இது ரொம்ப புதுசா இருக்கே... ஆட்டோ டிரைவர்களுக்கு செக் வைத்து மாஸ் காட்டிய போலீஸ்... என்னனு தெரியுமா?
ஆட்டோ டிரைவர்களுக்கு செக் வைத்து போலீசார் மாஸ் காட்டியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹெட்போன் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. இது சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும். ஹெட்போன் மூலம் பாடல்களை கேட்டு கொண்டோ அல்லது பேசி கொண்டே வாகனம் ஓட்டினால், உங்கள் கவனம் நிச்சயம் சிதறி விடும். எனவே ஹெட்போன் அணிந்தபடி வாகனங்களை ஓட்டுவது சட்டத்திற்கு புறம்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.

கார் அல்லது பைக் என அனைத்து விதமான வாகனங்களுக்கு இது பொருந்தும். ஆனால் இந்திய சாலைகளில், ஹெட்போன் அணிந்தபடி வாகனம் ஓட்டுபவர்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த விதிமுறைக்கு மதிப்பு கொடுப்பதில்லை. குறிப்பாக ஆட்டோ டிரைவர்கள்தான் ஹெட்போன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

எனவே ஹெட்போன்களை பயன்படுத்தும் ஆட்டோ டிரைவர்களை களையெடுக்க மும்பை போலீசார் அதிரடி நடவடிக்கை ஒன்றை தற்போது மேற்கொண்டுள்ளனர். மிரா சாலை பகுதியில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆட்டோ ஓட்டும்போது ஹெட்போன்களை பயன்படுத்திய டிரைவர்களை போலீசார் நிறுத்தியுள்ளனர்.

பின் அவர்களிடம் இருந்து ஹெட்போன்களை வாங்கி, அவற்றை மொத்தமாக தீ வைத்து கொளுத்தியுள்ளனர். ஆட்டோ ஓட்டும்போது ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டாம் என டிரைவர்களுக்கு போலீசார் பல முறை எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் யாரும் அதனை பெரிதாக கண்டுகொள்வதாக இல்லை. இதன் காரணமாகதான் தற்போது இந்த அதிரடி நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர்.

தற்போது அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆட்டோ டிரைவர்களிடமிருந்து ஹெட்போன்களை போலீசார் வாங்குவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இறுதியில் போலீசார் ஹெட்போன்களை ஒன்றாக சேர்த்து தீ வைத்து கொளுத்தியுள்ளனர். ஆனால் இதனை பாராட்டத்தக்க நடவடிக்கை என்று கூற முடியாது.

ஏனெனில் இது தேவையில்லாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இதன் மூலம் ஆட்டோ டிரைவர்களுக்கு வலுவான எச்சரிக்கையை போலீசார் விடுத்துள்ளனர். இதனால் ஆட்டோ ஓட்டும்போது ஹெட்போன்களை பயன்படுத்தும், டிரைவர்களின் எண்ணிக்கை இனி வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதற்கு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே முதன்மையான காரணம். வாகனம் ஓட்டும்போது ஹெட்போன்களை பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஹெட்போன் பயன்படுத்தும்போது சாலையில் கவனமாக இருக்க முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

வாகனம் ஓட்டும்போது ஹெட்போன் மூலம் பாடல்களை கேட்பதை தவிர்த்து விடுங்கள். மேலும் செல்போனில் பேசுவதையும் தவிர்க்கலாம். வாகனத்தை நிறுத்தி விட்டு செல்போனில் பேசுவதுதான் நல்லது. ஆனால் மற்றொரு விஷயத்திலும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன் அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்காக, வாகனத்தை திடீரென அப்படியே நிறுத்தாதீர்கள்.
நீங்கள் அவ்வாறு செய்தால், பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது உங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே வண்டியை கவனமாக ஓரங்கட்டி நிறுத்திய பிறகு செல்போன் அழைப்புகளுக்கு பதில் அளியுங்கள்.


Click it and Unblock the Notifications








