லோக்கல் ட்ரெயினை லைவாக டிராக் செய்யலாம்... அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்த மத்திய ரயில்வேத்துறை!

லோக்கல் ட்ரெயினை லைவாக டிராக் செய்யும் செல்போன் செயலியை மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

லோக்கல் ட்ரெயினை லைவாக டிராக் செய்யலாம்... அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்த மத்திய ரயில்வேத்துறை!

ரயில்கள் ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. குறைந்த கட்டணம், தடையில்லா போக்குவரத்தை வழங்கக் கூடியதாக ரயில்கள் உள்ளன. நமது அண்டை நாடான இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக வாகனங்களுக்கான கட்டணம் கடுமையாக உயர்ந்துக் காணப்படுகின்றது. பெட்ரோல் - டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சில தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்து இயக்குவதை முற்றிலுமாக கைவிட்டிருக்கின்றனர்.

லோக்கல் ட்ரெயினை லைவாக டிராக் செய்யலாம்... அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்த மத்திய ரயில்வேத்துறை!

இந்த மாதிரியான அசாத்தியமான சூழல் நிலவியதன் விளைவாக இலங்கை மக்கள் தங்களின் பிரதான பயணங்களுக்கு ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். பெருமளவில் மக்கள் குவிந்ததன் விளைவு ரயில்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் நிலை தென்படுகின்றது. பேருந்துகளில் ஃபுட்ஃபோட் அடிப்பதைப் போல் இலங்கை மக்கள் ரயில்களில் தொங்கியபடி பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

லோக்கல் ட்ரெயினை லைவாக டிராக் செய்யலாம்... அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்த மத்திய ரயில்வேத்துறை!

ஜன்னல், கதவு என அனைத்திலும் மக்கள் தொங்கியபடி பயணித்துக் கொண்டிருப்பதை வைரல் வீடியோக்கள் நமக்கு தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலுக்கு பேருந்துகள் அதிக கட்டணத்துடன் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுவது மட்டுமே காரணம் இல்லைங்க, ரயில்கள் மிகக் குறைவான கட்டணத்தில் இயக்கப்படுவதே மிக முக்கியமான காரணமாக உள்ளது. இலங்கையைப் போல் இந்தியாவிலும் ரயில்கள் மிக முக்கியமான போக்குவரத்து வாகனமாக உள்ளது. இங்கு பேருந்துகளுக்கு பஞ்சமில்லை என்றாலும் ரயில்கள் மக்கள் நெரிசலால் நிரம்பி வழிகின்றது.

லோக்கல் ட்ரெயினை லைவாக டிராக் செய்யலாம்... அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்த மத்திய ரயில்வேத்துறை!

அந்தளவிற்கு மிக முக்கியமான போக்குவரத்தாக ரயில்கள் உள்ளன. இந்த ரயில் போக்குவரத்தை பயணிகளுக்கு எளிதாக்கும் பொருட்டு சிறப்பு ஆப் (App) ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி குறிப்பிட்ட ஓர் ரயிலின் ரியல்-டைம் லொகேஷனை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். ஆனால், இந்த செயலி மத்திய ரயில்வேவிற்காக மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லோக்கல் ட்ரெயினை லைவாக டிராக் செய்யலாம்... அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்த மத்திய ரயில்வேத்துறை!

அதாவது மும்பை வாசிகள் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக அது அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. யாத்ரி (Yatri) எனும் செயலியே ரயில் குறிப்பிட்ட நேரத்தில் எந்த இடத்தில் இருக்கின்றது?, அது எப்போது அடுத்த இரயில் நிலையத்தை வந்தடையும் என்பது போன்ற தகவலை வழங்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

லோக்கல் ட்ரெயினை லைவாக டிராக் செய்யலாம்... அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்த மத்திய ரயில்வேத்துறை!

இன்று (ஜூலை 13) முதல் செயலி பயன்பாட்டிற்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு செயலியைதான் நம்மை சென்னை வாசிகளும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு வெகுவிரைவில் நிறைவேறிவிடும் என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே யாத்ரி செயலியின் வருகை அமைந்துள்ளது.

லோக்கல் ட்ரெயினை லைவாக டிராக் செய்யலாம்... அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்த மத்திய ரயில்வேத்துறை!

ரயிலின் ரியல்-டைம் இருப்பிடத்தை அறிந்துக் கொள்வதற்காக அனைத்து ரயில்களின் எஞ்ஜின்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியே ஆப் வாயிலாக ரயிலின் நிகழ் நேர இடத்தை துள்ளியமாக காண்பிக்கும். இந்த செயலி ஒவ்வொரு 15 வினாடிகளுக்கும் தானாக ரெஃப்ரெஷ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லோக்கல் ட்ரெயினை லைவாக டிராக் செய்யலாம்... அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்த மத்திய ரயில்வேத்துறை!

இதுதவிர பயனர்களாலும் மேனுவலாக ரெஃப்ரெஷ் செய்துகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், எந்த நிலையிலும் துள்ளியமான தகவல்களுக்கு எந்த தடையும் இருக்காது என்பது தெளிவாக தெரிகின்றது. டிஜிட்டல் சேவையை வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கிலும், பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் பொருட்டும் மத்திய ரயில்வே துறை இந்த ஆப்பை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

லோக்கல் ட்ரெயினை லைவாக டிராக் செய்யலாம்... அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்த மத்திய ரயில்வேத்துறை!

இது முற்றிலும் இலவசமான ஆப் என கூறப்படுகின்றது. தற்போது, மும்பை வாசிகளின் பயன்பாட்டிற்காக எம்-இன்டிகேட்டர் எனும் செயலி பயன்பாட்டில் உள்ளது. இது ஓர் தனியார் நிறுவனத்தின் செயலி ஆகும். இதன் வாயிலாக ரயில்களின் நிகழ்நேர இடத்தை மும்பை வாசிகள் கண்டறிந்து வருகின்றனர். குறிப்பாக, பல ஆயிரக் கணக்கான மும்பை மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

லோக்கல் ட்ரெயினை லைவாக டிராக் செய்யலாம்... அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்த மத்திய ரயில்வேத்துறை!

இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியன் ரயில்வே புதிய முயற்சியாக ரயிலின் நிகழ்நேர இருப்பிடத்தைக் கண்டறியக் கூடிய யாத்ரி செயலியை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த செல்போன் செயலி பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே 4.5 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுண்லோடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, July 14, 2022, 7:30 [IST]
English summary
Mumbai peoples can track local train via official app
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+