காசை அள்ளி இறைக்கிறாரு! இந்த 8 கோடி ரூபா காரோட ஓனர் அவரா! யார்னு தெரிஞ்சதும் மூக்கு மேல விரல் வைக்கும் மக்கள்!
இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இன்னமும் கூட அதிசயமாகதான் பார்க்கப்பட்டு வருகின்றன. சாலையில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை பார்த்து விட்டால் கூட, பலரும் உடனே செல்போனில் வீடியோ எடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விலை மிகவும் அதிகம் என்பதால், அவற்றை கோடீஸ்வரர்களால் மட்டுமே வாங்க முடியும். எனவேதான் இந்தியாவில், ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அதிசயமான ஒன்றாக கருதப்படுகின்றன. நிலைமை இப்படி இருக்கும்போது இந்தியாவில் ஒரு குடும்பம், தொடர்ச்சியாக நிறைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்து வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
உலகின் மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்றான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) குடும்பத்தை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி (Rolls Royce Phantom VIII EWB) உள்பட நிறைய ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருக்கின்றன.

ஆனால் அவர்கள் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார் மீது காதல் கொண்டவர்களாக உள்ளனர். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இன்னும் சொல்லப்போனால் கல்லினன்தான், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரக கார் ஆகும்.
இதற்கு முன்பாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வேறு எந்தவொரு எஸ்யூவி ரக காரையும் விற்பனை செய்ததாக வரலாறே கிடையாது. இதன் காரணமாகவோ என்னவோ, முகேஷ் அம்பானி குடும்பம் தொடர்ச்சியாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களை வாங்கி வருகிறது. அவர்களிடம் ஏற்கனவே 8 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்குவதே மிகப்பெரிய விஷயம் என்னும் நிலையில், முகேஷ் அம்பானி குடும்பமோ, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஒரே காரை 8 முறை வாங்கியிருப்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் இதை விட ஆச்சரியமான மற்றொரு விஷயம் ஒன்று உங்களுக்காக காத்து கொண்டுள்ளது.
ஆம், முகேஷ் அம்பானி குடும்பத்தினர் தற்போது மேலும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கியுள்ளனர். இது அவர்கள் வாங்கியுள்ள 9வது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஆகும். இம்முறை அவர்கள் வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார், ஸ்கை ப்ளூ நிறத்தில் (Sky Blue Colour) பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த கலரை, பெப்லீ பராடிசோ (Pebble Paradiso) என்ற பெயரில் அழைக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், 600 பிஹெச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலமாக காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை 6.95 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 8 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும். ஆனால் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் தொடர்ச்சியாக வாங்கி வரும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களின் விலை இதை விட அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏனெனில் அவர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிறைய மாற்றங்களை செய்திருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இந்தியாவில் 6 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களை வைத்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எஞ்சிய 3 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் (Dubai) உள்ளிட்ட வெளிநாடுகளில் இருக்கலாம் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








