விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் செய்த காரியம்... வீடியோவை பாத்ததும் மொத்த இந்தியாவே ஆடி போயிருச்சு...
வட இந்திய (North India) மாநிலங்களில் தற்போது மிக கடுமையான பனி பொழிவு (Fog) நிலவி வருகிறது. டெல்லி (Delhi) மற்றும் உத்தர பிரதேசம் (Uttar Pradesh) போன்ற மாநிலங்கள், அடர்த்தியான மூடுபனி பிரச்னையால் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
மூடு பனி பிரச்னை, பல்வேறு சாலை விபத்துக்களுக்கும் (Road Accidents) காரணமாக அமைந்து வருகிறது. வட இந்திய மாநிலங்கள் முழுக்க மூடு பனி காரணமாக நிறைய சாலை விபத்துக்கள் அரங்கேற தொடங்கியுள்ளன. இந்த வரிசையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 27) காலை நடைபெற்ற ஒரு சாலை விபத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை சுமார் 8 மணியளவில் இந்த சாலை விபத்து நடைபெற்றுள்ளது. இதில், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டுள்ளன. மூடு பனிதான் இந்த சாலை விபத்திற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இந்த கொடூரமான சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் இன்னும் பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிகிறது. இதில் நிறைய பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக மருத்துவமனைகளில் இருந்து வெளியாகி கொண்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சாலை விபத்தில் மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. சாலை விபத்தில் சிக்கிய வாகனங்களில், பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்த வாகனமும் ஒன்றாகும்.

இந்த வாகனத்தில் இருந்து கோழிகளை எல்லாம் ஒரு சிலர் திருடி சென்றுள்ளனர். அவர்கள் விபத்து நடைபெற்ற இடத்தை சேர்ந்த உள்ளூர் மக்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஒரு சிலர் சாக்கு பைகளை கொண்டு வந்து நிறைய கோழிகளை திருடி சென்றுள்ளனர். இன்னும் சிலரோ தகவல் தெரிந்ததும், டூவீலர்களில் வந்து கோழிகளை திருடி சென்றுள்ளனர்.
இன்னும் கொடுமையான ஒரு விஷயம் என்னவென்றால், கோழிகளை திருடி செல்ல வேண்டாம் என, சம்பந்தப்பட்ட வாகனத்தின் டிரைவர், மக்களிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், மக்கள் கோழிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் காரணமாக சில நிமிடங்களில் வாகனமே காலியாகி விட்டதாக கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது உண்மையிலேயே வருத்தமான ஒரு விஷயம்தான். மற்றவர்களின் உடைமைகளை யாரும் திருட கூடாது. அதுவும் விபத்து போன்ற சூழல்களை சாதகமாக்கி கொண்டு, மற்றவர்களின் உடைமைகளை திருடுவதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நேரத்தில் அவர்கள் முதலுதவி போன்ற உதவிகளையே செய்திருக்க வேண்டும்.
சரி, மூடு பனி நிலவ கூடிய சமயங்களில் சாலை விபத்துக்களை தவிர்க்க வேண்டுமென்றால், மிதமான வேகத்தில் செல்லுங்கள். உங்கள் வாகனத்திற்கும், முன்னால் உள்ள வாகனத்திற்கும் இடையே போதுமான இடைவெளியை பின்பற்றுவதும் அவசியம். உங்கள் கவனம் முழுக்க முழுக்க சாலையில்தான் இருக்க வேண்டும்.
அதாவது செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது போன்ற செயல்பாடுகளை தவிர்த்து விடுங்கள். அதேபோல் மது அருந்தி விட்டும் வாகனம் ஓட்ட வேண்டாம். லேன் மாறும்போது கவனமாக இருங்கள். வளைவுகளில் திரும்பும்போது, இன்டிகேட்டர்களை ஒளிர விட்டு, மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். உங்கள் பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள்.
இதற்கிடையே விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்து பிராய்லர் கோழிகளை மக்கள் திருடி செல்லும் வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோ, பார்ப்பதற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








