டிராஃபிக் ஜாம் இல்லாம சீக்கிரமா போலாம்... புதிய வாட்டர் டாக்ஸி விரைவில் அறிமுகம்... டிக்கெட் எவ்ளோனு தெரியுமா?

மும்பையில் வெகு விரைவில் புதிய வாட்டர் டாக்ஸி சேவை தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிராஃபிக் ஜாம் இல்லாம சீக்கிரமா போலாம்... புதிய வாட்டர் டாக்ஸி விரைவில் அறிமுகம்... டிக்கெட் எவ்ளோனு தெரியுமா?

மும்பை மாநகரம் புதிய வாட்டர் டாக்ஸி (Water Taxi) சேவையை பெறவுள்ளது. தெற்கு மும்பையை, நவி மும்பையுடன் இணைக்கும் வகையில் இந்த வாட்டர் டாக்ஸி சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த புதிய வாட்டர் டாக்ஸி சேவை நடப்பு மாதம் முதல் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பயண நேரம் வெறும் 25 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிராஃபிக் ஜாம் இல்லாம சீக்கிரமா போலாம்... புதிய வாட்டர் டாக்ஸி விரைவில் அறிமுகம்... டிக்கெட் எவ்ளோனு தெரியுமா?

தெற்கு மும்பையின் மெஹான் பகுதியில் உள்ள உள்நாட்டு படகு முனையத்துடன், நவி மும்பையின் நெருல், பெலாபட் மற்றும் ஜேஎன்பிடி எனப்படும் ஜவஹர்லால் நேரு துறைமுக கழகம் (JNPT - Jawaharlal Nehru Port Trust) ஆகிய பகுதிகளை இணைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை.

டிராஃபிக் ஜாம் இல்லாம சீக்கிரமா போலாம்... புதிய வாட்டர் டாக்ஸி விரைவில் அறிமுகம்... டிக்கெட் எவ்ளோனு தெரியுமா?

இரண்டு இடங்களுக்கு இடையேயான ஒரு வழிப்பாதை கட்டணம் 200 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை இருக்கலாம் என இந்த விவகாரம் குறித்து அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மாதாந்திர பாஸ்களும் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையை நடப்பு மாதம் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிராஃபிக் ஜாம் இல்லாம சீக்கிரமா போலாம்... புதிய வாட்டர் டாக்ஸி விரைவில் அறிமுகம்... டிக்கெட் எவ்ளோனு தெரியுமா?

வாட்டர் டாக்ஸி சேவை மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கலாம். அதாவது லோக்கல் ட்ரெயின்கள் மற்றும் சாலை மார்க்கமான பொது போக்குவரத்து ஆகியவற்றின் சுமை இதன் மூலம் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் பயண நேரம் குறையும் என்பதும் இந்த வாட்டர் டாக்ஸியின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

டிராஃபிக் ஜாம் இல்லாம சீக்கிரமா போலாம்... புதிய வாட்டர் டாக்ஸி விரைவில் அறிமுகம்... டிக்கெட் எவ்ளோனு தெரியுமா?

ஆனால் வாட்டர் டாக்ஸி சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடப்பு மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தற்போது கொரோனா வைரஸின் மூன்றாவது அலை வீச தொடங்கியுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

டிராஃபிக் ஜாம் இல்லாம சீக்கிரமா போலாம்... புதிய வாட்டர் டாக்ஸி விரைவில் அறிமுகம்... டிக்கெட் எவ்ளோனு தெரியுமா?

இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாட்டர் டாக்ஸி சேவை தொடங்கப்படுமா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டிருக்கும் நகரங்களில் ஒன்றாக மும்பை உள்ளது. மூன்றாவது அலையிலும் மும்பை மாநகரில் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

டிராஃபிக் ஜாம் இல்லாம சீக்கிரமா போலாம்... புதிய வாட்டர் டாக்ஸி விரைவில் அறிமுகம்... டிக்கெட் எவ்ளோனு தெரியுமா?

எனவே நடப்பு மாதம் வாட்டர் டாக்ஸி சேவை தொடங்கப்படுமா? என்பதில் ஒரு சில சந்தேகங்கள் இருக்கின்றன. இருப்பினும் ரயில் மற்றும் சாலை மார்க்கமான பொது போக்குவரத்தில் காணப்படும் நெரிசல் பிரச்னைக்கு, இந்த வாட்டர் டாக்ஸி சேவை ஓரளவிற்கு தீர்வாக அமையலாம் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

டிராஃபிக் ஜாம் இல்லாம சீக்கிரமா போலாம்... புதிய வாட்டர் டாக்ஸி விரைவில் அறிமுகம்... டிக்கெட் எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவின் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை எந்த அளவிற்கு தலைவிரித்தாடி வருகிறது என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக மும்பை போன்ற பெரு நகரங்களின் சாலைகள் வாகன வெள்ளத்தில் மிதக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு பெரு நகரத்திற்கு வாட்டர் டாக்ஸி போன்ற சேவைகள் மிகவும் அவசியமானதுதான்.

டிராஃபிக் ஜாம் இல்லாம சீக்கிரமா போலாம்... புதிய வாட்டர் டாக்ஸி விரைவில் அறிமுகம்... டிக்கெட் எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவின் ஒரு சில நகரங்களில் ஹெலிகாப்டர் டாக்ஸி சேவைகளும் தற்போது கிடைக்கின்றன. அவசர தேவைகளுக்கு பலர் அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வாட்டர் டாக்ஸி போன்ற சேவைகளை சாத்தியமுள்ள நகரங்களில் மட்டுமே ஏற்படுத்த முடியும். அரசு இதனை ஆராய்ந்து, வாய்ப்புள்ள நகரங்களில் வாட்டர் டாக்ஸி சேவைகளை ஏற்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்கலாம்.

டிராஃபிக் ஜாம் இல்லாம சீக்கிரமா போலாம்... புதிய வாட்டர் டாக்ஸி விரைவில் அறிமுகம்... டிக்கெட் எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் மத்திய அரசு தற்போது தேசிய நெடுஞ்சாலை பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. விரைவான போக்குவரத்திற்கு இந்த சாலைகள் உதவும் என்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அத்துடன் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் தரமான சாலைகள் உதவி செய்யும்.

டிராஃபிக் ஜாம் இல்லாம சீக்கிரமா போலாம்... புதிய வாட்டர் டாக்ஸி விரைவில் அறிமுகம்... டிக்கெட் எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் கூடிய விரைவில் அமெரிக்காவிற்கு இணையான சாலைகளை காண முடியும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தற்போது தெரிவித்து வருகிறார். இதேபோல் நீர் வழிப்பாதை பயணங்களை ஊக்குவிப்பதற்கும் மத்திய அரசு இன்னும் தீவிரம் காட்டினால் நன்றாக இருக்கும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai to get new water taxi service
Story first published: Saturday, January 8, 2022, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X