ஒரே இடத்தில் அடுத்தடுத்து பிரேக் டவுன் ஆகி நின்ற கார்கள்! இந்த இடம் இவ்ளோ ஆபத்தானதா! முன்னாடியே தெரியாம போச்சே

இந்தியாவில் தற்போது விடுமுறை காலம் (Holiday Season) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகை முடிந்துள்ள நிலையில், அடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு (New Year Celebrations) மக்கள் தயாராகி வருகின்றனர். இதன் காரணமாக முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

விடுமுறை காலம் காரணமாக வாகனங்களால் சாலைகள் ஸ்தம்பித்து போன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலை தளங்களில் நம்மால் தற்போது அதிகமாக காண முடிகிறது. இந்த வரிசையில் தற்போது ஒரு வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

Multiple Car Breakdowns On Mumbai-Pune Expressway

மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே (Mumbai-Pune Expressway) சாலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், நிறைய கார்கள் ஒரே இடத்தில் பிரேக் டவுன் ஆகி நின்று கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த கார்களின் பானெட்கள் திறந்து வைக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரே இடத்தில் இத்தனை கார்கள் ஏன் பிரேக் டவுன் ஆனது? என்பது உறுதியாக தெரியவில்லை.

எனினும் இதற்கு ஒரு சில காரணங்களை நம்மால் யூகிக்க முடிகிறது. மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையானது, மேற்கு தொடர்ச்சி மலை (Western Ghats) வழியாக செல்கிறது. எனவே ஒரு சில இடங்களில் சாலைகள் செங்குத்தாக இருக்கும். இப்படிப்பட்ட இடத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற காரணத்தால், க்ளட்ச் உள்ளிட்ட பாகங்களின் பயன்பாடு அதிகரித்து, ஓவர்ஹீட் காரணமாக இப்படி பிரேக் டவுன் ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது போன்ற பிரச்னைகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக ஒரு சில விஷயங்களை உறுதி செய்து கொள்வது நல்லது. முதலில் உங்கள் காரின் பேட்டரிகளை (Batteries) பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அவற்றை மாற்றி விடுங்கள்.

அதேபோல் ஏர் ஃபில்டர்களையும் (Air Filters) பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அசுத்தமான ஏர் ஃபில்டர்களை மாற்றுவதன் மூலம், சுத்தமான காற்று உங்கள் காரின் இன்ஜினை சென்றடைவதை உறுதி செய்து கொள்ள முடியும். இது உங்கள் காரின் மைலேஜ் (Mileage) மற்றும் செயல்திறனை அதிகரிக்க உதவி செய்யும்.

இதுதவிர பிரேக்குகளை பரிசோதனை செய்வதும் முக்கியமானது. நன்றாக செயல்படும் பிரேக்குகள்தான், உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். எனவே இதில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். இவை எல்லாம் தவிர ஸ்பேர் டயர்களில் போதுமான அளவு காற்று உள்ளதா? அவை நல்ல கண்டிஷனில் இருக்கிறதா? என்பதையும் பார்த்து கொள்ளுங்கள்.

மேலும் இன்ஜின் ஆயிலின் அளவுகளை சரிபார்த்து கொள்வதும் நன்மை பயக்கும். விடுமுறை காலத்தை மகிழ்ச்சியாக கொண்டாட வெளியூர் பயணங்களுக்கு நீங்கள் திட்டமிட்டிருந்தால், இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம். இவற்றை பின்பற்ற தவறினால், நடுவழியில் பிரச்னைகள் ஏற்பட்டு, மோசமான அனுபவத்தை சந்திக்க நேரிடலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 26, 2023, 15:11 [IST]
English summary
Multiple car breakdowns on mumbai pune expressway viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+