அந்த சாதியை பத்தி தப்பா பேசன நடிகையா இது! கப்பல் மாதிரியான சொகுசு கார்ல ஹோட்டல் ஹோட்டலா சுத்தீட்டு இருக்காங்க!

ஹிந்தி திரையுலகை சேர்ந்த நடிகைகள் பலரும் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு தொலைக்காட்சி நடிகைகளும் கூட விதிவிலக்கு அல்ல. இதற்கு முன்முன் டட்டா (Munmun Dutta) ஒரு உதாரணம். இவர் பபிதா ஜி (Babita Ji) என்ற பெயராலும் அறியப்படுகிறார். இவர் மிகவும் விலை உயர்ந்த காரில் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மும்பை (Mumbai) நகரில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்ட்டிற்கு (Restaurant) முன்முன் டட்டா வந்து சென்றபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் (Mercedes Benz A-Class Limousine) காரில், முன்முன் டட்டா பயணம் செய்வதை நம்மால் காண முடிகிறது. இன்னும் துல்லியமாக சொல்வதென்றால், இது இந்த காரின் ஏ 200டி (A 200d) வேரியண்ட் ஆகும்.

Munmun Dutta Spotted In Mercedes Benz A-Class

இந்த வேரியண்ட்டில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 150 பிஎஸ் பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், யூஎஸ்பி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன், 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட வசதிகள் எல்லாம் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

Munmun Dutta Spotted In Mercedes Benz Car

அத்துடன் 10.25 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள ட்யூயல் டிஸ்ப்ளேக்களும் இந்த காரின் முக்கியமான வசதிகளில் ஒன்றுதான். இதில் ஒரு திரை டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொரு திரை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே (BMW 2 Series Gran Coupé) மற்றும் ஆடி ஏ3 (Audi A3) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் கருதப்படுகிறது. இதன் ஏ 200டி வேரியண்ட்டின் விலை 48.55 லட்ச ரூபாய் ஆகும்.

இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 56 லட்ச ரூபாய் வரும். இந்த பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால், இந்திய செல்வந்தர்கள் மத்தியில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் ஏ 200டி மிகவும் பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ளது.

தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் காணும் முன்முன் டட்டா, கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு, சாதிய ரீதியிலான சர்ச்சையில் சிக்கியவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எஸ்சி சமூகத்திற்கு எதிரான அவரது கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விவகாரம் பெரிதானதால், முன்முன் டட்டா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு கொண்டார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தொலைக்காட்சி நடிகை முன்முன் டட்டா பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் ஏ 200டி சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்தை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஆப்ஷன். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான கார்களில் ஒன்று என்பது இதன் கூடுதல் பலம்.

இந்த காருடன் தற்போது நாம் காணும் தொலைக்காட்சி நடிகை முன்முன் டட்டா ஒரு உணவு பிரியர் ஆவார். இதன் காரணமாக மும்பை நகரின் பல்வேறு ரெஸ்டாரெண்ட்களுக்கு செல்வதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். கடந்த காலங்களிலும் கூட அவர் ரெஸ்டாரெண்ட்களுக்கு வந்த வீடியோக்கள் வைரல் ஆகியுள்ளன. மேலும் அவர் உணவு தொழிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 4, 2024, 20:06 [IST]
English summary
Munmun dutta spotted in mercedes benz a class limousine a 200d viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+