5-ஸ்டார் ஓட்டல் பகுதியை அதிர விட்ட முகேஷ் அம்பானி குடும்பம்! வந்து நின்ற கார்கள் ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய்!

இந்தியாவின் முன்னணி பணக்காரக் குடும்பங்களில் ஒன்றான அம்பானி (Ambani) குடும்பம், தங்கள் பிரம்மாண்டமான கார் சேகரிப்புக்காகவே அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் கார் சேகரிப்பை வைத்திருக்கும் இவர்களின் தீபாவளி கொண்டாட்டங்கள் தற்போது களைகட்டி வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ, முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்தும் பாதுகாப்பு வாகனங்களுடன், ஆடம்பர கார்களின் அசரவைக்கும் அணிவகுப்பைக் காட்டும் விதமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. சிஎஸ்12 என்ற யூடியூப் சேனல் இந்தப் பதிவை வெளியிட்டு உள்ளது.

mukesh ambani family spotted with ultra luxury cars

வீடியோ எடுக்கப்பட்ட இடம், மும்பையின் நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர உணவகத்திற்கு வெளியே எடுக்கப்பட்டது ஆகும். உணவக கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல கார்களில் இருந்து துவங்கும் வீடியோவில், வாகனங்களை ஒழுங்காக நிறுத்த அம்பானியின் தனிப்பட்ட பாதுகாப்பு குழுவினர் ஒருபுறம் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளதையும் காணலாம்.

இந்த வீடியோவில், பென்ட்லி பென்டைகா (Bentley Bentayga), ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls-Royce Cullinan), முந்தைய தலைமுறை ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), ரேஞ்ச் ரோவர் டிஸ்கவரி (Range Rover Discovery), மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63) போன்ற பல்வேறு ஆடம்பர கார்களைக் காண முடிகிறது.

mukesh ambani family spotted with ultra luxury cars

"ஜியோ கேரேஜ்" என்று மக்களால் அழைக்கப்படும் இந்த கார்கள் அனைத்தும் அம்பானி குடும்பத்திற்கு சொந்தமானவை. வீடியோவில் காணப்படும் வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் டிஸ்கவரி, ஏஎம்ஜி ஜி63 மற்றும் தற்போதைய தலைமுறை ரேஞ்ச் ரோவர் கார்கள் பாதுகாப்பு குழுவினரால் பயன்படுத்தப் படுகின்றன.

mukesh ambani family spotted with ultra luxury cars

கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை என்றாலும், இது ஒரு கண்கவர் காட்சியாகும். அம்பானி குடும்பத்தினர் அங்கிருந்ததால், பாதுகாப்பு குழுவினர் போக்குவரத்தை கட்டுப்படுத்தி, அப்பகுதியைப் பாதுகாத்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, முகேஷ் அம்பானியும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் கட்டிடத்திலிருந்து வெளியே வருகிறார்கள்.

mukesh ambani family spotted with ultra luxury cars

முகேஷ் அம்பானி வெளியே வந்ததும், அவரது அல்ட்ரா-லக்சரி மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி680 கார்டு (Mercedes-Benz S680 Guard) கார் அவருக்கு முன்னால் வந்து நிற்கிறது. காரின் பின் இருக்கையில் முகேஷ் அம்பானி அமர, அவரைத் தொடர்ந்து ஆகாஷ் அம்பானி காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்கிறார். அவர்களது மகனும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார்.

mukesh ambani family spotted with ultra luxury cars

இதே காரில் பயணம் செய்யும் நீதா அம்பானியும் வீடியோவில் காணப்படுகிறார். மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்680 கார்டு என்பது தனிப்பயனாக்கப்பட்ட ஆடம்பர செடான் ரக கார் ஆகும். விபிஏஎம் விஆர்10 சான்றிதழ் பெற்ற கவச வாகனமான இது, சிவில் வாகனங்களுக்கான மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை கொண்டது ஆகும்.

mukesh ambani family spotted with ultra luxury cars

இதன்படி, இது குண்டு துளைக்காதது மட்டுமல்லாமல், வெடிபொருட்களையும் தாங்கக்கூடியது. சுற்றிலும் கனமான கவசம் இருந்தபோதிலும், எஸ்680 கார்டு அதன் செயல்திறனை சமரசம் செய்யாமல் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் ஒரு என்ஜீனியரிங் சாதனையாகும். 612 குதிரைத்திறன் மற்றும் 830 Nm முறுக்குவிசையை உருவாக்கும் வி12 என்ஜினை எஸ்680 பயன்படுத்துகிறது.

இந்த காரின் சரியான விலை தெரியவில்லை என்றாலும், இது ரூ.10 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக முகேஷ் அம்பானி பொதுவாக இந்த மெர்சிடிஸ் காரில் பயணம் செய்கிறார், அதே நேரத்தில் குடும்பத்தின் மற்றவர்கள் வேறு கார்களில் காணப்படுகிறார்கள்.

mukesh ambani family spotted with ultra luxury cars

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இவ்வாறு ஒன்றாக வெளியில் காட்சியளிக்கிறார்கள் என்றாலே அவர்களது குடும்பத்தில் ஏதோ சுப காரியம் நடக்க போகிறது என அர்த்தம். இதன்படி பார்க்கும்போது, முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் தீபாவளி ஆரம்பமாகி விட்டதை அறிய முடிகிறது. தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில் இருப்பவை மட்டுமல்லாமல், இன்னும் பல நூறு கார்கள் தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தாரிடம் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, October 17, 2025, 15:27 [IST]
English summary
Mukesh ambani family spotted at hotel in mumbai with ultra luxury cars check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X