சிட்டியின் பரபரப்பான சாலையை கிழித்துக் கொண்டு சென்றது இவரா? முதலமைச்சர் போறாருனு எல்லாரும் நெனைச்சாங்க!!
முகேஷ் அம்பானி (Mukesh Ambani), இந்தியாவின் பெரும் பணக்காரரான இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவுக்கு தனது அல்ட்ரா-லக்சரி வாழ்க்கையின் மூலமாக மற்றவர்கள் அனைவரையும் பொறாமைப்பட வைக்கும் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பயன்படுத்தும் கார்களை எல்லாம் பார்த்தால் கோடி ரூபாய்களில் விலைமிக்கவை ஆக இருக்கும்.
மும்பையில் உள்ள அடுக்குமாடி வீட்டில் சொகுசு கார்களை நிறுத்தி வைப்பதற்காகவே தனியாக ஒரு தளத்தையே முகேஷ் அம்பானி ஒதுக்கி வைத்துள்ளதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்த அளவிற்கு நூற்றுக்கணக்கான சொகுசு கார்களை வைத்திருப்பினும், முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் புதியது புதியதாக சொகுசு கார்களை வாங்குவதை மட்டும் நிறுத்துவதே இல்லை.

அந்த வரிசையில் தற்போது, சுமார் ரூ.4.2 கோடி மதிப்பிலான லம்போர்கினி உருஸ் எஸ் (Urus S) காரை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வாங்கி உள்ளனர். சிவப்பு நிறத்திலான அந்த புதிய உருஸ் எஸ் காரில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் மும்பை சாலையில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில், முன்னாலும், பின்னாலும் பாதுகாப்பு வாகனங்களுடன் சாலையை கிழித்துக் கொண்டு வேகமாக செல்லும் முகேஷ் அம்பானியின் புதிய உருஸ் எஸ் காரை பார்க்க முடிகிறது. பாதுகாப்பு வாகனமாக புதிய உருஸ் எஸ் காருக்கு முன்னால் செல்வது வெள்ளை நிறத்திலான டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் ஆகும்.

காருக்கு பின்னால் பாதுகாப்புக்காக மஹிந்திரா எக்ஸ்யூவி500 (Mahindra XUV500) மற்றும் மற்றொரு டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இத்தனை பாதுகாப்பு வாகனங்கள் செல்வதில் இருந்து, இந்த வீடியோவை காட்சிப்படுத்தும் போது புதிய உருஸ் எஸ் காரினுள் முகேஷ் அம்பானி குடும்பத்தை சேர்ந்த முக்கியமான உறுப்பினர்கள் சென்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
ஆனால், காருக்குள் அம்பானி குடும்பத்தை சேர்ந்தவர்கள் யார் இருந்தனர்? என்பதை அறிய முடியவில்லை. லம்போர்கினி உருஸ் எஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதனை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் 'ரோஸ்ஸோ அண்டெரோஸ்' (Rosso Anteros) என்கிற சிவப்பு நிறத்தில் வாங்கியுள்ளனர். உருஸ் எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.4.2 கோடியாக உள்ளது.
இந்த லம்போர்கினி காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 666 பிஎஸ் மற்றும் 850 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் உருஸ் எஸ் காரில் 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உருஸ் எஸ் காரின் விலையாக மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ரூ.4.2 கோடி ஆனது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இருப்பினும், ரூ.10 கோடி மதிப்பாலான ரோல்ஸ்-ராய்ஸ் கார்களையே 10 கார்களை வைத்திருக்கும் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு இந்த லம்போர்கினி காரை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமே கிடையாது.
Source: Cartog (https://www.cartoq.com/)


Click it and Unblock the Notifications








