Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 7 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 8 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கவனிக்கல, தெரியலனு சொல்லி தப்பிக்க முடியாது... பயன்பாட்டிற்கு வந்தது அட்டகாசமான சமிக்ஞை மின் விளக்குகள்...
போக்குவரத்தையும், வாகன ஓட்டிகளையும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய சமிக்ஞை மின் விளக்குகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவும் சிக்னல்களை அப்கிரேட் செய்யும் முயற்சியில் நமது நாட்டின் குறிப்பிட்ட மாநிலத்தின் போக்குவரத்துத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், வழக்கமான சிக்னல் மின் விளக்குகளுக்கு பதிலாக முற்றிலும் வித்தியாசமான சமிக்ஞை மின் விளக்கு கம்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது, சிக்னலுக்கு ஏற்ப நிறத்துடன் மின் விளக்கு கம்பத்தையும் ஒளிரச் செய்யும். வாகன ஓட்டிகளுக்கு பயன்படும் வகையில் இந்த கம்பங்கள் முன்னோட்டமாக பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் இந்த ஸ்பெஷல் மின்கம்பங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இது பரந்த அளவில் சமிக்ஞை வழங்கும் என்பதால் வாகன ஓட்டிகளால் எந்தவொரு சாக்குபோக்கும் சொல்லி தப்பிக்க முடியாது. நகரத்தின் சில இடங்களில் சமிக்ஞை மின் விளக்குகள் மரக்கிளை மற்றும் பெரிய உருவம் கொண்ட வாகனங்களால் மறைந்துவிடுவதுண்டு. இம்மாதிரியான நேரத்தில் சிக்னலை வெளிப்படுத்தும் நோக்கிலேயே கம்பங்களில் சமிக்ஞை வழங்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மூன்று வண்ணத்தில் ஒளிரக் கூடிய எல்இடி மின் விளக்குகள் கம்பத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றன. இவையே சிக்னலின் மின் விளக்கு ஏற்ப ஒளிர்ந்து வாகன ஓட்டிகளுக்கு உதவுகின்றது. தமிழகத்தின் தலைநகரான சென்னை அண்ணாநகரிலும்கூட இதேபோன்று ஓர் சிறப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக, அங்கிருக்கும் அனைத்து சிக்னல்களிலும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் வாயிலாக ஸ்டாப் லைன் மற்றும் விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டு வருகின்றது. வாகன ஓட்டிகளை ஒழுங்குப்படுத்தவும், நிறுத்தக் கோட்டிற்கு உள்ளேயே நிறுத்தும்படியும் போக்குவரத்துத்துறைப் போலீஸார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேபோன்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மும்பை நகரத்தில் புதிய சிக்னல் மின் விளக்குகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. சோதனையோட்டத்தின் அடிப்படையில் இந்த மின் விளக்குகள் கொண்டு வரப்பட்டிருப்பதால் மும்பையின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இந்த கம்பங்களைப் பார்க்க முடிகின்றது.

கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும் இதேபோன்று ஓர் விநோதமான சமிக்ஞை மின் விளக்குகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. எல்இடி மின் விளக்கைக் கொண்ட ஸ்பீடு பிரேக்கர்களே அவை ஆகும். துருதிர்ஷ்டவசமாக இந்த திட்டம் பெரியளவில் வெற்றிப் பெறாத காரணத்தினால் இது முழுமையாக பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படவில்லை.
ஆனால், மும்பையில் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய சமிக்ஞை மின் விளக்கு கம்பங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்றே நம்பப்படுகின்றது. குறைந்த பார்வை திறனில் வெளிப்படையாகத் தெரியக்கூடியவை என்பதால் மாநிலத்தின் முக்கிய நகரப் பகுதிகளில் விரைவில் பயன்பாட்டிற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.