திரைபட பாணியில் காரை ஓட்டி சென்ற மாணவர்கள்... வீடியோ வைரலானதால் அரங்கேறிய அவலம்...!
சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானதால், மாணவர்கள் சிலர் போலீஸிடம் சிக்கியுள்ளனர். இதுகுறித்த தகவலை விவரமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இணையத்தின் சக்தியை விவரிக்கும் வகையில், அண்மைக் காலங்களாக நடைபெற்று சம்பவங்கள் இருக்கின்றன. அந்தவகையில், நடிகர் வடிவேலுவின் காண்டராக்டர் நேசமணி காமெடி உலகளவில் வைரலானது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

அந்த காமெடிக் காட்சிகளை வைத்து வைரலான, ப்ரே ஃபார் நேசமணி உலகளவில் ட்ரெண்டிங்கில் முதன்மை இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இத்தனைக்கும் அந்த திரைப்படம் வெளிவந்து, 18 ஆண்டுகளுக்கும் மேலாகின்றது. அதேசமயம், இது வைரலான அன்றைய தினத்தில், இந்திய நாட்டின் பிரதமராக மோடி இரண்டாம் முறை பதவியேற்கும் நாளாக இருந்தது.

ஆகையால், நாடு முழுவதும் அன்றைய மோடிய தினத்தில் அலை வீசிக்கொண்டிருக்க, அதனை வீழ்த்தும் பேரலையாக வைரலானது, கான்டராக்டர் நேசமணி என்ற ஹேஸ்டேக். இவ்வாறு, இணையதளமானது யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதையே முன்னதாக நடைபெற்ற, சில சம்பவங்களும், அண்மையில் அரங்கேறிய நேசமணி சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

இதேபோன்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ ஒன்று, திடீரென வைரலாகியதால் மாணவர்கள் சிலருக்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் போலீஸிடம் சிக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோவினை சாந்தோனில் நாக் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், மாணவர்கள் சிலர் திரைப்படத்தில் வரும் காட்சிகளைப்போன்று, கையில் மதுபாட்டில்களுடன், காரின் ஜன்னல் பகுதியாக வெளியே அமர்ந்தவாறு மும்பை நகரச் சாலையை வலம் வந்துள்ளனர்.

அப்போது, சாலை வழியாக வந்த மற்றுமொரு கார் ஓட்டுநர், அவரது செல்போன் மூலம் காட்சிப்படுத்தி இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்டு தீயாய் வைரலானதை அடுத்து, போலீஸாரின் கண்களிலும் சிக்கியுள்ளது. இதனால், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்த மாணவர்கள் மீது, மோட்டார் வாகன சட்டம் 184ன் கீழ், 279 மற்றும் 336 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், வீடியோவில் காட்டியாகியிருந்த காரின் பதிவெண்ணைக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர். அதில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக மொஹமத் சுல்தான் ஷேக் (வயது 20), ஸ்மிர் சஹிபோல் (வயது 20), அனஸ் ஷேக் (வயது 19) உள்ளிட்டோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இவர்கள் அன்றைய தினம், வெள்ளிக்கிழமை என்பதால், ஹூண்டாய் அக்செண்ட் காரில், இரவு சுற்றுலா (night out) செல்வதற்காக பயணித்துள்ளனர். அப்போதுதான், இவ்வாறு சட்ட ஒழுங்கு மீறலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இளைஞர்களின் இந்த அபாயகரமான பயணம் குறித்த வீடியோவை, அவர்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மும்பை நகர போலீஸார், அந்த மாணவர்களை கைது செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்று ஒழுங்குமீறலில் ஈடுபட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மீறினால், கடுமையான தண்டனையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற, இணையத்தில் வைரலாகிய வீடியோவை வைத்து, அதிரடி நடவடிக்கையில் மும்பை நகர போலீஸார் ஈடுபடுவது முதல் முறையல்ல, இதற்கு முன்னதாகவும் அவர்கள் இதேபோன்று, இணையத்தில் வைரலாகிய வீடியோவைச் சிலரை கைது செய்துள்ளனர்.

அவ்வாறு, திரை பிரபலமான வருன் தவான் உள்ளிட்ட சிலர் மீது மும்பை நகர போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதேபோன்று, சாலையில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமிரா காட்சியை வைத்தும் போலீஸார் சிலர்மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








