நடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...

நடுரோட்டில் கணவரின் கார் மீது ஏறி மனைவி சண்டை போட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...

இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படும். இடைவிடாமல் ஹாரன் அடிப்பது, இன்டிகேட்டரை ஒரு பக்கம் போட்டு விட்டு அதற்கு எதிர் திசையில் வாகனத்தை திருப்புவது உள்ளிட்ட காரணங்களால், நடுரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறுவதை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம்.

நடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...

ஆனால் மஹாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் கொஞ்சம் வித்தியாசமாக, கணவன்-மனைவிக்கு இடையே நடுரோட்டில் பயங்கர சண்டை நடந்துள்ளது. மும்பையில் உள்ள மிக முக்கியமான சாலைகளில் பெடார் ரோடும் (Peddar Road) ஒன்று. கொரோனா வைரஸ் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், இந்த சாலை பிஸியாக இருந்து வருகிறது.

நடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...

இங்கு கடந்த சனிக்கிழமை மாலை (ஜூலை 11ம் தேதி), கணவன்-மனைவிக்கு இடையே பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காரில், தனது கணவரை சேஸ் செய்து வந்துள்ளார். அவரது கணவர் ஓட்டி சென்றது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) கார் ஆகும்.

நடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...

சிறிது நேரம் துரத்திய பிறகு ஒரு வழியாக தனது கணவரின் காரை அந்த பெண் நிறுத்தி விட்டார். இரண்டு கார்களும் நடுரோட்டில் அருகருகே நிற்பதை, தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் பார்க்க முடிகிறது. அந்த பெண் தனது காரை விட்டு கீழே இறங்கி சாலைக்கு வந்த நிலையில், அவரது கணவர் காருக்கு உள்ளேதான் அமர்ந்திருந்தார்.

நடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...

அடக்க முடியாத ஆத்திரத்துடன் கத்திய அந்த பெண், தனது கணவர் ஓட்டி வந்த காரை செருப்பால் அடித்தார். மேலும் அந்த காரின் பானெட் மீது ஏறிய அந்த பெண், முன்பக்க விண்டுஷீல்டையும் தாக்கினார். இதனால் மிரண்டு போன கணவர், விண்டோவை லேசாக கீழே இறக்கியதையும், அதனையும் அந்த பெண் உடைக்க முயன்றதையும் நம்மால் வீடியோவில் பார்க்க முடிகிறது.

நடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...

இந்த சம்பவம் காரணமாக பெடார் ரோட்டில் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒரு லேனே பிளாக் ஆகும் அளவிற்கு நிலைமை மோசமாக சென்றது. இந்த சம்பவம் நடந்தபோது அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தனர். அவர்கள் போக்குவரத்தை சீராக்கும் பணியில் மும்முரம் காட்டியதை வீடியோவில் காண முடிகிறது.

நடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...

சம்பந்தப்பட்ட பெண்ணின் ஹூண்டாய் கிரெட்டா காருக்கு, போக்குவரத்து போலீசார் அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர். வாகன போக்குவரத்தை தடை செய்த காரணத்திற்காகவும், சாலையில் கொந்தளிப்பை ஏற்படுத்திய காரணத்திற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...

சம்பவ இடத்தில் ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்த ஒரு நபர் இதனை வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் காட்டு தீயாய் பரவி வருகிறது. சான்டோனில் நேக் என்பவர் யூ-டியூப்பில் வெளியிட்டுள்ள அந்த வைரல் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

சம்பந்தப்பட்ட பெண் இவ்வளவு கோபமாக நடந்து கொண்டதற்கு, அவரது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் காரில் பயணம் செய்ததே காரணம் என மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தன்று அந்த பெண்ணின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் காரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி பார்த்து விடவே, அந்த காரை விடாமல் துரத்தியுள்ளார்.

நடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...

அதன் பின்னர்தான் மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் நடந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இரு தரப்பினரிடம் இருந்தும் புகார்கள் எதுவும் வரவில்லை எனவும் போலீசார் கூறியுள்ளனர். என்ன பிரச்னையாக இருந்தாலும் அதை விசாரித்து விட்டு, மேற்கொண்டு செயல்படுவது சிறந்தது. சாலையில் இப்படி சண்டையிட்டால், அது மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...

அத்துடன் இந்த சம்பவத்தில் இரண்டு கார்கள் நடுரோட்டில் நிற்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதுபோன்று கார்களை நடுரோட்டில் நிறுத்தி வைப்பதும் ஆபத்தானதுதான். வேறு ஏதேனும் வாகனங்கள் கொஞ்சம் அதிக வேகத்தில் வந்தால் கூட, எதிர்பாராத விதமாக விபத்து நடந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai: Wife Climbs On Husband’s Car: Causes Big Traffic Jam - Viral Video. Read in Tamil
Story first published: Monday, July 13, 2020, 16:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X