சாலையில் வந்த 10 கோடி ரூபாய் கார் அவரோடதா! எல்லாரும் வண்டியை திருப்பீட்டு பின்னாடியே போக ஆரம்பிச்சுட்டாங்க!

இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி (Mukesh Ambani), உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். எனவே அம்பானி குடும்பத்தினர், விலை உயர்ந்த கார்கள் மீது காதல் கொண்டவர்களாக உள்ளனர். அம்பானி குடும்பத்தினரிடம், சொகுசு கார்கள், ஸ்போர்ட்ஸ் கார்கள் என பலதரப்பட்ட கார்கள் இருக்கின்றன.

குறிப்பாக ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் சொகுசு கார்களை அம்பானி குடும்பத்தினர், மிகவும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) கார் ஒன்றை, அம்பானி குடும்பத்தினர் சமீபத்தில் வாங்கியுள்ளனர்.

Ambani Rolls Royce Ghost

மும்பை நகர சாலைகளில் வலம் வந்தபோது, கேமராவின் கண்களில் இந்த கார் சிக்கியுள்ளது. இது தொடர்பாக யூ-டியூப் (YouTube) தளத்தில் வீடியோ (Video) பதிவேற்றப்பட்டுள்ளது. பெட்ரா கோல்டு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த கார் சாலையில் சர்வ சாதாரணமாக வலம் வருவதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது.

அத்துடன் இரவு நேரத்தில் ஒரு கட்டிடத்தின் உள்ளே இருந்து இந்த கார் வெளியே வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது இந்த காரின் டிஆர்எல்கள், அதாவது பகல் நேர விளக்குகள் எரிகின்றன. அம்பானி குடும்பம் சமீபத்தில் வாங்கியிருப்பது, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் புதிய தலைமுறை மாடல் ஆகும்.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் ஆரம்ப விலையே (Price) 6.95 கோடி ரூபாயாக இருக்கிறது. இது ஆரம்ப நிலை ஸ்டாண்டர்டு வி12 வேரியண்ட்டின் விலை ஆகும். அதே நேரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் டாப் வேரியண்ட்டின் (எக்ஸ்டென்டட் வீல்பேஸ் வேரியண்ட்) விலை 7.95 கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் இந்த 2 வேரியண்ட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

நாங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். அத்துடன் கஸ்டமைசேஷன் தேர்வு செய்யப்பட்டால், விலை இன்னும் அதிகரிக்கும் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். சரி, அம்பானி குடும்பம் வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பற்றிய விஷயங்களுக்கு வருவோம்.

அவர்கள் தேர்வு செய்திருப்பது, இடபிள்யூபி என சுருக்கமாக குறிப்பிடப்படும் எக்ஸ்டென்டட் வீல்பேஸ் வேரியண்ட் (EWB - Extended Wheelbase Variant) ஆகும். இந்த வேரியண்ட்டின் ஆன் ரோடு விலை 9-10 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில், 6.75 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 563 ஹெச்பி பவர் மற்றும் 820 என்எம் டார்க் திறனை வாரி வழங்க கூடியது.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் 2 வேரியண்ட்களிலும் இதே இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த இன்ஜினுடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 4.6 வினாடிகளில் எட்டி விடும்.

செயல்திறன் மிக்கதாக இருந்தாலும், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, கோஸ்ட் காரும் அமைதியான மற்றும் மென்மையான பயணத்தை உங்களுக்கு வழங்கும். இதற்கு அட்வான்ஸ்டு சவுண்ட் இன்சுலேஷன் மற்றும் புதிய ஏர் சஸ்பென்ஸன் சிஸ்டம் ஆகியவற்றுக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் கேபின், விசாலமானதாகவும், சொகுசானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் முழுக்க முழுக்க தரமான மெட்டீரியல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த காரின் இருக்கைகள், தரமான லெதர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இருக்கைகளில், ஹீட்டிங் மற்றும் வென்டிலேஷன் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர டேஷ்போர்டில் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் போன்ற பல்வேறு வசதிகளும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நமக்கு வேண்டுமானால், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பெரிய விஷயமாக இருக்கலாம். ஆனால் அம்பானி குடும்பத்திற்கு இதெல்லாம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரை போன்றதுதான்! ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் நாளை ஒரு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தால், அதையும் அவர்கள் உடனே வாங்கலாம். இதற்கிடையே முகேஷ் அம்பானியின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வீடியோ எடுப்பதற்காக, பலரும் பின் தொடர்ந்து சென்றதாக தகவல்!

Article Published On: Friday, May 5, 2023, 17:15 [IST]
English summary
Mukesh ambani rolls royce ghost video price features
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+