சைரன், ஜாமர் உடன் அணிவகுத்த 15 கார்கள்! வந்தது மோடியோ, ஸ்டாலினோ இல்ல! மொத்த ஊரையும் மிரள விட்டது அவரா!

குடியரசு தலைவர், பிரதமர், முதல் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் போன்ற மிகவும் முக்கியமான மனிதர்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது, அவர்களின் பாதுகாப்பிற்காக நிறைய வாகனங்கள் உடன் வரும். இதை 'கான்வாய்' (Convoy) என்பார்கள். அரசாங்க பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமல்லாது, ஒரு சில தொழில் அதிபர்களின் கான்வாய்களும் கூட பிரம்மிக்க வைக்க கூடியதாகவே இருக்கும். மிக முக்கியமாக இந்தியா, ஆசியா மற்றும் உலக அளவில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருக்க கூடிய ரிலையன்ஸ் (Reliance) நிறுவனத்தின் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) கான்வாய் மிரட்டலான ஒன்றாக இருந்து வருகிறது.

ஆனால் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வாகன கான்வாயை நேரில் பார்க்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்து விடாது. இருப்பினும் முகேஷ் அம்பானியின் பிரம்மிக்க வைக்கும் வாகன கான்வாயை பார்க்க வேண்டும் என நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், உங்களுக்குதான் இந்த செய்தி.

Mukesh Ambani s Rs 40 Crore Worth Car Convoy

முகேஷ் அம்பானியின் வாகன கான்வாய் சாலையில் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மும்பை (Mumbai) நகரில் எடுக்கப்பட்ட இந்த வைரல் வீடியோவில் மொத்தம் 15 கார்களை காண முடிகிறது.

அதாவது 6 ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) கார்கள், 4 எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) கார்கள், 2 மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் (Mercedes Benz V-Class) கார்கள், 2 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 கார்டு (Mercedes Benz S680 Guard) கார்கள் மற்றும் 1 டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) என மொத்தம் 15 கார்களை எல்லாம் நம்மால் பார்க்க முடிகிறது.

Mukesh Ambani

இதில் நிறைய கார்களின் மேலே சைரன்கள் மற்றும் 'நெட்வொர்க் ஜாமர்' ஆகியவற்றை எல்லாம் நீங்கள் காணலாம். இந்த கான்வாயில் நாம் காணும் கார்களில், 2 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 கார்டு கார்களும் மிகவும் முக்கியமானவை ஆகும். இந்த 2 கார்களின் மதிப்பு மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் ஆகும்.

அதாவது ஒரு காரின் விலை (Price) சுமார் 10 கோடி ரூபாய். இது புல்லட் ப்ரூஃப் கார் ஆகும். முகேஷ் அம்பானி போன்ற உலகின் மிக முக்கியமான தொழில் அதிபர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு வழங்கும் வேலையை, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 கார்டு கார் மிக நீண்ட காலமாக செய்து கொண்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 கார்டு காருடைய ஒரு கதவின் எடையே சுமார் 250 கிலோ என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 கார்டு காரில், 612 ஹெச்பி பவர் மற்றும் 830 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வி12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த காரில், டயர் பஞ்சர் ஆனாலும் கூட, 30 கிலோ மீட்டர்கள் தூரம் வரை பயணம் செய்ய கூடிய வகையிலான டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே டயர் பஞ்சர் ஆனாலும் கூட, இந்த காரின் உள்ளே இருக்க கூடிய முக்கியமான மனிதர்கள், பாதுகாப்பான இடங்களை சென்று சேர்ந்து விட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த கான்வாயில் நாம் பார்க்கும் கார்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக இருக்கலாம். முகேஷ் அம்பானி போன்ற மிகவும் முக்கியமான தொழில் அதிபர்களுக்கு, இது போன்ற மிகவும் விலை உயர்ந்த கார்களில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றுதான்.

More from DriveSpark

Article Published On: Monday, November 25, 2024, 13:31 [IST]
English summary
Mukesh ambanis rs 40 crore worth car convoy viral video all details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+