சிஎம் வந்தா கூட இவ்ளோ பாதுகாப்பு இருக்குமானு தெரியல! பல கோடி ரூபா கார்களை ஒன்னா பாத்ததும் மிரண்டு போன மக்கள்!
பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ, மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் அணிவகுத்து செல்வதை பார்ப்பது என்பது, உண்மையிலேயே பிரம்மிப்பை ஏற்படுத்த கூடிய விஷயமாக இருக்கும். பொதுவாக பிரதமர் (Prime Minister), முதல் அமைச்சர்கள் (Chief Ministers) மற்றும் அமைச்சர்கள் (Ministers) போன்ற உயர் பொறுப்புகளை வகிக்கும் நபர்கள் பயணம் செய்யும் போது, இப்படியான வாகன அணிவகுப்பை காணலாம். இந்த வரிசையில் தற்போது ஒரு வாகன அணிவகுப்பின் வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில், டாடா சுமோ கோல்டு (Tata Sumo Gold), பென்ட்லீ பென்டைகா (Bentley Bentayga), மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero), டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta), டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் (Mercedes Benz G-Class) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) ஆகிய கார்களை எல்லாம் நம்மால் பார்க்க முடிகிறது.

இது உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) குடும்பத்தினரின் வாகன கான்வாய் ஆகும். மஹாபாலேஷ்வர் (Mahabaleshwar) நகருக்கு முகேஷ் அம்பானி குடும்ப உறுப்பினர்கள் வந்தபோது இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் (Hill Station) ஆகும். இங்குதான் கிருஷ்ணா நதி (Krishna River) உருவாகிறது. எனவே இது புனித தலமாகவும் கருதப்படுகிறது. இந்த கான்வாயில் உள்ள வாகனங்கள் எல்லாம் என்னென்ன? என்பது வீடியோவின் மூலம் நமக்கு தெரிந்து விட்டது.

ஆனால் இந்த வாகனங்களுக்கு உள்ளே முகேஷ் அம்பானி குடும்ப உறுப்பினர்கள் யாரெல்லாம் இருந்தார்கள்? என்பது சரியாக தெரியவில்லை. அனேகமாக வார விடுமுறையை முன்னிட்டு, முகேஷ் அம்பானி குடும்ப உறுப்பினர்கள் சிலர் மஹாபாலேஷ்வர் வந்த சமயத்தில் இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த வைரல் வீடியோவில் நாம் காணும், பென்ட்லீ பென்டைகா, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் போன்ற கார்கள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்தவை ஆகும். இதில், பென்ட்லீ பென்டைகா கார் தற்போதைய நிலையில் 5-6.75 கோடி ரூபாய் என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரானது, 2.55-4 கோடி ரூபாய் என்ற விலைகளில் விற்பனையாகி கொண்டுள்ளது. மறுபக்கம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரானது, 1.34-1.39 கோடி ரூபாய் என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் கூடுதலாக வரும். ஆனால் வழக்கமான ஆன்-ரோடு விலையை விட, இந்த கார்களின் மதிப்பு இன்னும் கூடுதலாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை மேம்படுத்துவதற்கான இந்த கார்கள் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருக்கலாம். எனவே விலை கூடுதலாக இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், நாட்டின் மிகவும் முக்கியமான நபர்களாக கருதப்படுகின்றனர். அத்துடன் அவர்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களும் இருக்கின்றன. எனவே அவர்கள் வாகனங்களில் வெளியிடங்களுக்கு பயணம் செய்யும்போது, உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படுவது அவசியமான ஒன்றாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








