மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் என்னதான் ஆச்சு? வேலை நடக்குதா இல்லையா? முழு விபரம் இதோ!
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) தலைமையில் 2027ம் ஆண்டின் இறுதியில் குஜராத்தில் அதன் முதல் கட்ட செயல்பாடுகளைத் தொடங்க உள்ளது. வந்தே பாரத் ரயில்களை எல்லாம் புறம் தள்ளும் வகையில் இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் இந்தியாவின் வேகமான ரயிலாக இது தான் இருக்கும். இந்த புல்லட் ரயில் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜூன் 2024 வரை, திட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகள் சரியாக முடிந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 508 கிலோமீட்டர் பாதையில், மொத்தம் 183 கிலோமீட்டர் வையாடக்ட்களும் 313 கிலோமீட்டர் தூண்களும் கட்டப்பட்டுள்ளன. சூரத் மற்றும் பிலிமோரா இடையே 2026ல் சுமார் 50 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

சுமார் 90 சதவீத ரயில் பாதைகள் உயரமான பாலத்தில் அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயில் பாதையில் பன்னிரண்டு நிலையங்கள் இருக்கும்: குஜராத்தில் எட்டு (அகமதாபாத், ஆனந்த், சபர்மதி, வதோதரா, பருச், வாபி, சூரத் மற்றும் பிலிமோரா) மற்றும் மகாராஷ்டிராவில் நான்கு (விரார், தானே, போயிசர் மற்றும் மும்பை). கூடுதலாக, வதோதரா மற்றும் வாபி இடையேயான சேவைகள் 2027 க்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
2028 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் முழு திட்டத்தையும் முடிக்க NHSRCL இலக்கு வைத்துள்ளது. இந்த அதிவேக சேவை மும்பை மற்றும் அகமதாபாத் இடையே பயண நேரத்தை மூன்று மணிநேரம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த வழித்தடத்தில் அதிவேக ரயில் மும்பை-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும், இது பயணத்திற்கு ஐந்தரை மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.

புல்லட் ரயில் திட்டத்தை முடிப்பதற்கான ஆரம்ப காலக்கெடு டிசம்பர் 2023 ஆகும். இருப்பினும், மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்தல் சிக்கல்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக, காலக்கெடுவைத் நீட்டிக்க வேண்டியிருந்தது. கொரோனா காலத்தில் பணிகள் நிறுத்த வைக்கப்பட்டிருந்தன.
மே 2024க்குள், ஒட்டுமொத்த கட்டுமானம் 44 சதவீதம் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக, குஜராத்தில் வேலை 53 சதவீதமாக இருந்தது, மகாராஷ்டிரா 25.6 சதவீதத்தில் பின்தங்கியுள்ளது. மொத்தமாக 1,390 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் நிறைவடைந்துள்ளது: குஜராத் மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் 960 ஹெக்டேர், மகாராஷ்டிராவில் 430 ஹெக்டேர் நிலம் பயன்படுத்தப்படுகிறது.

"குஜராத்தில் திட்டம் மிகவும் மேம்பட்ட நிலையில் இருப்பதால், முதலில் இங்கு வணிக நடவடிக்கைகளைத் தொடங்கி, கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன் மகாராஷ்டிராவிற்கு சேவைகளை விரிவுபடுத்துவது புத்திசாலித்தனமானது" என்று NHSRCL செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர்களிடம் கூறினார். இதனால் குஜராத் மாநிலத்தில் தான் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் ஓடப்போவது உறுதியாகியுள்ளது.
புல்லட் ரயில் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழ் 2017ல் தொடங்கியது. இது கனெக்டிவிட்டியை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் வழியில் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. முழுமையாகச் செயல்பட்டதும், தற்போது 95 நிமிடங்கள் (1 மணிநேரம் 35 நிமிடங்கள்) எடுக்கும் விமானப் பயணத்துடன் ஒப்பிடும்போது அதற்கு இணையான பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும்.
இத்திட்டத்தின் நிறைவு இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டி பிடிக்கும். அடுத்த ஆண்டுக்கான சோதனை ஓட்டங்கள் மற்றும் 2027ன் பிற்பகுதியில் அல்லது 2028ம் ஆண்டின் தொடக்கத்தில் முழு செயல்பாடுகள் எதிர்பார்க்கப்படுவதால், பங்குதாரர்கள் மற்றும் எதிர்கால பயணிகளிடையே எதிர்பார்ப்பு தொடர்ந்து உருவாகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புல்லட் ரயில் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. தற்போது மும்பை ஆமதாபாத் இடையே செய்யப்பட்டுவரும் கட்டுமானம் வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்ததாக இந்தியாவின் மற்ற நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









