என்ன தான் பணம் இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்.. ரூ.2 கோடி காரை போகிற போக்கில் வாங்கி போடும் மில்லியனர் குடும்பம்

வர்கீஸ் மூலன்ஸ் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் (Varghese Moolans Group of Companies), இந்தியாவில் செயல்படும் மிக பெரும் ஏற்றுமதி நிறுவனங்களுள் ஒன்று. கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. அதாவது, இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வசிப்பது கேரளாவில் ஆகும். வர்கீஸ் மூலன் என தனது பெயரையே தனது நிறுவனத்திற்கும் சூட்டியுள்ள அவர், தனது மகனின் 40வது பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த போர்ஷே (Porsche) காரை பரிசாக வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த மல்டி-மில்லியனர் குடும்பத்தை பற்றியும், இவர்கள் குடும்பத்தில் புதியதாக இணைந்துள்ள போர்ஷே காரை பற்றியும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.

சவுதி அரேபியாவில் பெரும் தொழிலதிபராகிய இந்தியர்கள் ஏராளம். குறிப்பாக, கேரள மக்களுக்கும் சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே ஓர் நெருங்கிய பிணைப்பு உள்ளது. அவ்வாறு, 1984ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் சிறு சூப்பர் மார்க்கெட்டை ஆரம்பித்தவர், வர்கீஸ் மூலன். அதன்பின், 1990ஆம் காலக்கட்டத்தில் அந்த நாட்டில் பெரும் பணக்காரராக வேகமாக வளர ஆரம்பித்தார்.

multi-millionaire gifts porsche to son

இவரது வர்கீஸ் மூலன்ஸ் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் கொண்டில்லாத நிறுவனமே கிடையாது என சொல்லலாம். அதாவது, சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பில் இருந்து விவசாயம், ஏற்றுமதி & இறக்குமதி, இ-லாஜிஸ்டிக்ஸ், ஜவுளி, ஒட்டல்கள், கோல்டு & டைமண்ட்ஸ், பியூட்டி பார்லர்கள் உள்பட சினிமா துறை வரையில் வர்கீஸ் மூலன் கால்பதிக்க துறையே கிடையாது.

இவரது தயாரிப்பில் உருவானதுதான் நடிகர் மாதவனின் 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் ஆகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், வர்கீஸ் மூலனின் மகன் விஜய் தான் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். சினிமா திரைப்படங்களை தயாரிப்பதற்காக விஜய் மூலன் டால்கீஸ் என்கிற நிறுவனத்தை துவங்கி அதற்கு ஓனராக இருக்கும் விஜய் வர்கீஸ் மூலனின் கீழ் தான் தற்சமயம் வர்கீஸ் மூலன்ஸ் க்ரூப் செயல்படுகிறது.

multi-millionaire gifts porsche to son

இந்த நிலையில், தனது மகனின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு வர்க்ஸ் மூலன் விலையுயர்ந்த போர்ஷே 911 காரை பரிசாக வழங்கியுள்ளார். சிவப்பு நிறத்திலான தனது புதிய போர்ஷே காரின் படங்களை விஜய் வர்கீஸ் மூலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த போர்ஷே நிறுவனம் இந்தியாவில் அதன் 911 கர்ரேரா கார்களை கடந்த நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது.

911 கர்ரேரா, கர்ரேரா 4 ஜிடிஎஸ் என 2 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்ட போர்ஷே 911 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2 கோடியில் இருந்து ஆரம்பிக்கின்றன. 2 கதவுகளை மட்டுமே கொண்ட கூபே ஸ்டைலிலான காரான போர்ஷே 911, இந்தியாவில் மொத்தம் 15 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றுள், விஜய் மூலன் பெற்றிருப்பது சிவப்பு நிறத்திலான போர்ஷே 911 கார் ஆகும்.

multi-millionaire gifts porsche to son

கடந்த நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய 911 காரில் புதிய ஹெட்லைட்கள், OLED டெயில்லேம்ப்கள் மற்றும் ஆக்டிவ் ஏரோ வசதிகள் உள்ளிட்டவை புதிய வசதிகளாக வழங்கப்பட்டுள்ளன. முன்பு இருந்த பழைய செமி-டிஜிட்டல் திரை மற்றும் அனலாக் டச்சோமீட்டருக்கு பதிலாக புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. போர்ஷே 911 கர்ரேரா காரில் 3.0 லிட்டர் ட்வின்-டர்போ பாக்ஸர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

இதனுடன் 8-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அதுவே, 911 கர்ரேரா 4 ஜிடிஎஸ் ஆனது ஹைப்ரீட் கார் ஆகும். இதில், 3.6 லிட்டர் ஃபிளாட்-6 சிலிண்டர் என்ஜின் எலக்ட்ரிக் மோட்டார் உடன் பொருத்தப்படுகிறது. இதனுடன் 8-ஸ்பீடு பிடிகே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மேலும், 911 கர்ரேரா 4 ஜிடிஎஸ் கார் ஆல்-வீல்-டிரைவ் வெர்சனில் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே குறிப்பிடப்பட்ட ரூ.2 கோடி ஆனது போர்ஷே 911 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்சங்கள் அதிகமாக வரும். இத்தகைய காரை தான் தனது மகனின் 40வது பிறந்தநாளுக்காக தொழிலதிபர் வர்கீஸ் மூலன் பரிசளித்துள்ளார். காரை சிவப்பு நிறத்தில் பார்த்தவுடன் ஃபெராரி என நினைத்துவிட்டோம். ஆனால் இது போர்ஷே 911 ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 12, 2024, 12:03 [IST]
English summary
Multi millionaire varghese moolan gifts porsche 911 car to his son vijay check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X