லம்போர்கினி காரில் சட்டசபைக்கு வந்து அசரவைத்த பாஜக எம்எல்ஏ!

Written By:

சுழல் விளக்குகள் பொருத்தப்பட்ட வெள்ளை நிற கார்களில் மிடுக்காக வலம் வரும் அமைச்சர்களையே, காஸ்ட்லி லம்போர்கினி சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரில் வந்து அசரவைத்துள்ளார் எம்எல்ஏ ஒருவர்.

லம்போர்கினி காரில் சட்டசபைக்கு வந்து அசரவைத்த பாஜக எம்எல்ஏ!

மகராஷ்டிராவில் உள்ள மிரா பயந்தர் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக சேர்ந்தெடுக்கப்பட்டவர் நரேந்திர மேத்தா. இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். எம்எல்ஏ-வான நரேந்திர மேத்தா தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க தனது விலையுயர்ந்த லம்போர்கினி காரில் மகராஷ்டிர சட்டசபைக்கு வந்துள்ளார்.

லம்போர்கினி காரில் சட்டசபைக்கு வந்து அசரவைத்த பாஜக எம்எல்ஏ!

விதான் பவன் என்றழைக்கப்படும் மகராஷ்டிர சட்டபைக்குள் நரேந்திர மேத்தா தனது லம்போர்கினி காரை ஓட்டிச்சென்ற போது, அனைவரின் கண்களும் இவரின் லம்போர்கினி மீதே இருந்துள்ளது. மகராஷ்டிர முதல்வரான தேவேந்திர ஃபட்னாவிஸ் செல்வதைக்கூட கவனிக்க மறந்து இவரின் காரை வெறிக்க வெறிக்க பார்த்துளனர் அனைத்து எம்எல்ஏக்களும்.

லம்போர்கினி காரில் சட்டசபைக்கு வந்து அசரவைத்த பாஜக எம்எல்ஏ!

பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பலரது பேச்சும் நரேந்திர மேத்தாவின் லம்போர்கினி காரைப் பற்றித்தான் இருந்துள்ளது. அந்தளவுக்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டது இவரின் ஆரஞ்சு வண்ண லம்போர்கினி கார்.

லம்போர்கினி காரில் சட்டசபைக்கு வந்து அசரவைத்த பாஜக எம்எல்ஏ!

5.5 கோடி ரூபாய் விலை கொண்ட இந்த காஸ்ட்லி லம்போர்கினி காரை கடந்த ஆண்டு தனது மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளார் நரேந்திர மேத்தா.

லம்போர்கினி காரில் சட்டசபைக்கு வந்து அசரவைத்த பாஜக எம்எல்ஏ!

இந்த லம்போர்கினி மூலம் இப்போது தான் நரேந்திர மேத்தா வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார், ஆனால் இதே லம்போர்கினியால் ஒரு ஆண்டுக்கு முன்னரே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர் இவரின் மனைவி.

லம்போர்கினி காரில் சட்டசபைக்கு வந்து அசரவைத்த பாஜக எம்எல்ஏ!

பிறந்த நாள் பரிசாக அளிக்கப்பட்ட லம்போர்கினியை ஓட்ட ஆசைப்பட்டு, சாலைக்கு எடுத்துச் சென்ற இவரின் மனைவி, சரிவர அதனை ஓட்டத் தெரியாமல், தாறுமாறாக ஓட்டிச்சென்று சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் போய் மோதியுள்ளார். அப்போதே இச்செய்தி பரபரப்புக்கு உள்ளாகி, மீடியா வெளிச்சத்தில் பதிவாகி விட்டது இந்த லம்போர்கினி கார்.

லம்போர்கினி காரில் சட்டசபைக்கு வந்து அசரவைத்த பாஜக எம்எல்ஏ!

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நரேந்திர மேத்தா பாஜக கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். எம்எல்ஏ ஆவதற்கு முன்னர் மிரா பயந்தர் நகர மேயராகவும் இருந்துள்ளார் இவர்.

English summary
Read in tamil about bjp mla drove lamborghini car to assembly. whose wife hit same lamborghini car with an auto a year back. more details.
Story first published: Saturday, April 8, 2017, 8:45 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more