல் சேரை லாக் செய்து கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பஸ்களில் கியர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் வகையில் இதன் கியர் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய பஸ்களில் இருப்பது போல கிளட்ச் பிடித்த கியர் மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. பஸ்ஸின் வேகம் மற்றும் சாலையின் தன்மைக்கு ஏற்ப தானாவே கியர் செட் செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக மைலேஜ் தரும் வகையில் இந்த பஸ் செயல்படும்.

இது மட்டுமல்லாமல் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த பஸ்களில் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மற்ற சாதாரண பஸ்களில் பயணிகள் பயணம் செய்வதை விட இந்த பஸ்களில் பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் உணர்வும் வகையில் பயணிகள் பயணம் செய்ய முடியும். இந்த பஸ் எந்தெந்த ரூட்களில் அறிமுகப்படுத்தப்பட போகிறது என்ற விபரங்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த பஸ் D70, 104, 6D, 101,104C, 27B, 583, 515, 70G, 18AET, 21G உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழித்தடத்திற்கும் குறைந்தபட்சம் 5 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதில் 104 சி வழிதடத்தில் ஒன்பது பஸ்களும் 6d வழி தடத்தில் 8 பஸ்களும், 70ஜி வழித்தடத்தில் 6 பஸ்களும் 18 AED வழி தடத்தில் 10 பஸ்களும், 21G வழி தடத்தில் 6 பஸ்களும் இயக்கப்படுகின்றன.e

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு இந்த தாழ்தள பஸ்களை சென்னை பகுதியில் இயக்கி வருவது மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வசதியாக இருக்கிறது. பல முதியவர்கள் பஸ்களில் ஏற முடியாமல் தவித்து வந்த நிலையில், இந்த தாழ்த்தள பஸ்கள் நிச்சயம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி உள்ளது நிச்சயம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி தரும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 28, 2024, 16:00 [IST]
English summary
Mtc introduced 66 low floor buses in chennai know new routes
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+