அம்பானி குடும்பம் மட்டும்தான் இப்படி பண்ணனும்னு சட்டம் இருக்கா என்ன? வாங்கி இருக்கும் கார் அப்படிப்பட்டது!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) அளவுக்கு நம் இந்தியாவில் எந்த பணக்காரர்களும் இல்லை என்றாலும், சிலர் முகேஷ் அம்பானிக்கு இணையாக அவ்வப்போது ஏதேனும் ஒரு செயல்களில் ஈடுப்படுகின்றனர். அத்தகையவர்களுள் ஒருவர்தான், அதார் பூனவல்லா (Adar Poonawalla). சுமார் 1.5 லட்சம் கோடி சொத்து மதிப்புக் கொண்ட பிரபல இந்திய தொழிலதிபர் சைரஸ் எஸ்.பூனவல்லாவின் ஒரே மகன். ஆட்டோமொபைல் பிரியரான அதார் பூனவல்லா புதியதாக விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை சொந்த பயன்பாட்டிற்காக அதார் பூனவல்லா வாங்கவில்லை.

அதனை யாருக்காக வாங்கினார் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம். உலகளவில் பிரபலமான பிரிட்டிஷ் கார் நிறுவனமான லேண்ட் ரோவரில் இருந்து பல்வேறு விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றுள் பலரது கவனத்தை ஈர்த்த கார்கள் என்றால், ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டரை சொல்லலாம்.

adar poonawalla buys defender 110

பொதுவாகவே, லேண்ட் ரோவர் நிறுவனத்தின் கார்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவைகளாக, பிரம்மாண்டமானவைகளாக இருக்கும். ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்கள் அவற்றுள் ஒருபடி மேலே என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அளவிற்கு பிரபலமான காரை தான் தற்போது தொழிலதிபர் அதார் பூனவல்லா வாங்கியுள்ளார்.

தந்தை சைரஸ் எஸ்.பூனவல்லா கட்டியெழுப்பிய சாம்ராஜ்ஜியத்தில் எளிதாக அரியணை ஏறிய அவரது மகன் அதார் பூனவல்லா தற்போது செரும் இன்ஸ்டிட்யூட் (Serum Institute) நிறுவனத்தின் சிஇஓ ஆக உள்ளார். மேலும், பூனவல்லா ஃபின்கார்ப் (Poonawalla Fincorp)-இன் தலைவராகவும் தற்சமயம் அதார் பூனவல்லா உள்ளார்.

adar poonawalla buys defender 110

இந்த அளவிற்கு செல்வ, செழிப்பில் திகழும் அதார் பூனவல்லா, அவ்வப்போது விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்கிக் குவிக்கக்கூடியவர் என்பதை பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். சமீபத்தில்கூட, பல கோடி ரூபாய் விலை மதிப்பிலான பெண்ட்லீ பெண்டைகா (Bentley Bentayga) காரை அதார் பூனவல்லா வாங்கி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய விலையுயர்ந்த காரை இவர் வாங்கியுள்ளார். பெண்ட்லீ கார் அளவிற்கு டிஃபெண்டர் காரின் விலை அதிகம் இல்லை என்றாலும், டிஃபெண்டர் காருக்காக அதார் பூனவல்லா சில கோடி ரூபாய்களை நிச்சயமாக செலவு செய்து இருப்பார். ஏனெனில், அதார் பூனவல்லா வாங்கியிருப்பது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 எக்ஸ் கார் ஆகும்.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.42 கோடியில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. அதார் பூனவல்லா வாங்கியிருக்கும் டிஃபெண்டர் 110 எக்ஸ் கார் ஆனது மேட் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டதாக உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த புதிய டிஃபெண்டர் காரை அதார் பூனவல்லா தனது சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த போவதில்லை; தனது பாதுகாவலர்களின் வாகனமாக இதனை பயன்படுத்த உள்ளார்.

அதார் பூனவல்லா தனது புதிய பெண்ட்லீ பெண்டைகா காரில் செல்லும்போது, அவரது பாதுகாவலர்கள் புத்தம் புதிய டிஃபெண்டர் 110 எக்ஸ் காரில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிஃபெண்டர் 110 எக்ஸ் காரில் 5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதனுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிலதிபர் அதார் பூனவல்லாவின் பாதுகாவலர்களின் பயன்பாட்டிற்காக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி, ரேஞ்ச் ரோவர் வோக், டிஸ்கவரி உள்ளிட்ட விலையுயர்ந்த கார்கள் ஏற்கனவே வரிசைக்கட்டி நிற்கின்றன. பூனவல்லாவின் குடும்பம் எந்த அளவிற்கு வளர்ந்துக் கொண்டே போகிறதோ அதே அளவிற்கு அவர்களுக்கான பாதுகாப்பும் பெரியதாகி கொண்டே செல்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2025, 11:52 [IST]
English summary
Multi millionaire adar poonawalla buys land rover defender 110 x
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+