Traffic Police-க்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம போச்சு... இந்த கார் ஓட்டிக்கு சரியான தண்டனை கிடைக்கனும்!!

போதையில் வாகன ஓட்டி ஒருவர் போலீஸ்காரர் மீது மோதி, அவரை சுமார் 10 கிமீ தொலைவிற்கு தனது காரில் இழுத்து சென்றுள்ளார். யார் அந்த வாகன ஓட்டி? எதற்காக இவ்வாறு செய்தார்? என்ற கேள்விகளுக்கான பதில்களாக இந்த சம்பவத்தை பற்றி முழுமையாக இனி பார்க்கலாம்.

போக்குவரத்தை சீராக வைத்திருப்பது போக்குவரத்து போலீஸாரின் பணி ஆகும். அதற்காகவே அவர்கள் வாகன ஓட்டிகளிடம் சோதனையில் ஈடுப்படுகின்றனர். ஆனால் இதனை சரியாக புரிந்து கொள்ளாத சில வாகன ஓட்டிகள் போலீஸாரிடமே தவறாகவும், தரக்குறைவாகவும் நடந்து கொள்கின்றனர். குறிப்பாக, மது அருந்தி இருந்தால் பெண்கள் கூட வாகன சோதனையில் இருக்கும் போலீஸாரிடம் திமிராக நடந்துக் கொள்ளும் சம்பவங்கள் பலவற்றை பார்த்துள்ளோம்.

drugged car driver drives police on bonnet

அதிலிலும் சமீப காலமாக, வாகனத்தை நிறுத்த முயலும் போலீஸார் மீது மோதி, பயமுறுத்தும் வகையில் போலீஸாரை சில கிமீ தொலைவிற்கு பொனெட்டில் கொண்டு செல்லும் கார் ஓட்டிகளை பற்றி அதிகளவில் பார்த்து வருகிறோம். நெஞ்சை பதபதைக்க வைக்கும் இவ்வாறான செயலில் மற்றொரு கார் ஓட்டி சமீபத்தில் ஈடுப்பட்டு உள்ளார். பட்டப்பகலில், பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது மும்பையில் ஆகும்.

மும்பை போக்குவரத்து போலீஸார் ஒருவர் வழக்கம்போல் சோதனை பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது, மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் கார் ஒன்று அந்த வழியாக வந்துள்ளது. அதனை கண்டதும் அந்த போலீஸார் காரை நிறுத்த முயன்றுள்ளார். இருப்பினும் அந்த கார் ஓட்டி போலீஸை மோதுவதுபோல் தொடர்ந்து முன்னோக்கி வர, அந்த போலீஸ்காரர் காரின் பொனெட்டின் மீது தாவியுள்ளார். இதனை அறிந்த பின்பும் காரை நிறுத்தாமல் அந்த ஓட்டுனர் போலீஸை பொனெட்டில் வைத்து கொண்டு வேகமாக பயணிக்க ஆரம்பித்துள்ளார்.

கார் சென்ற நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான இதுகுறித்த காட்சிகளை மேலே காணலாம். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த செயலில் ஈடுப்பட்டுள்ள கார் ஓட்டி சம்பவத்தின்போது அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. முதல் இந்த நபர் போலீஸாரின் ஆணைக்கிணங்க காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனை கண்ட போலீஸார், உடனே தனது மோட்டார்சைக்கிளில் காரை விரட்டி பிடிக்க முயன்றுள்ளார்.

ஒரு கட்டத்தில், காரை முந்தியும் விட்டார். காரை முந்திய பின்பு பைக்கை நிறுத்திவிட்டு, எதிர்வரும் காருக்கு முன்பாக நின்று காரை நிறுத்தும்படி அந்த போலீஸ்காரர் கூறியுள்ளார். ஆனால் போதையில் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லாத அந்த ஓட்டுனர் நேராக போலீஸ் மீது மோத வந்துள்ளார். இதை கண்டு சூதாரித்து கொண்ட அந்த போலீஸ்காரர் தப்பிக்க அந்த கார் மீதே தாவியுள்ளார். அதற்குள் காரின் வேகத்தை அந்த நபர் அதிகரித்துவிட்டதால், போலீஸ்காரரால் கீழிறங்க முடியவில்லை.

drugged car driver drives police on bonnet

அவ்வளவு போதையிலும், போலீஸ்காரரின் அந்த பயத்தை பார்த்து மேலும் போதையாகிய அந்த நபர் காரின் வேகத்தை குறைக்காமல் போலீஸை பொனெட்டில் வைத்து கொண்டே சுமார் 10கிமீ தொலைவிற்கு பயணம் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள அந்த போலீஸ்காரரின் பெயர் சித்தேஷ்வர் மாலி ஆகும். இந்த குற்ற செயலில் ஈடுப்பட்ட கார் ஓட்டுனரான ஆதித்யா பெம்பாடே மீது கொலை முயற்சி மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் இவ்வாறான சம்பவங்களை சமீப காலமாக அதிகளவில் பார்க்க முடிகிறது. இவ்வாறான சம்பவங்களை தடுக்க தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். ஆதித்யா பெம்பாடே மீது தொடரப்பட்டுள்ளதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் சட்டம் & ஒழுங்கு பிரிவின் கீழ் வரும். மறுப்பக்கம், மோட்டார் வாகன சட்டத்தின்படி, பெரிய தொகையை அபராதமாக அவருக்கு போலீஸார் விதிப்பர் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Thursday, April 20, 2023, 15:07 [IST]
English summary
Mumbai drugged car driver drives with police on bonnet for 10 kms
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+