புதிய மஹாராஷ்டிரா முதல்வரின் அடுத்த சிக்ஸர்!! மும்பையில் கடலுக்கு நடுவே பாலம்... நம் சென்னையில் எப்போ வருமோ!!

மும்பையில் கடலுக்கு நடுவே எழுப்பப்பட்டு வரும் மேம்பாலம் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக மஹாராஷ்டிரா முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ் இருவரும் மும்பையில் நடைபெற்றுவரும் MTHL (மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்) திட்டத்தை சமீபத்தில் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த திட்டத்தின்படி, இந்தியாவிலேயே மிக நீளமான மேம்பாலம் கடலுக்கு நடுவே எழுப்பப்பட்டு வருகிறது.

mumbai longest sea bridge almost ready

எழுப்பப்பட்டு வருகிறது என கூறுவதை விட, மேம்பால பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த மே 24ஆம் தேதி கடலில் இருந்து நிலத்தை இந்த மேம்பாலம் இணைத்துள்ளது. இந்த இறுதிக்கட்ட பணிகளின்போது சம்பந்தப்பட்ட முக்கிய அதிகாரிகள் பணிகளை பார்வையிட்டனர். ஆதலால் இன்னும் சிறு சிறு டச்சிங் பணிகள் மட்டுமே இந்த மேம்பால கட்டமைப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

பணிகள் முழுவதும் நிறைவடைந்து, சோதனைகள் செய்யப்பட்டு இந்தியாவின் மிக நீளமான இந்த கடல் மேம்பாலம் வருகிற நவம்பர் மாதத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 22 கிமீ நீளத்தில் எழுப்பப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தினால் மும்பை - நவி மும்பை இடையேயான பயண நேரம் 1 மணிநேரத்தில் இருந்து வெறும் 15- 20 நிமிடங்களாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

mumbai longest sea bridge almost ready

வணிக நகரமான மும்பை உடன் ராய்கட் மாவட்டத்தை இந்த மேம்பாலம் மேலும் நெருக்கமாக்குகிறது. அத்துடன், நவி மும்பையில் விரைவில் அமையவுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கும் இந்த கடல் மேம்பாலம் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக இருக்கும். மேலும், மும்பை - புனே விரைவுச்சாலை மற்றும் மும்பை- கோவா நெடுஞ்சாலை உடன் இணையவுள்ளதால், மும்பையில் இருந்து புனே, பெங்களூர், கோவா போன்ற பகுதிகளுக்கு செல்வது இன்னும் விரைவாக மாறவுள்ளது.

இத்தகைய மேம்பாலத்தை பார்வையிட்ட பின் மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "இது இந்த பகுதியில் கல்வி, தொழில் மற்றும் சேவை துறைகள் முன்னேற்றம் காண வழிவகுக்கும். இந்த திட்டமானது நேரம், எரிபொருளை மிச்சப்படுவது மட்டுமின்றி, காற்று மாசுவையும் குறைக்கும். இந்த திட்டத்தை நிறைவு செய்யும் அதேவேளையில், சுற்றுச்சூழலை பேலன்ஸ் செய்வதும் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.

அதிநவீன தொழிற்நுட்பம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஃப்ளமிங்கோ பறவைகளின் வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமானது என்பதும் என்னிடம் விவரிக்கப்பட்டது" என்றார். மொத்த 22 கிமீ மேம்பாலத்தில், 16.5 கிமீ மட்டுமே கடலுக்கு மேல் வருகிறது. மீதி 5.5 கிமீ ஆனது நிலத்தில் எழுப்பப்பட்டுள்ளது. 6-வழி சாலையாக உருவாக்கப்பட்டு வரும் இந்த மேம்பால பணிகள் 94% நிறைவடைந்து விட்டதாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எந்தவொரு நாடும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டுமாயின், அந்த நாட்டில் உள்கட்டமைப்பு பணிகள் சிறப்பானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நாட்டில் வணிகங்கள் அதிகரிக்கும், வெளிநாட்டு வணிகர்களையும் கவர முடியும். அதை தான் மஹாராஷ்டிரா முதல்வர் இந்த கடல் மேம்பாலம் மூலமாக செய்து வருகிறார். இந்தியாவிலேயே மிக பெரிய கடல் மேம்பாலமாக எழுப்பப்பட்டு வருவது இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 26, 2023, 11:39 [IST]
English summary
Mumbai longest sea bridge almost ready says maharashtra cm
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+