அம்பானி மகன் கல்யாணம் நடக்க போற மண்டபத்துக்கு வந்த சொகுசு கார்... விலையை கேட்டதும் ஷாக் ஆன மக்கள்!
உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani). இவரிடம் உள்ள சொகுசு கார்களை பற்றி எழுத தொடங்கினால், அந்த செய்தி அனுமார் வால் போல் நீண்டு கொண்டே செல்லும். அந்த அளவிற்கு ஏராளமான விலை உயர்ந்த கார்களை முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். இந்த வரிசையில் தற்போது மற்றொரு விலை உயர்ந்த கார் ஒன்றை முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். அது லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் (Lexus LM350h) ஆகும். இது சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த கார்.
இந்த காரின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் (Anant Ambani) திருமணம் நடைபெறவுள்ள இடத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் (Radhika Merchant) திருமண விழா களை கட்ட தொடங்கியுள்ள நேரத்தில், இந்த கார் கேமரா கண்களில் சிக்கியுள்ளது.

மும்பையில் (Mumbai) உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் (Jio World Convention Centre), ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சிகள் நாளை (ஜூலை 12) முதல் வரும் ஜூலை 14ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
சரி, லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் காருக்கு வருவோம். இந்த காரில், 23 ஸ்பீக்கர் பிரீமியம் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், ரியர் க்ளவ் பாக்ஸ், ஃபிரிட்ஜ், 48 இன்ச் டிவி மற்றும் டிஜிட்டல் ரியர் வியூ மிரர் என ஏகப்பட்ட சொகுசு மற்றும் அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் பவர் அவுட்புட் 250 பிஎஸ் மற்றும் 239 என்எம் ஆக உள்ளது. இந்த இன்ஜின் உடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
7 சீட்டர் விஐபி மற்றும் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி என மொத்தம் 2 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 7 சீட்டர் மாடலின் விலை 2 கோடி ரூபாய் ஆகவும், 4 சீட்டர் மாடலின் விலை 2.50 கோடி ரூபாய் ஆகவும் இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் காரானது, இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் கார்களில் ஒன்றாகும். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) கூட, இந்த லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் காரை வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, அதற்கு ஏற்ற வகையில் சொகுசான பயணத்தை வழங்க கூடியதாக இந்த கார் உள்ளது. இந்த காரை தயாரிக்கும் லெக்ஸஸ் நிறுவனம், டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் ஒரு அங்கமாக உள்ளது. சொகுசு கார்களை தயாரிப்பதில் லெக்ஸஸ் புகழ் பெற்று விளங்குகிறது.


Click it and Unblock the Notifications








