எதோ கார் வாங்கற மாதிரி 150 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கிய குடும்பம்! பூஜைக்கு கொஞ்ச நேரம் வரக்கூட டைம் இல்ல!

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. பண்டிட் சந்திரசேகர் (Pandit Chandrashekar) என்பவரின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், ஹெலிகாப்டர் ஒன்றுக்கு பண்டிட் சந்திரசேகர் (Helicopter) பூஜை செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

அவர் வழக்கமான ஹிந்து பாரம்பரிய முறைப்படி, ஹெலிகாப்டருக்கு தீபாராதனை காட்டி, தேங்காய் உடைத்து பூஜை செய்துள்ளார். பொதுவாக புதிய வாகனங்களை ஷோரூமில் இருந்து டெலிவரி எடுத்த கையோடு, நேராக கோயிலுக்கு சென்று பூஜை செய்து ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களின் வழக்கம். அப்படிதான் புதிதாக வாங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டருக்கும் பூஜை செய்யப்பட்டுள்ளது.

Airbus ACH160 Helicopter

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, மிகவும் விலை உயர்ந்த ஏர்பஸ் ஏசிஹெச்160 (Airbus ACH160) ஹெலிகாப்டர் ஆகும். இதன் மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய் என கார்டாக் தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது. இவ்வளவு விலை உயர்ந்த ஏர்பஸ் ஏசிஹெச்160 ஹெலிகாப்டரை புதிதாக வாங்கியிருப்பது யார் என தெரியுமா?

இந்தியா மட்டுமல்லாது, உலக அளவிலும் முன்னணி செல்வந்தர்களில் ஒருவராக உள்ள முகேஷ் அம்பானி (Mukesh Ambani) குடும்பத்தினர்தான், இந்த வைரல் வீடியோவில் நாம் பார்க்கும் ஏர்பஸ் ஏசிஹெச்160 ஹெலிகாப்டரை வாங்கியுள்ளனர். அவர்களின் புதிய ஹெலிகாப்டருக்கு பூஜை செய்த பண்டிட் சந்திரசேகர், முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு நெருக்கமான ஜோதிடர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mukesh Ambani s Airbus ACH160 Helicopter Vahan Puja

ஏர்பஸ் ஏசிஹெச்160 ஹெலிகாப்டரில், 2 சஃப்ரான் அரானோ 1ஏ டர்போசாஃப்ட் இன்ஜின்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 1,300 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்தவை. இந்த ஏர்பஸ் ஏசிஹெச்160 ஹெலிகாப்டர் மணிக்கு 255 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்ய கூடிய திறனை பெற்றுள்ளது.

ஏர்பஸ் ஏசிஹெச்160 தவிர, முகேஷ் அம்பானி குடும்பத்திடம் இன்னும் ஏராளமான ஹெலிகாப்டர்கள் உள்ளன. இதில், டாபின் (Dauphin) மற்றும் சிக்கோர்ஸ்கை 576 (Sikorsky S76) போன்ற ஹெலிகாப்டர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த ஹெலிகாப்டர்களை, முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் மட்டுமல்லாது, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் பயன்படுத்துகின்றனர்.

முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் ஹெலிகாப்டர்கள் மட்டுமல்லாது, ஏராளமான ப்ரைவேட் ஜெட்களும் (Private Jets) உள்ளன. அவர்களிடம் ஒட்டுமொத்தமாக 10 ப்ரைவேட் ஜெட்கள் இருக்கின்றன. இதில், போயிங் 737 மேக்ஸ் 9 (Boeing 737 MAX 9) மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

போயிங் 737 மேக்ஸ் 9 ப்ரைவேட் ஜெட் விமானத்தை, முகேஷ் அம்பானி குடும்பத்தினர், சமீபத்தில்தான் வாங்கினர். இதன் மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த ப்ரைவேட் ஜெட்களில் ஒன்றாக இந்த போயிங் 737 மேக்ஸ் 9 கருதப்படுகிறது.

இது போன்ற மிகவும் விலை உயர்ந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் ப்ரைவேட் ஜெட்கள் மட்டுமல்லாது, ஏராளமான விலை உயர்ந்த சொகுசு கார்களையும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வைத்துள்ளனர். அவர்களிடம் ஒட்டுமொத்தமாக 170 சொகுசு கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) மற்றும் லம்போர்கினி (Lamborghini) போன்ற நிறுவனங்களின் கார்கள் அடங்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முகேஷ் அம்பானி குடும்பத்தினர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவர்கள். முகேஷ் அம்பானி குடும்ப உறுப்பினர்கள் மிகவும் புகழ்பெற்ற கோயில்களுக்கு வந்து செல்வதை அடிக்கடி நாம் பார்க்க முடியும். இப்படி ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால்தான், புதியதாக வாங்கிய ஹெலிகாப்டருக்கு, ஹிந்து பாரம்பரிய முறைப்படி பூஜை செய்துள்ளனர்.

ஆனால் தற்போது வைரலாக பரவி வரும் ஏர்பஸ் ஏசிஹெச்160 ஹெலிகாப்டருக்கு பூஜை செய்யப்பட்ட வீடியோவில், முகேஷ் அம்பானி குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் யாரையும் காண முடியவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பூஜையில் அவர்கள் கலந்து கொள்ளாதது ஏன்? என்பதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, September 1, 2025, 18:50 [IST]
English summary
Mukesh ambanis airbus ach160 helicopter vahan puja video check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+