பெண் செய்த முட்டாள்தனத்தால் நடந்த பயங்கரம்... உருக்குலைந்த பஸ், கார்கள்! மொத்த ரோடும் ஸ்தம்பிச்சு போயிருச்சு!
இந்தியாவில் ஒரு சில வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதே கிடையாது. ராங் சைடில் வாகனங்களை இயக்குவது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களில் அவர்கள் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த வரிசையில் கேரள மாநிலம் கொச்சி பகுதியில் நடைபெற்றுள்ள ஒரு சாலை விபத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவரின் அலட்சியமே இதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
சம்பவத்தன்று ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவர் சாலையின் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு செல்ல முயற்சி செய்துள்ளார். மிகவும் பிஸியாக காணப்பட்ட அந்த சாலையில் ஆபத்தான முறையில் அவர் இதனை செய்துள்ளார். அப்போது அவ்வழியாக டூவீலரில் ஒரு ஜோடி வந்தது.

அதன் ரைடர், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பெண் ஒருவர் சாலையை கடப்பதை பார்த்ததும், டூவீலரை நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த டூவீலருக்கு பின்னால் வந்த பஸ்ஸின் டிரைவரால் சரியான நேரத்தில் பிரேக் பிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக அந்த பஸ், டூவீலர் மீது மோதி, டூவீலர் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் மோதியது.
ஆனால் இந்த பிரச்னை இந்த 3 வாகனங்களுடன் முடிந்து போகவில்லை. முதல் பஸ்சுக்கு பின்னால் வந்த ஏராளமான பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. அத்துடன் ஒரு சில கார்களும் இந்த பயங்கரமான சாலை விபத்தில் சிக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சாலை விபத்தில் நிறைய பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் பஸ்கள், கார்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் பயங்கரமாக சேதமும் அடைந்துள்ளன. இந்த விபத்தின்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் இந்த சாலை விபத்து எப்படி நடைபெற்றது? என்பதை நம்மால் தெளிவாக காண முடிகிறது.
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் திடீரென சாலையை கடக்க முயன்ற பெண்தான், இந்த சாலை விபத்திற்கு முக்கியமான காரணம் ஆவார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காகவே டூவீலர் ரைடர், டூவீலரின் பிரேக்கை பிடித்தார். ஆனால் பின்னால் அடுத்தடுத்து வந்த வாகனங்களால் உடனடியாக பிரேக் பிடித்து நிற்க முடியவில்லை.
இதன் காரணமாக அவை ஒன்றோடு ஒன்று மோதி கொண்டுள்ளன. இந்த சாலை விபத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். சாலையில் ஒரு வாகனத்தை பின் தொடரும்போது பாதுகாப்பான இடைவெளியை நாம் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தால், நம்மாலும் வாகனத்தை கட்டுப்படுத்தி நிறுத்த முடியும்.
இல்லாவிட்டால் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோத நேரிடும். கொச்சியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தை பொறுத்தவரையில், சாலை விபத்தில் சிக்கி கொண்ட வாகனங்கள் பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. எனினும் நல்ல வேளையாக இந்த சாலை விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றினாலே, இது போன்ற சாலை விபத்துக்களை எல்லாம் தவிர்த்து விட முடியும். ஆனால் வாகன ஓட்டிகள் ஒரு சிலர் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். அந்த ஒரு சிலரின் தவறு, நிறைய பேருக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே சாலைக்கு வந்து விட்டால், பொறுப்புடன் செயல்படுவது நல்லது.


Click it and Unblock the Notifications








