வீடியோவை வைத்து கேடிஎம் பைக் ரைடரை தேடிச்சென்று தூக்கிய போலீஸார்!! பொது சாலையில் ஸ்டண்ட் செய்தால் இதான் நிலைமை

பொது இடத்தில் ஸ்டண்ட் செய்ததன் காரணமாக மும்பையில் கேடிஎம் பைக் ரைடர்கள் இருவர் மீது அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வீடியோவை வைத்து கேடிஎம் பைக் ரைடரை தேடிச்சென்று தூக்கிய போலீஸார்!! பொது சாலையில் ஸ்டண்ட் செய்தால் இதான் நிலைமை

மோட்டார்சைக்கிள்களில் ஆபத்தான வகையில் ஸ்டண்ட் செய்யும்போது சிலர் தப்பித்துவிடுகின்றனர். ஆனால் சம்பவத்தை அப்படியே வீடியோவாக காட்சிப்படுத்தி சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடும்போதுதான் பெரும்பாலானோர் சிக்கி கொள்கின்றனர்.

வீடியோவை வைத்து கேடிஎம் பைக் ரைடரை தேடிச்சென்று தூக்கிய போலீஸார்!! பொது சாலையில் ஸ்டண்ட் செய்தால் இதான் நிலைமை

அவ்வாறு தான் நாம் இந்த செய்தியில் பார்க்க போகும் நபரும் மாட்டிக்கொண்டுள்ளார். இணையத்தில் வைரலான அவர்களது வீடியோவை பார்த்த போலீஸார் அதனடிப்படையில் இருவர் மீது ஐபிசி 279 & ஆபத்தான முறையில் பைக் ரைடு செய்ததற்காக மோட்டார் வாகன சட்டத்திலும் வழக்கு பதிவு செய்தனர்.

அதுமட்டுமின்றி வீடியோவில் உள்ள இருவரது ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த மும்பை போலீஸாரின் டுவிட்டர் பதிவினை தான் கீழே காண்கிறோம். இதில், பார்பி பெண்ணே, வாழ்க்கை என்பது பிளாஸ்டிக் அல்ல- பாதுகாப்பின் அருமையான உலகம்! காவல் துறை உங்களுக்கு இதை நினைவூட்டுகிறது.

வீடியோவை வைத்து கேடிஎம் பைக் ரைடரை தேடிச்சென்று தூக்கிய போலீஸார்!! பொது சாலையில் ஸ்டண்ட் செய்தால் இதான் நிலைமை

குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் ஐபிசி & மோட்டார் வாகன சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டு, அவர்களது ஸ்டண்ட் வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவிடப்பட்ட இந்த வீடியோவினை இதுவரையில் மட்டுமே 20,000 பேர் பார்த்துள்ளனர்.

வீடியோவை வைத்து கேடிஎம் பைக் ரைடரை தேடிச்சென்று தூக்கிய போலீஸார்!! பொது சாலையில் ஸ்டண்ட் செய்தால் இதான் நிலைமை

இதில் ஸ்டண்ட் செய்தவர்களை போலீஸார் பார்பி கேர்ள் என அழைப்பதற்கு காரணம், ஸ்டண்ட்டில் அவர்கள் பயன்படுத்திய கேடிஎம் பைக், உலகளவில் பிரபலமான பார்பி கேர்ள் கார்ட்டூன் ஸ்டிக்கர் உடன் சிறிது மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் வீடியோவில் கேடிஎம் பைக் வித்தியாசமாக பிங்க் நிறத்தில் காட்சியளிக்கிறது.

வீடியோவை வைத்து கேடிஎம் பைக் ரைடரை தேடிச்சென்று தூக்கிய போலீஸார்!! பொது சாலையில் ஸ்டண்ட் செய்தால் இதான் நிலைமை

ஸ்டண்டின்போது இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. இதனால் இவர்களை அடையாளம் காணுவது போலீஸாருக்கு நிச்சயம் எளிமையானதாக இருந்திருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு இவர்களது அடையாளம் தெரிய வேண்டாம் என்பதற்காக போலீஸார் வெளியிட்டுள்ள வீடியோவில் இருவரது முகமும் மறைக்கப்பட்டுள்ளது.

வீடியோவை வைத்து கேடிஎம் பைக் ரைடரை தேடிச்சென்று தூக்கிய போலீஸார்!! பொது சாலையில் ஸ்டண்ட் செய்தால் இதான் நிலைமை

வீடியோவின் இறுதியில் அருகில் செல்லும் பாதசாரியின் மீது மோட்டார்சைக்கிள் மோதுவது போன்று இருந்தது. ஆனால் ரைடர் எப்படியோ சமாளித்து பைக்கை நிறுத்திவிட்டார். மோதி இருந்தால், வழக்கு இன்னும் வலுவாகி இருக்கும். இந்த வீடியோவை மற்றொரு பைக்கில் இருந்தவாறு காட்சிப்படுத்திய இவர்களது குழுவை சேர்ந்தவர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.

வீடியோவை வைத்து கேடிஎம் பைக் ரைடரை தேடிச்சென்று தூக்கிய போலீஸார்!! பொது சாலையில் ஸ்டண்ட் செய்தால் இதான் நிலைமை

பொது இடத்தில் ஸ்டண்ட் செய்தது மட்டுமின்றி ஹெல்மெட் அணியாததும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றமாகும். ஸ்டண்ட் செய்வதே தவறாகும், அதிலும் ஹெல்மெட் அணியாமல் இவ்வாறு ரைடிங் செய்வது விபத்தில் கொண்டு சென்று முடிக்கும்.

வீடியோவை வைத்து கேடிஎம் பைக் ரைடரை தேடிச்சென்று தூக்கிய போலீஸார்!! பொது சாலையில் ஸ்டண்ட் செய்தால் இதான் நிலைமை

மோட்டார்சைக்கிள் ஸ்டண்ட்கள் எப்போதும் ஆபத்தானவையே. ஏனெனில் அந்த சமயத்தில் உங்களது ஸ்டண்ட்-ஐ மட்டுமே கவனிப்பீர்கள் என்பதால், மற்ற வாகன ஓட்டிகளின் மீது அவ்வளவு எளிதாக உங்களது கவனம் செல்லாது. இதனால் அப்பாவி வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி கொள்ள நேரிடும்.

வீடியோவை வைத்து கேடிஎம் பைக் ரைடரை தேடிச்சென்று தூக்கிய போலீஸார்!! பொது சாலையில் ஸ்டண்ட் செய்தால் இதான் நிலைமை

தற்சமயம் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை என்பதால் இவ்வாறான ஸ்டண்ட்களை செய்துவிட்டு தப்பித்து செல்வது என்பது உண்மையில் கடினமான காரியமாகும். அதுமட்டுமின்றி சிக்னலுக்கு சிக்னல் போலீஸாரும் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி வைத்துள்ளனர். இவை சட்ட ஒழுங்கை கண்காணிப்பதில் மட்டுமின்றி, குற்றவாளிகளை பிடிக்கவும் உதவியாக இருக்கின்றன.

வீடியோவை வைத்து கேடிஎம் பைக் ரைடரை தேடிச்சென்று தூக்கிய போலீஸார்!! பொது சாலையில் ஸ்டண்ட் செய்தால் இதான் நிலைமை

வாகன மாடிஃபிகேஷன் இந்தியாவில் சட்ட விரோதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது வாகனத்தின் வடிவத்தில் கை வைக்காமல், அதன்மீது பிரத்யேகமான ஸ்டிக்கர்களை ஒட்டி கொள்வது, வண்ண வண்ண நிறங்களில் பெயிண்ட் செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கும் சில விதிமுறைகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Police books Barbie-theme KTM rider for stunting on public roads.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X