ஒரே ரன்வேயில் வந்த 2 விமானங்கள், ஹாலிவுட்டை மிஞ்சிய ஆக்ஷன் சம்பவம்! வைரலாகும் வீடியோ!

மும்பை விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் பரபரப்பு நிறைந்த ஆக்சன் காட்சிகள் நிகழ்ந்துள்ளது. ஒரே ரன்வேயில் ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் தரையிறங்கவும் பேக்கப் செய்யவும் முயற்சி செய்துள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது. இது ஆபத்து நிறைந்ததா இதற்குப் பின்னால் நடந்த உண்மை என்ன என்ற அனைத்து விரிவான விபரங்களையும் தான் நானும் இங்கே காண போகிறோம்.

பொதுவாக விமானங்களில் பறப்பது என்பது சாகசமான ஒரு விஷயம் தான். ஆனால் இன்று உள்ள தொழில்நுட்ப அம்சங்களை வைத்து எல்லாம் பார்க்கும் போது விமானங்கள் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. மக்களின் அத்தியாவசிய தேவையாகவே விமானங்கள் மாறிவிட்டதால் இதில் ஏகப்பட்ட பாதுகாப்புகளை விமான சேவை நிறுவனங்கள், விமான போக்குவரத்தை கண்காணிக்கும் அமைப்புகளும் செய்து வருகின்றன.

mumbai airport runway

பொதுவாக ஒரு விமானம் விமான நிலையத்திலிருந்து டேக் ஆப் ஆனவுடன் எந்த ரூட் வழியாக பயணம் செய்ய வேண்டும். எவ்வளவு வேகத்தில் பயணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஏர் டிராபிக் கண்ட்ரோல் எனப்படும் விமான போக்குவரத்தை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் அமைப்புதான் தெரியப்படுத்தும்.

இப்படியாக ஒவ்வொரு நாட்டிற்கும் ஏர் டிராபிக் கண்ட்ரோல் இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் தனித்தனியாக ஏர் டிராபிக் கண்ட்ரோல் இருக்கிறது. வானில் பறந்து கொண்டிருக்கும் விமானம் குறிப்பிட்ட விமான நிலையத்தில் லேண்டாக வேண்டும் என்றாலும், விமான நிலையத்தில் நிற்கும் விமானம் டேக்ஆப் ஆக வேண்டும் என்றாலும் இந்த ஏர் டிராபிக் கண்ட்ரோலின் அனுமதி தேவை.

மும்பை விமான நிலையத்தை பொருத்தவரை மொத்தம் 27 மற்றும் 14 ஆகிய இரண்டு ரன்வேகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரன்வேகளில் ஒரு நாளுக்கு 850 விமானங்கள் டேக் ஆப் ஆகவும் லேண்ட் செய்யவும் இந்த ரன்வேகள் பயன்படுகிறது. இதில் ரயில்வே நம்பர் 27 மட்டும் ஒரு மணி நேரத்திற்கு 46 விமானங்களை கையாண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இந்த ரன்வேயில் ஒரே நேரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தையும் இண்டிகோ நிறுவனத்தின் விமானத்தையும் லேண்ட் செய்யவும் டேக் ஆப் செய்யவும் அனுமதி வழங்கப்பட்ட சர்ச்சையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ தினத்தன்று இண்டிகோ நிறுவனத்தின் 6இ 6053 என்ற விமானம் இந்த ஊரில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது அப்பொழுது ஏர் டிராபிக் கண்ட்ரோல் தரப்பிலிருந்து விமானத்தை தரை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

விமான ஓடுபாதையின் விதிமுறைப்படி ஒரு விமானத்திற்கு லேண்ட் ஆவதற்கு அனுமதி வழங்கி விட்டால், அந்த ஓடு பாதையில் மற்றொரு விமானம் டேக் ஆஃப் ஆக வேண்டும் என்றால் லேண்டாக வேண்டிய விமானம் முழுவதுமாக லேண்ட் ஆகி டேக்ஸி வேக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட சம்பவத்தில் விமானம் லேண்ட்டாவதற்கு முன்பே அடுத்த விமானத்திற்கு டேக்ஆப் ஆக அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் விமான ரன்வேயில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இதன்படி இந்த விமானம் வெறும் 1200அடி தொலைவில் இருந்துள்ளது அதிர்ஷ்டவசமாக டேக் ஆஃப் ஆக வேண்டிய விமானம் சரியாக டேக் ஆப் ஆனதால் இங்கு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. 45 வினாடிகள் வித்தியாசத்தில் இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 45 வினாடிகள் ஏதாவது ஒரு விமானம் தாமதமாக இருந்தால் பெரும் விபத்து நடந்த 500க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி இருக்கும்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது சம்பவத்திற்கு பிறகு மும்பை ஏர் டிராபிக் கண்ட்ரோல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மும்பை ஏர் டிராபிக் கண்ட்ரோலில் உள்ள ஊழியர்கள் ஷிப்ட் மாதிரி பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் எதுவும் தெரியவில்லை. எப்படி ஒரே நேரத்தில் இரண்டு விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக ஏர் டிராபிக் கண்ட்ரோல் எல்லாம் முழுமையாக சிஸ்டமேட்டிக் முறையில் தான் செயல்படும். இதில் ஏதோ தொழில்நுட்ப கோளாறோ அல்லது மனித தவறுகளோ இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதை உடனடியாக கண்டறிந்து இதற்கான நடவடிக்கைகளை விமான ஆணையம் எடுக்க வேண்டும். அடுத்து இதுபோன்ற தவறுகள் நடந்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 11, 2024, 7:00 [IST]
English summary
Mumbai airport runway close encounter indigo air india viral video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+