திடீரென தீ பிடித்த எலெக்ட்ரிக் பஸ்! டாடா தயாரிப்பில் இப்படி ஒரு பிரச்சனையா? விசாரணையில் இறங்கிய அதிகாரிகள்!

மும்பையில் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பஸ் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்ல வேலையாக பஸ்ஸிற்குள் யாரும் இல்லாததால் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து சம்பவம் எப்படி நடந்தது? இது குறித்து விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மின்சாரத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை இணைந்து பெஸ்ட் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் மும்பையில் முக்கியமான பகுதிகளில் எலெக்ட்ரிக் பஸ்ஸை செயல்படுத்தி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் எல்லாம் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒருமுறை சார்ஜ் செய்ய ஆங்காங்கே வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

best electric bus fire

இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் காலையில் தன் பயன்பாட்டைத் துவங்கினால் குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரம் பயன்படுத்தப்பட்ட பின்பு இந்த இந்த பஸ்கள் அருகில் உள்ள டிப்போவில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷனுக்கு சென்று சார்ஜ் செய்யப்படும். அப்பொழுது இந்த பஸ்ஸை பூட்டிவிட்டு இதன் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மற்றொரு பஸ்ஸில் ஏறி விடுவார்கள்.

குறிப்பிட்டு நேரத்துக்குப் பிறகு மற்றொரு பஸ் சார்ஜ் தீரும் போது அதை இதே இடத்தில் நிறுத்திவிட்டு இந்த பஸ்ஸை பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்வார்கள். இப்படியாக சம்பத்தன்று காலை முதல் ஒரு எலெக்ட்ரிக் பஸ் பயன்பாட்டிலிருந்தது. இது 53 கிலோ மீட்டர் வரை ஓடி உள்ளது. அந்த பஸ்ஸை பஸ் டிப்போவில் விட்டு விட்டு அதன் ஓட்டுனர்கள் மற்றும் நடத்தினார்கள் மற்றொரு பஸ்ஸிற்கு மாறிவிட்டனர்.

best electric bus fire

இந்த பஸ் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மதியம் 2.55 மணிக்கு பஸ்ஸின் மேற் கூரையிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதைக் கவனித்த பஸ் டிப்போ ஊழியர்கள் உடனடியாக இது தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக பெஸ்ட் அதிகாரிகள் தெரிவித்தனர். தீப்பிடித்த இந்த பஸ் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து டாடா மோட்டார்ஸ் நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்ததாக பெஸ்ட் நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்த ஆரம்பிக்கப்பட்டது.

best electric bus fire

டாடா மோட்டார்ஸ் நிர்வாகமும் அதன் அதிகாரிகளை அனுப்பி இந்த சம்பவம் எப்படி நடந்தது இதற்கான காரணம் என்ன என விசாரிக்கத் துவங்கியுள்ளது. இந்த விசாரணையில் இந்த விபத்திற்கான காரணம் தெரியவரும், அதை வைத்து இது போன்ற விபத்துக்களை எதிர்காலத்தில் எப்படித் தவிர்ப்பது என ஆலோசனை நடத்த முடியும் என டாடா மோட்டார்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் தீ விபத்து என்பது எலெக்ட்ரிக் பஸ்சின் மேற்கூரையும் நிகழ்ந்துள்ளது. இந்த பஸ்ஸில் மேற்கூரையில் பஸ்ஸிற்கான ஏசி பாகங்கள் தான் இருக்கிறது. இதனால் இந்த விபத்திற்கு பெரும்பாலும் ஏசி தொழில்நுட்பத்தில் உள்ள பிரச்சனைதான் காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஸ்சின் பேட்டரி மற்றும் மற்ற எலெக்ட்ரிக் பாகங்களில் பிரச்சனை இருக்க வாய்ப்புகள் குறைவுதான். இதன் உண்மையான காரணம் விசாரணைக்குப் பின்பு தெரிய வரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடிக்கும் சம்பவம் கடந்தாண்டு இந்தியாவில் பெரும் புயலை கிளம்பியது. அதன்பின் கடந்த சில மாதங்களாக இப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடிக்கும் சம்பவங்கள் நடக்காமல் இருந்தது. தற்போது மீண்டும் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் குறிப்பிட்ட சம்பவத்திற்கு ஏசி தான் முக்கியமான காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. விசாரணை முடியும் போது உண்மை தெரிய வரும்.

Note: Images Used Are For Representational Purpose Only

More from DriveSpark

Article Published On: Saturday, June 17, 2023, 17:36 [IST]
English summary
Mumbai best electric bus fired in the bus depot investigation started
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X