தேதி குறிச்சிட்டாங்க! நவம்பர் 1ம் தேதிக்கு அப்புறம் கார்ல இதை செய்யாம போனீங்கன்னா உங்களுக்கு ஆப்பு தான்....
நவம்பர் 1ம் தேதிக்குப் பிறகு மும்பையில் வாகனங்களில் எந்த பயணி சீட் பெல்ட் போடவில்லை என்றாலும் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை வரும் என மும்பை போலீசார் ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இது குறித்த முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

காரில் செல்லும் நம்மில் பலருக்கு மோட்டார் வாகன சட்டமே முழுமையாகத் தெரிவதில்லை, முக்கியமாக சீட்பெல்ட் குறித்த விழிப்புணர்வு மக்கள் பலருக்கு இல்லை. பலர் இன்னுமும் முறையாக சீட் பெல்ட் அணியாமல் தான் வாகனம் ஓட்டி வருகின்றனர்.

சிலர் காரின் டிரைவர் மட்டும் சீட் பெல்ட் அணிந்தால் போதும் என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் மோட்டார் வாகன சட்டப்படி ஒரு காரில் எத்தனை பேர் பயணிக்கிறார்களோ அத்தனைப்பேரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது விதிமுறை.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் கடந்த மாதம் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர் விபத்தில் மரணமடைவதற்கு முக்கியமான காரணம் இவர் காரில் பின் சீட்டில் அமர்ந்திருந்தாலும், அவர் சீட் பெலட் அணியாமல் இருந்ததால் தான் மரணமடைந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் பின் சீட்டில் அமர்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணி வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பின் சீட்டில் சீட் பெல்ட் அணியவிட்டாலும் சிட்பெல்ட் அலாரம் கட்டாயம் ஒலிக்க வேண்டும் என் வாகன தயாரிப்பு தரக்கட்டுப்பாட்டில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

மேலும் சீட் பெல்ட் அலாரத்தை ஆஃப் செய்யும் கருவிகளையும் விற்பனை செய்யத் தடை விதித்து விட்டனர். இது குறித்து வட இந்தியாவில் பல இடங்களில் வாகனத்தின் பின் சீட்டில் அமர்ந்து பயணித்தாலும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என ஆங்காங்கே சோதனைகள் நடந்தது.

இந்நிலையில் மும்பை போலீசார் இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்த மக்களுக்கு ஒரு காலக்கெடுவை விதித்துள்ளனர். இன்று இந்தியாவில் பலர் தங்கள் வாகனங்களில் பின் சீட்டில் சீட்பெல்ட் வசதி இல்லாமலேயே இருக்கின்றனர். இந்நிலையில் மும்பைபோலீசார் விடுத்த எச்சரிக்கையில் மும்பையில் செயல்படும் அத்தனை வாகனங்களுக்கும், வரும் அக்டோபர் 31ம் தேதி வரைபின் சீட்டில் சீட்பெல்ட் பொருத்தக் காலக் கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கெடுவிற்குள் மக்கள் அனைவரும் தங்கள் வாகனத்தில் பின் சீட் உள்ள பயணிகள் சீட் எதில் சீட் பெல்ட் இல்லை என்றாலும் அதை உடனடியாக பொருத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நவம்பர் 1ம் தேதி முதல் வாகன தணிக்கையின் போது பின் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தாலும் சரி சீட் பெல்ட் வசதியே இல்லை என்றாலும் அவர்களுக்கு மோட்டார் வாகன சட்டம் 194(b)(1)-ன்படி அபராதம் விதிக்கப்படுவர் என எச்சரித்துள்ளனர்.

இது குறித்து மும்பை போலீசார் அளித்த அறிக்கையில் : "மோட்டார் வாகன டிரைவர்கள் மற்றும் பயணிகள் என வாகனத்தில் பயணம் செய்பவர்கள் எல்லோரும் கட்டாயம் சீட் பெல்டில் அணிய வேண்டும். இதற்கு நவம்பர் மாதம் 1ம் தேதி வரை தான் கெடு. அதற்குள் மோட்டார் வாகனங்களில் சீட் பெல்ட் இல்லாமல் இருக்கும் வாகனங்கள் எல்லாம் சீட் பெல்ட்களை பொருத்திக்கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளனர்.

மேலும் சீட் பெல்ட் அலாரத்தை ஆஃப் செய்யும் கருவிகளை பயன்படுத்தினாலும் சட்டப்படி குற்றம். அதைப் பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது. ஏற்கனவே அதற்கான விற்பனையைத் தடை செய்துவிட்டாலும் தடைக்கு முன்பு அந்த பொருளை வாங்கியவர்களும் அதைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மும்பை போலீசார் சார்பில் மட்டுமே இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும் இனி தொடர்ந்து இந்தியா முழுவதும் இப்படியாக வாகனத்தின் சீட் பெல்ட்களுக்காக ஆங்காங்கே தணிக்கை நடத்தப்படும். குறிப்பாக பின் சீட்டில் உள்ளவர்களும் சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்களான சோதனை நடைபெறும் எனத் தெரியவந்துள்ளது.

சென்னையில் வெகு வரைவில் இது சென்னை போலீசார் சார்பில் அமல்படுத்தப்படலாம் என்பதால் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் எந்தப்பகுதியில் இருந்தாலும் சீட்பெல்ட்அணிந்து பயணம் செய்யுங்கள்.

வாகனத்தின் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிவது போலீசாரிடம் அபராதம் செலுத்துவதைத் தடுப்பதைத் தாண்டி, நமது உயிருக்கும் பாதுகாப்பானதாகும். இதனால் நீங்கள் உங்கள் மீதும் உங்களுடன் வாகனத்தில் பயணிப்பவர்கள் மீதும் அக்கறை கொண்டு வாகனத்தில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிவதைத் தடுக்க தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications








