அரசு பஸ் டிரைவர்களுக்கு ஆப்பு! இனி யாரும் இதை பண்ணிட்டு வந்து வண்டியை எடுக்க முடியாது!
அரசு பஸ்களில் டிரைவர்கள் மது போதையில் இருக்கிறார்களா என சோதிக்க இனி ஒவ்வொரு அரசு பஸ் டிரைவரும் பணிக்கு வரும் போது பஸ்ஸை எடுக்கும் முன்னர் மது போதை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன? எதற்காக இந்த சோதனை? இதனால் என்ன பலன் கிடைக்கும்? மது போதையில் ஏன் வாகனம் ஓட்டக்கூடாது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தினந்தோறும் அரசு பஸ்கள் பல்வேறு விதமான விபத்துக்களையும் சந்தித்து வருகிறது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் மொத்தம் 906 விபத்துக்கள் நடந்ததில் மொத்தம் 1000 பேர் உயிரிழிந்துள்ளனர். அதே போல 2023-24ம் நிதியாண்டில் மொத்தம் 971 விபத்துகள் நடந்ததில் 878 பேர் உயரிழிந்துள்ளனர். இந்த விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அரசு பஸ் டிரைவர்கள் குடி போதையில் வாகனம் ஓட்டிய வீடியோக்கள் சமீபத்தில் வைரலாக பரவியது.இதை தடுக்கும் விதமாக இனி அரசு பஸ் டிரைவர்கள் வாகனம் ஓட்ட துவங்கும் போது அவர்கள் மது போதையில் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க ஒவ்வொரு டிப்போவிற்கும் பிரீத் அனலைஸர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இயங்கும் பஸ்களில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.
தற்போது வரை அவ்வப்போது இந்த சோதனைகள் நடந்து வருகிறது. இனி அரசு பஸ் டிரைவர்களுக்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பஸ்ஸில் பணிக்கு ஏறும் முன்பு இந்த சோதனையில் பாஸ் ஆனால் மட்டுமே பணிக்க ஏற அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரம் இதில் ஃபெயில் ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரீத் அனலைஸர் மூலம் சோதனை செய்யப்படும் போது 100 மில்லி ரத்தத்திற்கு 30 மில்லி கிராம் வரை ஆல்கஹால் அளவு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அரசு பஸ் டிரைவர்கள் இந்த சோதனைக்கு உட்படும் போது 10-15 மில்லி கிராம் அளவு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் அதற்கு மேல் இருந்தால் அனுமதி வழங்கப்படாது. அதே நேரம் 30 மில்லி கிராம் அளவை தாண்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் வாகனம் ஓட்டும் போது நிச்சயம் டிரைவர் நிதானத்தில் இருக்க மாட்டார். இதனால் சாலையில் வாகனம் ஓட்டும் போது கவனம் செலுத்தி வாகனம் ஓட்டுவது சிரமமாக இருக்கிறது. அதே நேரம் அரசு பஸ்களில் தற்போது தற்காலிக டிரைவர்கள் பலர் பணியமர்த்தப்படுவதலால் தவறு செய்யும் டிரைவர்கள் மீது அதிகபட்சமாக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை தான் எடுக்கப்படுகிறது. இது பெரிய அளவில் இப்படியான சம்பவத்தை குறைக்கவில்லை.
தனியார் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் கிளைம் செய்ய முடியும். ஆனால் அரசு பஸ்கள் விபத்தில் சிக்கினால் கோர்ட் மூலம் தான் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெற முடியும். அதனால் தற்போது விபத்துகளுக்கு நிவாரணம் வழங்க அரசு போக்குவரத்து கழகம் ஆண்டிற்கு ரூ60 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசு பஸ் ஓட்டுநர்கள் குடிபோதையில் வருகிறார்களா என்பதை கண்காணிக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நிச்சயம் பராட்டத்தக்கது தான். ஆனால் இதை சோதனை செய்யும் அளவிற்கு தரம் குறைந்த விட்டது வருந்ததக்கது. இனி பாதுகாப்பான பயணம் அரசு பஸ்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








