மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
பெரிதும் எதிர்பார்க்கப்படும் மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் உள்ள 20 நிமிடத்திற்கு ஒரு ரயில், 10 நிமிடத்தில் மும்பை - தானே பயணம் என பல சுவாரஸ்ய தகவல்கள்வெளியாகியுள்ளன.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் உள்ள 20 நிமிடத்திற்கு ஒரு ரயில், 10 நிமிடத்தில் மும்பை - தானே பயணம் என பல சுவாரஸ்ய தகவல்கள்வெளியாகியுள்ளன.

இது குறித்து தேசிய அதிவேக ரயில் கார்பரேஷனின் நிர்வாக இயக்குநர் அச்சல் காரே கூறியதாவது : "மும்பையில் இருந்து தினமும் 25 ஆயிரம் பேர் ஆமதாபாத் மார்கமாக பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். அவர்களில் 4,700 பேர் விமானம் மூலமாகவும், 5,000 பேர் ரயில் மூலமாகவும், 15,000 ஆயிரம் பேர் கார் மூலமாகவும் பயணம் செய்கின்றனர்.

இவர்களை மையம் கொண்டு, அந்த பகுதியில் மணிக்கு சுமார் 300 கி.மீ., வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக துவக்க விழா முடிந்து பணிகள் துவங்கிய நிலையில் தற்போது புல்லட் ரயில்பாதை அமைப்பதற்காக 80 சதவீத திட்டங்கள் முடிவடைந்துள்ளது. இதின் படி மும்பை பந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் துவங்கி ஆமதாபாத் வரை இந்த ரயில்பாதை அமைகிறது.

இந்த பாதை தானே, விரார், போய்ஷார், வாபி, பில்லிமோரா, சூரத், பாருஞ், வதோதரா, ஆனந்த், சமர்பதி, ஆகிய பகுதிகளையும் இணைக்கிறது. இந்த பாதையில் காலை 7 - 10 மணிக்கிடையிலும், மாலை 5 - 9 மணிக்கிடையிலும் 20 நிமிடங்களுக்கு ஒரு ரயலிலை இயக்கதிட்டமிடப்பட்டுள்ளது. மற்ற நேரங்கில் எவ்வாறு ரயலிலை இயக்க வேண்டும் என கணக்கிடப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்காக ஜப்பான் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இ-5 ரக ரயில்கள் 25 ரயில்கள் வாங்கப்படுகிறது. இதில் 20 ரயில்கள் இயக்கப்படவிருக்கின்றன. மற்ற 5 ரயில்கள் அவரச தேவைக்காக பயன்படுத்தப்படும். பயன்பாட்டில் இருக்கும் 20 ரயில்களும் மொத்தம் 35 முறை விதம் மொத்தம் 70 டிரிப்கள் இயக்கப்படுகிறது.

தற்போது இதே வழித்தடத்தில் மேற்கு ரயில்வே 20 ரயில்களை இது ரயில்கள் 7 மணி நேரம் பயணம் செய்து இலக்கை அடைகிறது. விமானங்கள் 1 மணி நேரத்தில் இலக்கை அடைகிறது. அதே நேரத்தில் புல்லட் ரயில்கள் 2 மணி நேரத்தில் இலக்கை அடையும் படி வடிவமைக்கப்படவுள்ளது. மும்பையில் இருந்து புறப்படும் ரயில் 10 நிமடங்களில் தானேவை சென்றடைகிறது. தற்போது காரில் மும்பையில் இருந்து தானே செல்ல 35 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் வரையாகிறது.

இரண்டு விதமான புல்லட் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். சூரத், வதோதரா உள்ளிட்ட சில முக்கிய நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும் புல்லட் ரயில்கள், அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் புல்லட் ரயில்கள் என இரண்டு வகை புல்லட் ரயில்கள் இயக்கப்படவிருக்கின்றன.

ஒவ்வொரு ரயிலில் 9 சாதாரண பெட்டியும் 750 இருக்கைகள் கொண்ட 1 எக்ஸிக்கியூட்டிவ் பெட்டியும் அமைந்திருக்கும். இந்த ரயில் வரும் 2022 ஆகஸ்ட் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2033ம் ஆண்டு பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புல்லட் ரயில் திட்டம் மூலம் தினம் சுமார் 40 ஆயிரம் பொதுமக்களுக்கு சேவை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக மகாராஷ்டிராவில் உள்ள 353 ஹெக்டேர் நிலங்களையும், குஜராத்தில் உள்ள 1,047 ஹெக்டேர் நிலங்களையும் கையப்படுத்தவிருக்கின்றன. 108 ஊர்கள் உள்ள பகுதிகளை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் ஏற்கனவே 17 ஊர்களில் உள்ள நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இன்னும் 15 நாளில் நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிகிறது. நிலம் கையகப்படுத்தலுக்காக வழங்கும் நஷ்ட ஈட்டிற்குகாக ரூ 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது." இவ்வாறு கூறினார்.


Click it and Unblock the Notifications








