வாரத்திற்கு 7 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் என்றால் கூட 2 ஃப்ரீயா நிற்கும்- இந்த இந்திய குடும்பத்தை போல் எங்கும் இல்லை

உலகின் ஆட்டோமொபைல் தலைநகரம் என்று சொன்னால் அது ஜெர்மனி தான். இருந்தாலும், பிரபல பிரிட்டிஷ் கார் நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸை யாராலும் ஓவர்டேக் செய்ய முடியவில்லை என்பது உண்மை. அதாவது, ரோல்ஸ்-ராய்ஸை விட விலையுயர்ந்த கார்களை உருவாக்கக்கூடிய நிறுவனங்கள் பல உள்ளன. இருப்பினும், உலகளவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களுக்கு உண்டான வரவேற்பு வேறெந்த கார் நிறுவனத்துக்கும் கிடைப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணமாக, ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் கம்பீரமான உடலமைப்பையும், அவற்றின் லக்சரியான தோற்றத்தையும் சொல்லலாம். இதற்கேற்ப ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் விலைகளும் அதிகமாக உள்ளன.

ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஏறக்குறைய ரூ.10 கோடியாக உள்ளன. இருப்பினும், இந்தியாவில் ஒரு குடும்பத்தினரிடம் 9 ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்கள் உள்ளன என சொன்னால் நம்ப முடிகிறதா... அது வேறு யாரும் கிடையாது, இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அம்பானியின் குடும்பத்தினராவர்.

மும்பையை சேர்ந்த அம்பானியின் குடும்பத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பதை நான் கூற வேண்டியதில்லை. இதற்கு சாட்சியாக, மும்பையில் வானுயிர்ந்து நிற்கும் முகேஷ் அம்பானியின் வீடு அம்பானி குடும்பத்தாரின் செல்வ, செழிப்பான வாழ்க்கையை பற்றி கூறும். பணம் காசு அதிகம் இருந்தாலே விலையுயர்ந்த கார்களை வாங்கி குவிக்க தோன்றும். அப்படியென்றால், அம்பானி குடும்பத்தினரிடம் எத்தனை கார்கள் உள்ளன என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா?

குருபாய் அம்பானியின் மகன்கள் மற்றும் மகள்களிடம் பல்வேறு விதமான சொகுசு கார்கள் உள்ளன. இதில், குருபாய் அம்பானியின் இளைய மகன் முகேஷ் அம்பானி தன்னிடம் உள்ள சொகுசு கார்களை நிறுத்தி வைப்பதற்காகவே தனது பிரம்மாண்ட சொகுசு வீட்டில் 2, 3 மாடிகளை பயன்படுத்துகிறார் என்றால், அவரிடம் எத்தனை விலையுயர்ந்த கார்கள் இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

9 cullinan in one family

முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் மட்டும் மொத்தம் 9 ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்கள் உள்ளன. 9வது கல்லீனன் காரை சமீபத்தில்தான் இந்த குடும்பத்தினர் வாங்கினர். கல்லீனன் உடன் சேர்த்து கோஸ்ட் என மற்ற ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை சேர்த்து பார்த்தால், முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் பல்வேறு ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்ளன. இந்தியாவில் 9 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் வேறெந்த குடும்பத்தினரிடமும் இல்லை என கூறப்படுகிறது.

ஆனால், முகேஷ் அம்பானியின் குடும்பத்தாரிடம் கல்லீனன் கார்கள் மட்டும் 9 உள்ளன. முகேஷ் அம்பானி சமீபத்தில் வாங்கியிருப்பது, ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் பிளாக் பேட்ஜ் கார் ஆகும். இது வழக்கமான கல்லீனன் கார்களை காட்டிலும் விலையுயர்ந்த ஸ்பெஷல் எடிசன் ஆகும். இந்த காரை மிகவும் பிரத்யேகமான பெப்பீள் பாரடிசோ பெயிண்ட் ஆப்ஷனில் என்கிற இளம் நீல நிறத்தில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.

இந்த பிரத்யேக பெயிண்ட்டிற்காகவே சில கோடி ரூபாய்களை முகேஷ் அம்பானியின் குடும்பம் செலவழித்து இருக்கும் என கூறப்படுகிறது. வழக்கமான கல்லீனன் காருடன் ஒப்பிடுகையில், கல்லீனன் பிளாக் பேட்ஜ் காரின் வெளிப்பக்கத்தில் சில பளபளப்பான காஸ்மெட்டிக் அப்கிரேட்கள் கொடுக்கப்படுகின்றன. கல்லீனன் பிளாக் பேட்ஜ் காரில் 6.75 லிட்டர் ட்வின்-டர்போ வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது.

இதேபோன்று, இவர்கள் குடும்பத்தில் இருக்கும் மற்றொரு கல்லீனன் காரின் பெயிண்ட்டிற்காகவும் ரூ.1 கோடி வரையில் செலவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் குடும்பத்தில் உள்ள 9 ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்களில் 2 கார்கள் ஜியோ கேரேஜில் உள்ளன. இந்த 9 கல்லீனன் கார்களில் சில கார்களின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஒருமுறை ஆனந்த் அம்பானி துபாய்க்கு சென்றிருந்த போது இதில் ஒரு கல்லீனன் காரை கொண்டு சென்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் எதற்காக இத்தனை ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்களை வாங்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. அதாவது, மற்ற ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை விடுத்து, குறிப்பாக கல்லீனன் காரை வாங்கியதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. 9 ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவிலேயே எந்த குடும்பத்தினரிடமாவது இருக்குமா என்பது சந்தேகமே...

More from DriveSpark

Article Published On: Monday, June 24, 2024, 22:59 [IST]
English summary
Mukesh ambani family indias only family have 9 rolls royce cullinan cars
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+