ரூ.10 கோடியில் குண்டு துளைக்காத கார் வாங்கி பயன்படுத்தும் முகேஷ் அம்பானி!!

ரூ.10 கோடியில் குண்டு துளைக்காத பாதுகாப்பு கொண்ட புதிய பிஎம்டபிள்யூ சொகுசு கார் வாங்கி பயன்படுத்தி வருகிறார் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபருமான முகேஷ் அம்பானி தனது பாதுகாப்பையும், தனது குடும்பத்தினர் பாதுகாப்பையும் கருதி இந்த காரை பயன்படுத்துகிறார்.

நம் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெரும் தொழிலதிபர்கள், நடிகர்கள் என வெகு சிலரே பயன்படுதத்தும் இந்த கார் மிகச்சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. மேலும், இசட் ப்ளஸ் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்புக்கு இந்த காரில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் மிகச்சிறப்பாக பொருந்திபோகும். இந்த கார் பற்றி சுவையான கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பாதுகாப்புச் சான்று

பாதுகாப்புச் சான்று

2009 பிஆர்வி பாதுகாப்புச் சான்று பெற்ற மாடல் இது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் மிகவும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் கட்டமைத்து கொடுக்கிறது.

கார் மாடல்

கார் மாடல்

முகேஷ் அம்பானி வாங்கியிருக்கும் மாடல் பிஎம்டபிள்யூ 760ஐ ஹை செக்யூரிட்டி. இதே மாடலைத்தான் பிரதமர் நரேந்திர மோடியும் தனது அதிகாரப்பூர்வ கார் மாடலாக பயன்படுத்தி வருகிறார். இதுதவிர, சில பாலிவுட் நட்சத்திரங்கள் பாதுகாப்பு கருதி இந்த மாடலை பயன்படுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் தாக்குதல்களில் சேதமடையாத சேஸி, அடிப்பாகம் மற்றும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் பாடியும் அதேபோன்று குண்டு துளைக்காத விசேஷ ஸ்டீலில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், ரன் ஃப்ளாட் டயர்கள் ஆகியவையும் இந்த காரின் கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கின்றது.

செயல்திறன்

செயல்திறன்

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி எடிசன் காரின் எஞ்சின் அதிகபட்சமாக 439 எச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. 0- 100 கிமீ வேகத்தை 7.5 வினாடிகளில் எட்டிவிடும். 6 ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஓட்டுனர்களுக்கு பயிற்சி

ஓட்டுனர்களுக்கு பயிற்சி

காரை கட்டமைத்து கொடுப்பதும் மட்டுமின்றி, இந்த காரை ஓட்டுவதற்காக ஓட்டுனர்களுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் சிறப்பு பயிற்சியை வழங்குகிறது. அவசர சமயங்களில் காரை எவ்வாறு செலுத்தி, பயணிகளை பாதுகாப்பது குறித்த பிஎம்டபிள்யூவின் நிபுணர் குழு சிறப்பு பயிற்சியை அளிக்கும். தவிர்த்து, காரை பின்னோக்கி செலுத்துவது குறித்தும் சிறப்பு பயிற்சிகள் அந்த ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் மட்டுமே அந்த காரை திறமையாக செலுத்த முடியும்.

சிறப்பு வசதிகள்

சிறப்பு வசதிகள்

வெடிகுண்டுகளை கண்டறியும் வெப்ப சென்சார்கள், செயற்கைகோள் தொடர்பு சாதனம் போன்ற பல வசதிகள் உள்ளன. ஏவுகணை மற்றும் ரசாயனத் தாக்குதலிலிருந்து கூட பாதுகாப்பு தரும்.

விலை

விலை

இந்தியாவில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் ரூ.1.9 கோடி ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் மாறுதல்கள் செய்யப்பட்ட இந்த காருக்கு கூடுதலாக 300 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி வரி உள்பட ரூ.8.5 கோடி அடக்க விலையாகிறது. இதைவிட, இதன் பதிவு கட்டணமும் கோடியில்தான்...

பதிவுக் கட்டணம்

பதிவுக் கட்டணம்

இந்த காருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காரின் விலையில் 20 சதவீதம் பதிவுக் கட்டணமாக செலுத்தப்பட்டிருக்கிறது. ரூ.1.6 கோடியை பதிவு கட்டணமாக செலுத்தியுள்ளார் முகேஷ் அம்பானி. அதாவது, இதுவரை மும்பை ஆர்டிஓ அலுவலகத்தில், அதிக பதிவுக் கட்டணம் செலுத்தப்பட்ட கார் இதுதான் என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mukesh Ambani Gets A BMW Armoured Car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X