குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் வீடியோ காட்சி!

குற்றவாளிகளை தடுக்கச் சென்ற போலீஸார் விபத்தில் சிக்கும் வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது.

குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சி..!

போக்குவரத்து விதிமீறல்கள் கொடிய வைரஸைப் போன்று நாடு முழுவதும் பரவிய வண்ண் இருக்கின்றது. இதனை முற்றிலும் ஒழித்துக்கட்டும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதில் தீர்வு கிடைத்தப்பாடில்லை. நாடெங்கிலும் போக்குவரத்து சார்ந்து குற்றச்சம்பவங்கள் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றன.

குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சி..!

போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது நாளுக்கு நாள் ஓர் புதிய உச்சத்தை அடைந்து வருகின்றது.

குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சி..!

இதனால், அத்துறைச் சார்ந்த இயங்கும் அதிகாரிகள் மற்றும் போலீஸார்களுக்கு கடும் தலை வலி ஏற்பட தொடங்கியுள்ளது. எனவே, போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு அடக்கும் முயற்சியில் அவர்கள் களமிறங்கியுள்ளனர்.

மேலும், எவர்மீதும் தயவுதாச்சியமின்றி மத்திய அரசு கடந்த வருடம் நடைமுறைக்குக் கொண்டு வந்த புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சி..!

இவ்வாறு நாடு முழுவதும் போக்குவரத்துத்துறை அணல் பறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்வேலையில், எது எப்படி போனால் நமக்கு என்னவென்பதைப் போன்று ஒரு சில வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், ஒரே ஒரு இருசக்கர வாகனத்தில் மூவராக அமர்ந்து வந்த வாகன ஓட்டிகளை மடக்கச் சென்ற போலீஸார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சி..!

இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தில் அரங்கேறியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் பதிவு தற்போது வெளியே கசிந்துள்ளது.

குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சி..!

அதில், டிரிபிள் ரைடிங்கில் வரும் வாகன ஓட்டிகளை மடக்குவதற்காக போலீஸார் சாலையின் நடுவில் நிற்கின்றார். அப்போது, போலீஸாரிடமிருந்து தப்பித்து செல்ல எண்ணிய அந்த வாகன ஓட்டிகள் இடது, வலது என ஆட்டம் காட்டியவாறு வந்து போலீஸார் மீதே மோதிவிடுகின்றனர்.

குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சி..!

இதனால், சில அடி தூரம் போலீஸார் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்களும் சாலையில் உராசியவாறே சென்று காயமுற்றனர்.

இந்த சம்பவத்தில் போலீஸார் கடுமையான பாதிப்பை அடைந்திருப்பதாக கூறப்படுகின்றது. இதுபோன்ற காராணங்களினாலயே வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸார் பாரிகேட் எனப்படும் தடுப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சி..!

ஆனால், பெரும்பலான போலீஸார் அதனைக் கடைப்பிடிப்பதே இல்லை. மேலும், சாலையின் ஓரத்தில் மறைந்து நிற்கும் அவர்கள் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைக் கண்டவுடன் திடீரென தோன்றி அவர்களை ஆபத்தில் சிக்க வைப்பதுடன், தாங்களும் ஆபத்தில் சிக்குகின்றனர். இதேபோன்றதொரு சம்பவம்தான் தற்போது மும்பையில் அரங்கேறியிருக்கின்றது.

குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சி..!

இதுபோன்ற விபத்துகளை தவிர்ப்பதற்காகவே இ-செல்லாண் என்ற திட்டம் இருக்கின்றது. இது விபத்துகளை தவிர்ப்பதற்காக மட்டுமின்றி போலீஸார் மற்றும் பொதுமக்கள் இடையே ஏற்படும் வாக்குவாதம், மோதல்களை தவிர்ப்பதற்காகவும் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில போலீஸார் மட்டும் வசூல் வேட்டையில் ஈடுபடுவதற்காக, மறைந்திருந்து வாகன ஓட்டிகளை மடக்கி அவர்களிடம் பணம் பார்க்கின்றனர்.

ஆனால், தற்போது அரங்கேறியிருக்கும் கொடூர சம்பவத்தில், அந்த காவல் அதிகாரி ஆரம்பத்திலேயே சாலையின் நடுவில் நிற்கின்றார். வீடியோவை வைத்துப் பார்க்கையில் அந்த சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கிளியர் செய்யவே அந்த போலீஸார் அங்கு நிற்பதைப் போன்று தெரிகின்றது.

குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சி..!

அப்போது, அந்த சாலையில் டிரிபிள் ரைடிங்கில் வந்த இளைஞர்கள் போலீஸாரைக் கண்டதும் எப்படியாவது அங்கிருந்து தப்பியோடிவிட வேண்டும் என எண்ணி, போலீஸார் இடைமறித்த பின்னரும் அதிவேகமாக வந்து அவர் மீதே மோதிவிடுகின்றனர். இதில், வாகன ஓட்டிகளுக்கு லேசான காயமே ஏற்பட்டது. ஆனால், போலீஸார் பலத்த காயங்களுடன் மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சி..!

குற்றவாளிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பது முக்கியம்தான். இருப்பினும், வேகமாக வாகன ஓட்டிகளை சாலையில் தடுத்து நிறுத்துவது என்பது ஆபத்தான ஒன்று. முன்னதாக, சாலைகளில் எந்தவிதமான துரத்தலும் இருக்கக்கூடாது என்றும், மக்கள் காயமடையக்கூடிய இதுபோன்ற செயல்களில் போலிஸார் ஈடுபட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், போலீஸாரும் சரி, வாகன ஓட்டிகளும் சரி விதிமுறைகளை சரிவர கடைபிடிப்பதே இல்லை.

குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சி..!

அதேசமயம், இதுபோன்ற சம்பவம் நடப்பது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில், வாகனங்களை மடக்க முயன்ற போலீஸார் விபத்தில் சிக்கி பல மீட்டர் தூரம் செல்லப்பட்டுள்ளனர். ஏன், ஒரு சில போலீஸாரை காரில் வரும் விதிமீறல்வாதிகள் காரின் பேனட்டின்மீது வைத்து இழுத்துச் சென்ற சம்பவங்கள்கூட அரங்கேறியுள்ளன. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கவே இ-செல்லாண் மற்றும் டிஜிட்டல் அபராதம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை தடுக்கபோய் விபத்தில் சிக்கிய காவலர்... போலீஸாரை அடித்து தூக்கி வீசும் அதிர்ச்சி காட்சி..!

மும்பையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு பெரியளவில் காயம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும், விதிமீறலில் ஈடுபட்டது மட்டுமின்றி தடுக்க முயன்ற போலீஸாரை மோதி விபத்தை ஏற்படுத்தியதன் காரணமாக அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 15, 2020, 10:25 [IST]
English summary
Mumbai Cop Injured By Triple Riders. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+