இனி டோல்கேட்ல நிக்கவே வேணாம்! எவ்வளவு வேகமா போனாலும் கார்டு ஸ்கேன் ஆகிடும்!

இந்தியாவின் முதல் மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ சுங்கசாவடி பயன்பாட்டிற்கு வந்தது. இந்தியா முழுவதும் உள்ள சுங்கசாவடிகளில் வாகனங்கள் நிற்காமல் செல்லும் போதும், சுங்க கட்டணம் வசூலிக்கும் தொழிற்நுட்பத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியாக முதல் டோல்கேட் மாற்றப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கசாவடிகள் அமைத்து வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கசாவடிகளில் வாகனங்கள் நின்று செல்வதால் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஃபாஸ்டேக் கார்டை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. இதனால் கூட்ட நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதுமான அளவில் குறையவில்லை.

Multi Lane Free Flow Tolling system

இந்நிலையில் இதை குறைக்க இ்நதியாவில் சுங்கசாவடிகளில் வாகனங்கள் நிற்காமல் கடந்து சென்றாலும் அந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டை வைத்து சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன்படி முதல் சுங்கசாவடியாக குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 48ல் உள்ள சோர்யாஸி என்ற பகுதியில் உள்ள சுங்கசாவடியை இந்தியாவின் முதல் மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ சுங்கசாவடியாக மாற்றியுள்ளது.

இதனால் இந்த சுங்கசாவடி வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுங்கசாவடியில் நிறத்த தேவையில்லை. இங்கு அமைக்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் ரீடர்கள் வாகனம் வேகமாக சென்றாலும் அதை ஸ்கேன் செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டடுள்ளது. இது போக வாகனத்தின் நம்பர் பிளேட்டை கண்காணிக்கும் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.ஒரு வேளை ஃபாஸ்ட்டேக் கார்டு ரீட் செய்யவில்லை என்றாலும் இந்த கேமரா ரெக்கார்டு செய்த நம்பர் பிளேட்டை வைத்து சுங்ககட்டணத்தை வசூலித்துவிடும்.

Multi Lane Free Flow Tolling system

இதற்காக மத்திய அரசு ஐசிஐசிஐ வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான தொழிற்நுட்ப ஏற்பாடுகளை அந்த வங்கிதான் வழங்கியுள்ளது. இந்த தொழிற்நுட்பம் இந்த சுங்கசாவடியுடன் நிறத்தப்படபோவதில்லை. இந்த நிதியாண்டிலேயே 25 சுங்கசாவடிகளில் இதை அமலுக்கு கொண்டு வரதிட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஹாரியானா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 44ல் உள்ள காரவுண்டா பிளாசா பகுதியில் அடுத்ததாக இந்த செயல்பாடு துவங்குகிறது.

இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்துவடவது இந்தியாவிலங் சுங்கசாவடி முறையில் ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையப்போகிறது. இதனால் சுங்கசாவடிகள் வேகமாக செயல்படும். அதிக வாகனங்களை கையாளும் திறன் கொண்டதாக மாறும். இதனால் மக்கள் நேரம் வீணாகாது. அதே நேரம் மாசு வெகுவாக குறையும். இதனால் இந்தியாவில் உள்ள அத்தனை சுங்கசாவடிகளையும் இப்படி மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் மக்கள் சுங்கசாவடிகளில் காத்திருக்க வேண்டிய தேவை குறையும். மக்கள் வேகமாக சுங்கசாவடியை கடந்து செல்ல முடியும். சுங்கசாவடியில் தேவையில்லாமல் ஏற்படும் பிரச்சனை மற்றும் குழப்பங்கள் குறையும். சுங்கசாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணிச்சுமை குறையும். இந்த தொழிற்நுட்பம் பெரும்பாலும் தானியங்கியாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்ததது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள சுங்கசாவடிகளை இப்படி தானியங்கியாக மாற்றி மக்கள் நின்று செல்ல தேவையில்லை என்ற சூழ்நிலை உருவானாலும் மக்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். இதனால் மக்கள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள். இது மிக விரைவாக இந்தியா முழுவதும் அமலுக்கு வரவேண்டும் என்பதே மக்கள் விருப்பம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 14, 2025, 9:20 [IST]
English summary
Multi lane free flow tolling system india launch
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+