புல்லட் ரயில்லாம் ஓரமா நில்லு! வந்தே பாரத் இனி ராக்கெட் வேகத்தில் பறக்கும்! அண்ணாந்து பாக்கும் உலக நாடுகள்!
இந்திய பயணிகள் மத்தியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு (Vande Bharat Express Trains), மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. எனவே பல்வேறு புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் ஏற்கனவே சேவையில் உள்ள வழித்தடங்களிலும் கூடுதலாக புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு சென்னை-மைசூர் வழித்தடத்தை எடுத்து கொள்ளலாம். இந்த வழித்தடத்தில் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் மத்தியில் கிடைக்கும் அதிகப்படியான வரவேற்பை பொறுத்து, கூடுதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வரிசையில் மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கூடிய விரைவில் இயக்கப்படவுள்ளது. இந்த வழித்தடத்தில் ஏற்கனவே 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த வரிசையில் அறிமுகம் செய்யப்படவுள்ள 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

இது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் புதிய வெர்ஷன் ஆகும். அதாவது தற்போது செயல்பாட்டில் உள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுடன் ஒப்பிடும்போது, இது வெகுவாக மெருகேற்றப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கூடுதல் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பாதுகாப்பு வசதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆற்றல் சேமிப்பிலும் இந்த புதிய வெர்ஷன் தலைசிறந்து விளங்கும். எனவே பயணிகளின் பயண அனுபவம் மேம்பட்டதாக இருக்கும். இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில், அதிநவீன ஏசி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிருமிகள் இல்லாத காற்றை பயணிகள் சுவாசிக்க முடியும். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது, மணிக்கு 160 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 140 வினாடிகளில் எட்டி விடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். முந்தைய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த வேகத்தை எட்டுவதற்கு 145 வினாடிகள் எடுத்து கொள்ளும். எனவே இதனை ஆக்ஸலரேஷனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் என கூறலாம். இது வேகமாக பயணம் செய்ய கூடியது என்பதால், மும்பை-அகமதாபாத் இடையேயான பயண நேரத்தில் சுமார் 45 நிமிடங்கள் குறையும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே விரைவாக பயணம் செய்ய வேண்டும் என நினைக்க கூடிய பயணிகள் மத்தியில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை (Chennai) நகரில் உள்ள ஐசிஎஃப் (ICF - Integral Coach Factory) தொழிற்சாலையில்தான், இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் உருவாக்கப்படுகின்றன.
மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் இயங்கவுள்ள 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இறுதிகட்ட சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்து விட்டன. எனவே கூடிய விரைவில் இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மும்பை மற்றும் அகமதாபாத் இரண்டுமே இந்தியாவின் பொருளாதாரத்தில் (Economy) முக்கிய பங்காற்றும் நகரங்கள் ஆகும். மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய 2 நகரங்களும் பொருளாதார வளர்ச்சியில் மேலும் பல்வேறு புதிய உச்சங்களை எட்டுவதற்கு, இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உதவி செய்யலாம்.
மும்பை-அகமதாபாத் இடையேயான இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது, வதோதரா, சூரத், வாப்பி மற்றும் போரிவலி ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








