முகேஷ் அம்பானி எப்படி வேலைக்கு செல்வார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பாதுகாப்பு ரகசியங்கள்...

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

முகேஷ் அம்பானி எப்படி வேலைக்கு செல்வார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பாதுகாப்பு ரகசியங்கள்...

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. எனவே இவருக்கு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முகேஷ் அம்பானி அலுவலகம் சென்றாலும் சரி அல்லது குடும்பத்துடன் வெளியே எங்கேயாவது சென்றாலும் சரி, உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படும்.

முகேஷ் அம்பானி எப்படி வேலைக்கு செல்வார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பாதுகாப்பு ரகசியங்கள்...

இதன் ஒரு பகுதியாக முகேஷ் அம்பானியின் கான்வாயில் பல கோடி ரூபாய் மதிப்புடைய விலை உயர்ந்த கார்கள் அணிவகுத்து வரும். இந்த சூழலில் அன்டிலியா வீட்டில் இருந்து முகேஷ் அம்பானி வெளியே புறப்படும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பல கோடி ரூபாய் மதிப்புடைய கார்கள் பாதுகாப்பிற்கு அணிவகுத்து வர முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் பயணம் செய்வதை இந்த வீடியோ காட்டுகிறது. இந்த கான்வாயில் சென்ற விலை உயர்ந்த கார்கள் குறித்து இனி பார்க்கலாம்.

முகேஷ் அம்பானி எப்படி வேலைக்கு செல்வார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பாதுகாப்பு ரகசியங்கள்...

மெர்சிடிஸ் எஸ்-கார்டு

விலை: சுமார் 9 கோடி ரூபாய்

பார்ப்பதற்கு வழக்கமான டபிள்யூ221 எஸ்-கிளாஸ் போலவே இது தோன்றினாலும், அது உண்மை கிடையாது. இந்த வீடியோவில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காருக்கு பிறகு நாம் பார்த்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ், முகேஷ் அம்பானியின் அதிகாரப்பூர்வ கார் ஆகும்.

முகேஷ் அம்பானி எப்படி வேலைக்கு செல்வார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பாதுகாப்பு ரகசியங்கள்...

அத்துடன் முகேஷ் அம்பானியிடம் சொந்தமாக உள்ள மூன்று கவச கார்களில் இதுவும் ஒன்று. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கார்டு தோற்றத்தில் பார்ப்பதற்கு அதன் ரெகுலர் வெர்ஷனை போலவேதான் இருக்கும். இந்த கார் விஆர்9 பாதுகாப்பை பெற்றுள்ளது. ஐஇடி தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்களில் இருந்து காரில் பயணம் செய்பவர்களை இது பாதுகாக்கும்.

முகேஷ் அம்பானி எப்படி வேலைக்கு செல்வார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பாதுகாப்பு ரகசியங்கள்...

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

விலை: சுமார் 70 லட்ச ருபாய் (எக்ஸ் ஷோரூம்), சுமார் 80 லட்ச ரூபாய் (ஆன் ரோடு)

பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பிரபலமான எஸ்யூவி கார்களில் ஒன்று எக்ஸ்5. முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணிகளில் பல்வேறு எக்ஸ்5 கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ரிலையன்ஸால் இந்த கார்கள் வாங்கப்பட்டுள்ளன.

MOST READ: பஞ்சராகாது, காற்றடிக்க தேவையில்லை: எதிர்காலத்தை ஆள போகும் டயர் இதுதான்...!

முகேஷ் அம்பானி எப்படி வேலைக்கு செல்வார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பாதுகாப்பு ரகசியங்கள்...

முகேஷ் அம்பானியின் கான்வாயில் பயன்படுத்தப்படும் எக்ஸ்5 கார்களின் மேலே ப்ளாஷர்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பக்கவாட்டில் போலீஸ் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில், 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 258 பிஎச்பி பவர் மற்றும் 560 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

முகேஷ் அம்பானி எப்படி வேலைக்கு செல்வார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பாதுகாப்பு ரகசியங்கள்...

லேண்ட்ரோவர் டிஸ்கவரி

விலை: சுமார் 76.94 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்), சுமார் 90 லட்ச ரூபாய் (ஆன் ரோடு)

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் சமீபத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் கார் லேண்ட்ரோவர் டிஸ்கவரி. இவை லேட்டஸ்ட் ஜென்ரேஷன் டிஸ்கவரி எஸ்யூவிக்கள் ஆகும். முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கார் எங்கு சென்றாலும், பாதுகாப்பிற்காக இதுவும் பின் தொடர்ந்து செல்லும்.

MOST READ: உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

முகேஷ் அம்பானி எப்படி வேலைக்கு செல்வார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பாதுகாப்பு ரகசியங்கள்...

இந்த காரில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 255 பிஎச்பி பவர் மற்றும் 600 என்எம் டார்க் திறனை உருவாக்கும். பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்களை போல், முகேஷ் அம்பானியின் கான்வாயில் பயன்படுத்தப்படும் லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார்களின் டாப்பிலும் ப்ளாஷர்கள் இடம்பெற்றுள்ளன.

முகேஷ் அம்பானி எப்படி வேலைக்கு செல்வார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பாதுகாப்பு ரகசியங்கள்...

முகேஷ் அம்பானியின் கான்வாயில், ஃபேஸ்லிஃப்டுக்கு முந்தைய ரேஞ்ச் ரோவர் கார்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஃபோர்டு எண்டேவர் மற்றும் டொயோட்டா பார்ச்சூனர் ஆகிய கார்களையும் அவரது கான்வாயில் பார்க்க முடியும்.

MOST READ: அதிர்ச்சி... 14 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய 15 நிமிடங்களில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்

முகேஷ் அம்பானி எப்படி வேலைக்கு செல்வார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பாதுகாப்பு ரகசியங்கள்...

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 400 4மேட்டிக்

விலை: சுமார் 83 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்), சுமார் 95.5 லட்ச ரூபாய் (ஆன் ரோடு)

அம்பானி குடும்பத்தினர் பாதுகாப்பு காரணங்களை கருதி எப்போதும் ஒரே காரில் பயணம் செய்ய மாட்டார்கள். ஒரே இடத்திற்கு செல்வதாக இருந்தாலும் கூட அவர்கள் வெவ்வேறு கார்களில்தான் பயணம் செய்வார்கள். கார் விபத்தில் சிக்கினாலோ அல்லது குறிப்பிட்ட ஏதேனும் ஒரு கார் மீது தாக்குதல் நடத்தினாலோ குடும்ப உறுப்பினர்களை காப்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

முகேஷ் அம்பானி எப்படி வேலைக்கு செல்வார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பாதுகாப்பு ரகசியங்கள்...

இந்த வகையில் அம்பானி குடும்பத்தின் விருந்தினர்கள் அல்லது உறுப்பினர்களை சுமந்து செல்லும் பாக்கியத்தை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 400 4மேட்டிக் பெற்றுள்ளது. இந்த காரில், 3.0 லிட்டர், வி6 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 258 பிஎச்பி பவர் மற்றும் 600 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

Source: Shyamgupta

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mukesh Ambani Luxury Car Convoy: Mercedes S-Guard, BMW X5, Land Rover Discovery. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more