14 ஆயிரம் கோடி ரூபா செலவுல போட்ட ரோட்டோட நிலைமைய பாத்தீங்களா!.. உங்களால வருத்தப்படாம இருக்க முடியாது!
14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட சாலை ஒன்றின் நிலைமை சற்றே கவலைக்கிடமாக மாறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் சென்ற ஆண்டில் கடற்கரை சாலை அமைக்கப்பட்டது. 'மும்பை கடற்கரை சாலை' மற்றும் 'சத்ரபதி சம்பஜி மஹாராஜ் சாலை' என்கிற பெயரில் அந்த சாலை பொதுமக்கள் மத்தியில் அறியப்படுகின்றது. பாம்பாய் மாநகராட்சி (Bombay Municipal Corporation) மற்றும் எல் அண்ட் டி கட்டுமான (L&T Construction) நிறுவனம் இவர்கள் இரண்டும் இணைந்தே இந்த சாலையை அமைத்தன.
இது பயன்பாட்டிற்கு வந்து ஓராண்டுகள்கூட முழுமையடையாத நிலையே தென்படுகின்றது. இந்த நிலையிலேயே மும்பை கடற்கரை சாலையின் குறிப்பிட்ட சில இடங்களில் சாலை பெயர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது. இதனால், சாலை ஆங்காங்கே குண்டும் - குழியுமாகக் காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

இதையே தற்போது பேட்ச் ஒர்க் செய்ய தொடங்கி இருக்கின்றது பாம்பே மாநகராட்சி. இந்த படங்களையே தற்போது நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து அரசை வறுத்தெடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். நெட்டிசன்கள் சிலர் உலக தரத்தில் இருந்திருக்க வேண்டிய சாலை இவ்வளவு மோசமான நிலைமைக்கு மாறியிருப்பதாகக் கூறி வேதனை தெரிவிக்கவும் தொடங்கி இருக்கின்றனர்.
மேலும், இப்படி ஒரு சாலைக்கா நாங்கள் வரி கட்டிக் கொண்டிருக்கின்றோம் என்றும் எல் அண்டி டி மற்றும் மாநகராட்சி-யையும் அவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர். தரமான சாலைகள் சீரான வாகன போக்குவரத்திற்கு மட்டுமல்ல ஓர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் அவை மிக முக்கியமான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய சாலையை மிக மோசமான நிலைமையில் கட்டுமானம் செய்திருப்பது மும்பை வாசிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, ஃபேஸ் 1 மும்பை கடற்கரை சாலை சென்ற ஆண்டின் மார்ச் மாதத்திற்கு பின்னரே பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது.
சரியாக ஓராண்டைகூட இன்னும் அந்த சாலை பூர்த்தி செய்யாத நிலையே தென்படுகின்றது. இந்த நிலையிலேயே பேட்ச் ஒர்க் செய்யப்படும் அளவிற்கு அதன் நிலைமை தற்போது மிகவும் மோசமானதாக மாறியிருக்கின்றது. தற்போது மும்பை கடற்கரை சாலையின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதன் நிலைமையும் எதிர்காலத்தில் இப்படி ஆகிவிடுமோ என்பதே இப்போது பலரின் கேள்விக் குறியாக மாறியிருக்கின்றது. மும்பை கடற்கரை சாலை இரண்டாம் கட்டத்தின்கீழ் 19.22 நீளத்திற்கு சாலை அமைக்கும் பணிகளே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டாம் கட்டப் பணிகளையாவது தரமாவது செய்ய வேண்டும் என்பதே தற்போது பலரின் கேள்விக் குறியாக மாறியிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய சாலைகள் பெயர்ந்து வருவது மற்றும் புதிய ஆற்று பாலங்கள் ஆறோடு அடித்துச் செல்வது மிக அதிகளவில் நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. ஆட்சி புரிபவர்களின் அலட்சியத்தையே இந்த நிலை எடுத்துக் காட்டுகின்றது. வரும் நாட்களிலாவது மக்கள் பணம் வீணடிக்கப்படாமல் தரமான சாலைகள் அமைக்கப்படுமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக மாறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








