ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...

பெண் ஒருவர் ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...

இந்தியாவில் கனமழை பெய்யும் சமயங்களில் எல்லாம், சாலைகளில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடும். மழை நீர் வடிவதற்கு அதிக நேரம் ஆகும் என்பதால், அத்தகைய சமயங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அத்துடன் சில சமயங்களில் இது சாலை விபத்துக்களுக்கும் காரணமாகி விடுகிறது.

ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...

சாலைகளில் உள்ள குழிகளை மழை நீர் மறைத்து விடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொண்டு காயம் அடைவதும், உயிரிழப்பதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் சாலை விபத்தில் சிக்கி கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பெண் ஒருவர் ஒரே இடத்தில் சுமார் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த நிகழ்வு தற்போது இந்தியாவில் நடைபெற்றுள்ளது.

ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...

மஹாராஷ்டிர மாநில தலைநகரான மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்வது வழக்கம். இந்த வகையில் தற்போதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. எனவே சாலைகள் மழைநீரில் மூழ்கி விட்டன. அப்போது சாக்கடை குழி ஒன்றின் அருகே 55 வயதுடைய பெண் ஒருவர் நின்று கொண்டு வாகன ஓட்டிகளை எச்சரித்து கொண்டிருந்தார்.

ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...

சாக்கடை குழியின் மூடி திறந்து வைக்கப்பட்டிருப்பதை தெரிவித்து வாகன ஓட்டிகளின் பாதையை அவர் மாற்றி விட்டு கொண்டிருந்தார். இதன் மூலம் விபத்துக்கள் நடைபெறுவது தவிர்க்கப்பட்டது. விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக சுமார் 8 மணி நேரமாக அந்த பெண் அதே இடத்தில் நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...

கண்டா முர்த்தி கலர் என்ற பெண்மணிதான் இந்த காரியத்தை செய்தது. பூ விற்பனையாளராக உள்ள இவர் வறுமையில் தவித்து வருகிறார். திறந்து வைக்கப்பட்டிருந்த சாக்கடை குழிக்கு அருகே நீண்ட நேரம் நின்று போக்குவரத்தை அவர் ஒழுங்குபடுத்திய காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இதன் காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...

பாராட்டுக்களுடன் மட்டுமல்லாது, அவர் ஏழை என்பதால், நன்கொடைகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. சம்பவத்தன்று கனமழை பெய்ததால், அவரது வீட்டிலும் வெள்ள நீர் புகுந்து விட்டது. எனவே வெள்ள நீர் விரைவாக வடிய வேண்டும் என்பதற்காக, அவர்தான் சாக்கடை குழியின் மூடியை திறந்து வைத்தார். அத்துடன் அதன் அருகிலேயே நின்று கொண்டு வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்தார்.

ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...

மும்பை மாநகராட்சி அதிகாரிகளோ நீண்ட தாமதத்திற்கு பின்தான் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சாக்கடை குழியின் மூடியை திறந்ததற்காக அவரை அதிகாரிகள் திட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதற்காக அவர் மீது அவர்கள் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சாக்கடை குழியின் மூடியை திறக்க அவ்வழியே சென்ற இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் அவருக்கு உதவியுள்ளார்.

ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...

காவல் துறையினரும் மற்றும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் கண்டா முர்த்தி கலரை பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மும்பை மாநகராட்சி அதிகாரிகளோ வேறு விதமாக நடந்து கொண்டுள்ளனர். மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து மழை நீரை வெளியேற்ற உதவி செய்வார்கள் என காத்திருந்ததாக கண்டா முர்த்தி கலர் கூறியுள்ளார்.

ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...

ஆனால் மறுநாள் வரை யாரும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே கண்டா முர்த்தி கலரின் நடவடிக்கையை அப்பகுதி மக்களும் பாராட்டியுள்ளனர். அவர் சாக்கடை குழியின் மூடியை அகற்றாமல் இருந்திருந்தால், சாலையில் இன்னும் நீண்ட நேரத்திற்கு வெள்ள நீர் தேங்கியிருந்திருக்கும் என்பது அந்த பகுதி மக்களின் வாதம்.

ஒரே இடத்தில் 8 மணி நேரமாக நின்று கொண்டிருந்த வயதான பெண்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்...

மழைக்காலங்களில் இந்திய சாலைகள் வெள்ளக்காடாக மாறுவது என்பது வாடிக்கையான ஒரு நிகழ்வுதான். சென்னை, மும்பை போன்ற பெரிய மற்றும் நன்கு வளர்ச்சியடைந்த நகரங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஒரு சில மணி நேர மழைக்கே சாலைகள் வெள்ளக்காடாக மாறி விடும். எனவே மழை பெய்யும்போது வீடுகளுக்கு உள்ளேயே இருப்பது நல்லது.

வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விடலாம். மழை நீரில் சாலைகள் மறைந்து விடும் என்பதால், குழிகள் கண்ணுக்கு தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் அதிகப்படியான மழை நீர் தேங்கி நிற்கும் சாலைகளில் பயணிப்பது, வாகனத்திற்கும் நல்லது கிடையாது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai: Flower Seller Stands 8 Hours In Rain To Warn About Open Manhole - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X