ரோல்ஸ்-ராய்ஸில் சாலையை அலறவிட்டது இந்த பெரிய இடத்து பசங்களா? காரை பார்த்தாலே தெரிகிறது!!
ஆகாஷ் அம்பானி (Akash Ambani), இந்தியாவின் பெரும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன். இளவரசருக்கான க்ரீடம் மட்டும் தான் இல்லை, மற்றப்படி இலட்சக் கோடி கணக்கிலான சொத்துக்கு அடுத்த வாரிசாக இருப்பவர். பக்கத்து கடைக்கு செல்வதாக இருந்தால் கூட ரோல்ஸ்-ராய்ஸில் தான் என சொல்லும் அளவிற்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டு கேரேஜில் சொகுசு கார்களாக குவிந்து கிடக்கின்றன. அதில் ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் காரில் தான் ஆகாஷ் அம்பானி தனது மனைவி மற்றும் தங்கை உடன் சாலையில் பயங்கர மாஸ் சீன் காட்டியுள்ளார். என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி பார்க்கலாம்.
மும்பையின் முடிச்சூடா மன்னனாக திகழ்ந்து வருபவர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இவருக்கு 2 மகன்கள் ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி. இதில் ஆனந்த் அம்பானிக்கு சமீபத்தில் உலகமே வியக்கும் வகையில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றதை பார்த்திருப்பீர்கள். இவர்களுக்கு ஒரு தங்கையும் உள்ளார்.

மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் பெயரில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால், சமீபத்தில் நடந்த தம்பி ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் தாய் நீடா அம்பானியுடன் ஆகாஷ் அம்பானி சற்று மனவருத்தத்தில் இருந்ததுபோல் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அது என்ன கதை என்று தெரியவில்லை. இருப்பினும், எப்போதும்போல் ஆகாஷ் அம்பானி ஜாலியாக உள்ளார்.
சமீபத்தில், மனைவி ஷ்லோகா மெஹ்தா மற்றும் தங்கை இஷா அம்பானி உடன் ரோல்ஸ்-ராய்ஸ் டிராப்ஹெட் பாண்டோம் கூபே (Rolls-Royce Phantom Drophead coupe) காரில் மும்பை சாலையொன்றில் ஜாலியாக ரைடு சென்றுள்ளார். அந்த சமயத்தில் காரின் மேற்கூரை முழுவதுமாக திறக்கப்பட்டு இருந்தது. டிரெப்ஹெட் ஆனது ஒரு கன்வெர்டபிள் கார் ஆகும்.

வெள்ளை நிற ரோல்ஸ்-ராய்ஸ் காரில் இவர்கள் செல்வதை பார்க்கும்போது 1940, 50களில் இங்கிலாந்து குடும்பத்தை சேர்ந்த இளவரசர், இளவரசிகள் செல்வதை போன்று இருந்தது. ஆகாஷ் அம்பானியின் ஜாலி ரைடுக்கு பாதுகாப்புக்கு சில பல லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார்கள் சைரன் உடன் செல்வதை வீடியோவில் பார்க்கலாம். கோடி ரூபாயில் விற்பனை செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் கார்களே நம்மில் நிறைய பேருக்கு கனவுதான்.
இத்தகைய வாகனத்தையே பாதுகாப்புக்கு பயன்படுத்துகிறார்கள் எனும்போது அவர்கள் சென்ற ரோல்ஸ்-ராய்ஸ் காரின் விலை எவ்வளவு இருக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள். ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் டிராப்ஹெட் கூபே உலகளவில் மிகவும் அரிதான கார். பாண்டோம் காரை காண்பதே அரிதானதுதான்... அதில் குறிப்பிட்ட டிராப்ஹெட் வெர்சனை காண்பது அதனினும் அரிதானது. வெறும் 6 பாண்டோம் டிராப்ஹெட் கார்கள் மட்டுமே இந்தியாவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய அரிதான காரின் விலை அமெரிக்காவில் 11 லட்சம் டாலர்கள் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.9 கோடி. சிவப்பு நிறத்தில் ரூஃப் மற்றும் பெரிய க்ரோம் சக்கரங்களை கொண்ட ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் டிராப்ஹெட் காரில் 2 கதவுகள் மற்றும் 4 இருக்கைகள் மட்டுமே உள்ளன. 2016ஆம் ஆண்டுடன் விற்பனை நிறுத்தப்பட்ட இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரில் 6.8 லிட்டர் வி12 டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை முகேஷ் அம்பானி குடும்பம் நீண்ட வருடங்களாக வைத்துள்ளது. இந்த மல்டி-மில்லியனர் குடும்பத்தில் கிட்டத்தட்ட 10 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலனவை, ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்கள் ஆகும். முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் கார்களும் இருக்கின்றன என்பது இப்போதுதான் மீண்டும் ஞாபகத்திற்கு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக, கூட செல்லும் பாதுகாப்பு வாகனங்களை வைத்து முகேஷ் அம்பானி வீட்டு பயணத்தை கணிக்க முடியும். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ரேஞ்ச் ரோவர் கார்கள் 10க்கும் மேற்பட்டவை செல்வதால், ஆகாஷ் அம்பானி, அவரது மனைவி மற்றும் தங்கை உள்ளிட்டோரது இந்த பயணம் அதிபாதுகாப்பு மிக்கதாக இருந்துள்ளது. மும்பை சாலையில் சென்ற இந்த ரூ.9 கோடி மதிப்பிலான ரோல்ஸ்-ராய்ஸ் காருக்கே 2 ரேஞ்ச் ரோவர் கார்களை தனியாக பாதுகாப்புக்கு வைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








