விமானிக்கான உரிமம் பெற பிரதமர் மோடி பெயரில் விமானம் தயாரித்த மும்பை பொறியாளர்..!!
பிரதமர் மோடி பெயரில் விமானம் தயாரித்த பொறியாளருக்கு குவியும் வாழ்த்துக்கள்.
விமானம் ஓட்டுவதற்கான உரிய உரிமம் பெறுவது என்பது எந்த நாட்டிலும் சாதரணம் கிடையாது. பல்வேறுக்கட்ட தேர்வுகளுக்கு பிறகு தான் விமானியாக முடியும்.

மும்பை சேர்ந்த ஒருவருக்கு விசித்தரமான யோசனை ஒன்று தோன்ற, அவராகவே விமானம் ஒன்றை தயாரித்து அதற்கு உரிமமும் பெற்றுவிட்ட செய்த இன்று நாடு முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமோல் யாதவின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவராகவே தயாரித்த விமானம் இன்றைய வாகன சூழ் உலகின் பேசுபொருளாக ஆகியுள்ளது.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இந்த விமானத்திற்கான தயாரிப்பு பணிகளில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
ரூ. 4 கோடி மதிப்பிலான இந்த விமானம் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரா ஃபட்னாவிஸை ஆச்சர்யம் அடையசெய்துள்ளது.

மேலும் அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமோல் யாதவ் தயாரித்துள்ள விமானத்தை பார்வையிடும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

விமானத்தை தானாக தயாரித்துள்ள அமோல் யாதவ்,
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஃபட்னாவிஸிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அதற்கு விடி-என்எம்டி (விக்டோர் டாங்கோ நரேந்திரா மோடி தேவந்திரா) என்று பெயரிட்டுள்ளார்.

தற்போது அமோல் யாதவிற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநர் என்ற பதவி மற்றும் அதற்கான உரிமத்தை முதல்வர் தேவந்திர ஃபட்னாவிஸ் வழங்கியுள்ளார்.

ஆறு பேர் அமரும் வகையிலான இருக்கையை பெற்ற இந்த விமானம் 13,000 அடி உயரம் வரை பறக்கும் திறன் பெற்றது. மணிக்கு 185 நாட்டிகல் அதாவது 342 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த விமானம், அதிகப்பட்சமாக 2000 கி.மீ வரை செல்ல முடியும்.

இன்றைய வாகன உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் விடி-என்எம்டி விமானத்தை முழுமையாக மும்பை கான்டிவாலியில் உள்ள தனது வீட்டு மொட்டை மாடியில்தயாரித்துள்ளார் அமோல் யாதவ்.

இதை தொடர்ந்து சுமார் 20 பேர் அமர்ந்து பயணிக்கும் புதிய விமானத்தை உரிய தரமான தொழில்நுட்பங்களுடன் தயாரிக்க திட்டமிட்டு வருவதாக அமோல் யாதவ் கூறியுள்ளார்.

ரூ.4 கோடி வரை செலவு செய்து, தானாகவே விமானம் தயாரித்து அதற்கு உரிமம் பெற்ற அமோல் யாதவிற்கு பல தரப்பு மக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications