இந்த மனசு தான் சார் கடவுள்!! 22 லட்ச ரூபாய் காரை அசால்ட்டாக விற்று சமூக பணியாற்றும் இளைஞர்!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த மனசு தான் சார் கடவுள்!! 22 லட்ச ரூபாய் காரை அசால்ட்டாக விற்று சமூக பணியாற்றும் இளைஞர்!

ஆனால் அதேசமயம் பலர் ஹீரோக்களாக உருவெடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸின் பரவலில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்படுவதால் மருத்துவ ஆக்ஸிஜன் தேவை இந்தியாவில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த மனசு தான் சார் கடவுள்!! 22 லட்ச ரூபாய் காரை அசால்ட்டாக விற்று சமூக பணியாற்றும் இளைஞர்!

ஏனெனில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருவது கடந்த சில வாரங்களாக தொடர் கதையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக டாடா குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்யும் பணியில் இறங்கியுள்ளன.

இந்த மனசு தான் சார் கடவுள்!! 22 லட்ச ரூபாய் காரை அசால்ட்டாக விற்று சமூக பணியாற்றும் இளைஞர்!

அதேநேரம் சில தனிநபர்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், ‘ஆக்ஸிஜன் மேன்' என அழைக்கப்படும் மும்பை, மலாட் நகரில் வசிக்கும் ஷாஹனாவா ஷேக் என்பவரை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

மலாட் நகரில் பிரபலமான நபராக விளங்கிவரும் ஷாஹனாவாஸ் சில நாட்களுக்கு முன்பு தான் தான் ஆசை ஆசையாக வாங்கிய ரூ.22 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு எஸ்யூவி காரை விற்று அதில் கிடைத்த பணத்தில் தனது பகுதி மக்களுக்காக 160 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கினார்.

இந்த மனசு தான் சார் கடவுள்!! 22 லட்ச ரூபாய் காரை அசால்ட்டாக விற்று சமூக பணியாற்றும் இளைஞர்!

ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவை என தொடர்பு கொள்வோருக்கு உடனடியாக தன்னிடம் உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சரியான நேரத்தில் டெலிவிரி செய்து வருகிறார். இதற்காக குழு ஒன்றையும், உதவி எண்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையையும் இந்த ஹீரோ அமைத்துள்ளார்,

உதவி எண்களில் தொடர்பு கொள்வோருக்கு உடனடியாக உதவும் ஷாஹனாவாஸின் குழுவினரிடம் இருந்து கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரையில் 4,000க்கும் அதிகமானோர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளனர்.

இந்த மனசு தான் சார் கடவுள்!! 22 லட்ச ரூபாய் காரை அசால்ட்டாக விற்று சமூக பணியாற்றும் இளைஞர்!

அதேநேரம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கி காட்டுவதையும் அவர்கள் கடமையாக கொண்டுள்ளனர். ஷாஹனாவாஸ் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மக்களுக்கு வழங்குவதற்கு ஓர் சிறு கதை உள்ளது.

அதாவது கடந்த ஆண்டு உடல்நலக்குறைவின் காரணமாக ஷாஹனாவாஸின் நண்பரின் மனைவி இறந்தார். இவரது மரணத்திற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்த சம்பவம் இவரை வெகுவாக பாதித்துள்ளது.

இந்த மனசு தான் சார் கடவுள்!! 22 லட்ச ரூபாய் காரை அசால்ட்டாக விற்று சமூக பணியாற்றும் இளைஞர்!

இதனாலேயே தேவை என்போருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்குவதை ஷாஹனாவாஸ் கடமையாக ஏற்று மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் வைரஸினால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது இந்த ஹீரோவை கவலையுற செய்துள்ளது.

ஷாஹனாவாஸிற்கு ஒவ்வொரு நாளும் 500ல் இருந்து 600 தொலைப்பேசி அழைப்புகள் ஆக்ஸிஜன் சிலிண்டரை வேண்டி வருகின்றனவாம். இந்த அளவிற்கு மக்களின் தேவை அறிந்து செயல்படும் இந்த மும்பை வாசி ரியல் ஹீரோ தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Man Sells Suv To Help Covid Patients With Oxygen Cylinders.
Story first published: Sunday, April 25, 2021, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X