ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

குழப்பங்களுக்கு மத்தியில் 2,000 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்திருப்பது, அதன் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் ஆட்டோ, டாக்ஸி மற்றும் பேருந்து என பொது போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. அத்துடன் தனியார் கார், இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

இந்த எச்சரிக்கைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களை காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். ஆனால் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு விட்டன. இதன் ஒரு பகுதியாக பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ, டாக்ஸி மற்றும் பேருந்துகள் தற்போது இயங்குகின்றன.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

அதேபோல் தனியார் கார், இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு பயணங்களை மேற்கொள்வது எளிதாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் இன்னமும் கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன. இதில், பாதிப்பு உச்சகட்டத்தில் உள்ள மும்பையும் ஒன்று.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

மும்பையில் வாகனங்களை இயக்குவதற்கு இன்னமும் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல் துறை அதிகாரிகள் விதித்துள்ளனர். இந்த எச்சரிக்கையை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி கடந்த 4 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை மும்பை போக்குவரத்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

அனுமதிக்கப்படாத பயணம் (Non-Permitted Travel), அத்தியாவசியமற்ற பயணம் (Non-Essential Travel) என்ற காரணத்தை முன்வைத்து இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த செவ்வாய்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த வார தொடக்கத்திலேயே காவல் துறையினர் டிவிட்டர் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் ''அன்லாக்'' செயல்முறை மூலம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், மும்பை காவல் துறையின் விதிமுறைகள் தெளிவற்றதாகவும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

மும்பை காவல் துறையினரின் இந்த நடவடிக்கைகக்கு எதிராக டிவிட்டரில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு டிவிட்டர் பயனர், ''அனுமதிக்கப்படாத மற்றும் அத்தியாவசியம் இல்லாத வாகன இயக்கம் என்பதை எப்படி வரையறை செய்துள்ளீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்த முடியுமா? வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே-யில் தற்போது அதிகப்படியான போக்குவரத்து இருக்கிறது.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

அதை பார்க்கையில், நீங்கள் உண்மையில் அனுமதிக்கப்பட்ட அல்லது அத்தியாவசியமான பயணங்களை மட்டும்தான் மேற்கொள்ள அனுமதிக்கிறீர்களா? என்பது ஆச்சரியமாக உள்ளது'' என கேள்வி கேட்டுள்ளார். அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், ஷாப்பிங் மற்றும் உடற்பயிற்சி ஆகிய அத்தியாவசியமில்லாத செயல்முறைகள் வீடுகளுக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

அரசு நிர்ணயம் செய்துள்ள இந்த வழிகாட்டுல்களை பின்பற்றிதான் நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என மும்பை போக்குவரத்து காவல் துறையினர் கூறுகின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஷாப்பிங் செய்வதற்காக வீட்டில் இருந்து வெகு தூரம் செல்லக்கூடாது. வீடுகளுக்கு அருகிலேயே உள்ள வசதிகளை பயன்படுத்தி இந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

கொரோனா வைரஸை நாம் வெல்ல வேண்டுமானால் சிரமம் பார்க்கமால், கூட்டு முயற்சியை வெளிப்படுத்த வேண்டும்'' என்றார். ஆனால் வேலைக்கு செல்வது மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்வது ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகளற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களுக்கு வீடுகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவு மட்டுமே செல்ல முடியும் என்பதில்லை. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லலாம்.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

மேலும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் அதிக பயணிகள் சென்றாலும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். அதாவது மூன்று சக்கர வாகனங்களில், இரண்டு பயணிகள் மற்றும் ஓட்டுனர் என மொத்தம் மூன்று பேர் மட்டும்தான் பயணம் செய்ய முடியும். அதே சமயம் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில், மூன்று பயணிகள் மற்றும் ஓட்டுனர் என நான்கு பேர்தான் செல்ல முடியும்.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

இந்த விதிமுறை மீறப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி மும்பையில் செவ்வாய் கிழமை 250 வாகனங்களும், புதன் கிழமை 592 வாகனங்களும், வியாழக்கிழமை 633 வாகனங்களும் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரையில், 550 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

ஆக மொத்தத்தில் வெறும் நான்கே நாட்களில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மும்பை போக்குவரத்து போலீசார் கடந்த ஜூன் மாதம் ஒரு புதிய விதிமுறையை கொண்டு வந்தனர். இதன்படி உரிய காரணம் இல்லாமல் ஒருவர் தனது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மேல் செல்லக்கூடாது.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

ஆனால் மருத்துவ தேவைகள் இருந்தாலோ அல்லது அலுவலகம் செல்ல வேண்டி இருந்தாலோ 2 கிலோ மீட்டர் சுற்றளவை கடந்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்ட ஒரு வார காலத்திற்கு உள்ளாகவே மும்பை காவல் துறையினர் அதில் திருத்தம் செய்தனர். இதன்படி '2 கிலோ மீட்டர்' என்ற வார்த்தைக்கு பதிலாக 'வீடுகளுக்கு அருகில்' என மாற்றம் செய்யப்பட்டது.

ஒரே குழப்பம்... 2,000 வண்டிகளை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு கடுப்பான வாகன உரிமையாளர்கள்...

இது இன்னும் குழப்பத்தை அதிகரித்து விட்டது. வீடுகளுக்கு அருகில் என்றால் எவ்வளவு தூரம் வரை செல்ல முடியும்? என பொதுமக்கள் குழம்பி போனார்கள். இதனால் மும்பை காவல் துறை கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. காவல் துறையிடம் இருந்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை என தற்போது சமூக வலை தளங்களில் மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Sunday, August 23, 2020, 20:56 [IST]
English summary
Mumbai Traffic Police Seized Over 2,000 Vehicles For ‘Non-Permitted Travel’. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+